வடக்கு மாகாண வீதி அபிவிருத்திப் பணிகளில் நிலவும் தொழில்நுட்ப ஆளணி பற்றாக்குறைக்கு விரைவான தீர்வு – அமைச்சர் மற்றும் ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல்
வடக்கு மாகாணத்தில் தற்போது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ள வீதி உள்ளிட்ட அபிவிருத்திப் பணிகளை உரிய காலத்துக்குள் நிறைவு செய்து, ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாகவும் தரமாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு தடையாக உள்ள தொழில்நுட்ப ஆளணி பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காணப்பட வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார். வடக்கு மாகாணத்தில் பல்வேறு நிதி மூலங்களின் கீழ் ஒரே நேரத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் வீதி அபிவிருத்திப் பணிகளில் நிலவும் தொழில்நுட்ப மற்றும் நடைமுறைச் […]
