பொலித்தீன் மற்றும் ஒரு நாள் பாவனைக்குரிய பிளாஸ்டிக் கப்கள் ஆகியவற்றின் பாவனையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும் – கௌரவ ஆளுநர் வலியுறுத்தினார்.
லஞ்சீற் பாவனையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் எதிர்பார்த்ததை விட மிகச் சிறப்பான முன்னேற்றம் காணப்படுவதாகத் தெரிவித்த வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், எதிர்காலத்தில் பொலித்தீன் மற்றும் ஒரு நாள் பாவனைக்குரிய பிளாஸ்டிக் கப்கள் ஆகியவற்றையும் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். அத்துடன், லஞ்சீற் பாவனையைக் கட்டுப்படுத்தும் விடயத்தில் உள்ளூராட்சி மன்றங்கள் மிகவும் சிறப்பாகச் செயலாற்றி வருவதாகவும் அவர் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். வடக்கு மாகாண நிதி, திட்டமிடல், சட்டம் ஒழுங்கு, காணி, […]

