November 2026

டிசெம்பர் 1 முதல் 100 கி.மீ.க்கு மேற்பட்ட நெடுந்தூரப் பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கம் – இ.போ.ச. தலைவர் பணிப்புரை

100 கிலோமீற்றருக்கு மேற்பட்ட தூரங்களில் சேவையில் ஈடுபடும் இலங்கைப் போக்குவரத்துச் சபை பேருந்துகள், எதிர்வரும் டிசெம்பர் முதலாம் திகதி முதல் புதிய நெடுந்தூரப் பேருந்து நிலையத்திலிருந்தே தமது சேவைகளை ஆரம்பிக்க வேண்டும் என இலங்கைப் போக்குவரத்துச் சபையின் தலைவர் சஜீவ நந்தன கனகரத்ன பணிப்புரை விடுத்தார். வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில், இலங்கைப் போக்குவரத்துச் சபையின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் யாழ்ப்பாணப் பேருந்து நிலையச் செயற்பாடுகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பான […]

டிசெம்பர் 1 முதல் 100 கி.மீ.க்கு மேற்பட்ட நெடுந்தூரப் பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கம் – இ.போ.ச. தலைவர் பணிப்புரை Read More »

எல்லாளன் கடல் சுற்றுலா, யாழ்ப்பாணப் படகுச் சுற்றுலா, பண்ணை சுற்றுவட்டம் மற்றும் கடலோர அபிவிருத்தி தொடர்பில் துறைசார் நிறுவனங்களுடன் கலந்துரையாடல்

வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையைத் திட்டமிட்ட வகையில் வளர்ச்சியடையச் செய்வதற்குத் தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்பு அவசியம் எனத் தெரிவித்த வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், முதலீட்டாளர்களை வரவேற்று, அவர்கள் எதிர்கொள்ளும் நிர்வாக மற்றும் நடைமுறைச் சிக்கல்களுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதில் அதிகாரிகள் நேர்மையான அணுகுமுறையுடன் செயற்பட வேண்டும் என வலியுறுத்தினார். யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள சுற்றுலா முதலீட்டுத் திட்டங்கள் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்தும்போது எதிர்கொள்ளப்படும் சவால்கள் தொடர்பான கலந்துரையாடல் இன்று (13.11.2026) வெள்ளிக்கிழமை காலை ஆளுநர் செயலகத்தில் ஆளுநர் தலைமையில்

எல்லாளன் கடல் சுற்றுலா, யாழ்ப்பாணப் படகுச் சுற்றுலா, பண்ணை சுற்றுவட்டம் மற்றும் கடலோர அபிவிருத்தி தொடர்பில் துறைசார் நிறுவனங்களுடன் கலந்துரையாடல் Read More »

வடக்கில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்கள் மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதிக்காத வகையில் முன்னெடுக்கப்பட வேண்டும் – ஆளுநர்

வடக்கு மாகாணத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை மேம்படுத்துவதற்கான திட்டங்களை வரவேற்பதாகத் தெரிவித்த வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், இத்திட்டங்களை முன்னெடுக்கும்போது மக்களின் வாழ்வாதாரங்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில், விவசாயம், மீன்பிடி, காணிப் பயன்பாடு, சுற்றுச்சூழல் மற்றும் உள்ளூர் சமூகங்களின் நலன்களை முழுமையாகக் கருத்திற்கொண்டு திட்டமிட வேண்டும் என வலியுறுத்தினார். வடக்கு மாகாணத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அபிவிருத்திக்கான மூலோபாய சுற்றாடல் மதிப்பீடு தொடர்பான முதலாவது வழிகாட்டல் குழுக் கூட்டம் இன்று (11.11.2026) புதன்கிழமை கொழும்பிலுள்ள மின்சக்தி அமைச்சில்

வடக்கில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்கள் மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதிக்காத வகையில் முன்னெடுக்கப்பட வேண்டும் – ஆளுநர் Read More »

மகளிர் விவகார அமைச்சினால் நலிவுற்ற தாய்மாருக்கான சத்துணவுப்பொதி வழங்கி வைக்கப்பட்டது

வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சினால் இவ் வருடத்திற்கான மாகாண நிதி ஒதுக்கீட்டிலிருந்து பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள நலிவுற்ற, தமது அன்றாட வாழ்க்கையை கொண்டு நடாத்துவதில் சிரமங்களை எதிர்நோக்கியுள்ள 3 அல்லது 3 இற்கு மேற்பட்ட பிள்ளைகளையுடைய தாய்மாருக்கான மூன்று தடவைகள் சத்துணவுப்பொதி வழங்கல் செயற்திட்டமானது முதற்கட்டமாக வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் 13 பயனாளிகளுக்கும், மன்னார் மாவட்டத்தில் 10 பயனாளிகளுக்கும், வவுனியா மாவட்டத்தில் 10 பயனாளிகளுக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 13 பயனாளிகளுக்கும், கிளிநொச்சி

மகளிர் விவகார அமைச்சினால் நலிவுற்ற தாய்மாருக்கான சத்துணவுப்பொதி வழங்கி வைக்கப்பட்டது Read More »

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தியில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் வகிபாகத்தையும் பங்களிப்பையும் வலுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்

உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து கையாளும் சிறிய மற்றும் தொடக்கநிலை உற்பத்தியாளர்களுக்கு உரிய வழிகாட்டல்களையும் ஆலோசனைகளையும் தொடர்ச்சியாக வழங்க வேண்டும். இதற்கான ஒழுங்குகளை உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களை இணைத்து முன்னெடுக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அறிவுறுத்தினார். வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தியில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் வகிபாகத்தையும் பங்களிப்பையும் வலுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் இன்று (10.11.2026) செவ்வாய்க்கிழமை ஆளுநர் செயலகத்தில் ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. கலந்துரையாடலின் ஆரம்பத்தில், வடக்கு மாகாணத்தில் இயங்கும்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தியில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் வகிபாகத்தையும் பங்களிப்பையும் வலுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் Read More »

யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைகளின் புதிய கட்டளைத் தளபதி ஆளுநருடன் சந்திப்பு

வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் மற்றும் எதிர்வரும் மழைக்காலத்தில் ஏற்படக்கூடிய இடர்களின்போது பாதுகாப்புப் படைகளின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைகளின் 36ஆவது கட்டளைத் தளபதியாகப் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள மேஜர் ஜெனரல் எம்.ஜே.ஆர்.எஸ்.மேடகொடவுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது. இச்சந்திப்பு இன்று (10.11.2026) செவ்வாய்க்கிழமை மாலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைகளின் 36ஆவது கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் எம்.ஜே.ஆர்.எஸ்.மேடகொட கடந்த நவம்பர் 2ஆம் திகதி உத்தியோகபூர்வமாகப்

யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைகளின் புதிய கட்டளைத் தளபதி ஆளுநருடன் சந்திப்பு Read More »

யாழ். நகரத் தூய்மை, அனுமதியற்ற கடைகள் அகற்றல், போக்குவரத்து மேம்பாடு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு காலக்கெடு; 2027 ஜனவரியில் முன்னேற்ற மீளாய்வு.

யாழ்ப்பாணம் நவீன சந்தைக் கட்டடத் தொகுதியில் அவதானிக்கப்பட்டுள்ள குறைபாடுகளை நிர்ணயிக்கப்பட்ட கால எல்லைக்குள் சீர்செய்யுமாறும், நீண்டகால நோக்கில் நகர அபிவிருத்தி அதிகார சபை உள்ளிட்ட தொடர்புடைய தரப்பினரின் ஆலோசனையுடன் நவீன வணிக வளாகம் (Mall) அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளைப் பரிசீலிக்குமாறும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், யாழ்ப்பாண மாநகர சபைக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். யாழ்ப்பாண நவீன சந்தைக் கட்டடத் தொகுதியின் குறைபாடுகள், நகரத் தூய்மை, அனுமதியற்ற கட்டுமானங்கள், பேருந்து நிலைய முகாமைத்துவம் உள்ளிட்ட நகர அபிவிருத்தி தொடர்பான விடயங்களை

யாழ். நகரத் தூய்மை, அனுமதியற்ற கடைகள் அகற்றல், போக்குவரத்து மேம்பாடு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு காலக்கெடு; 2027 ஜனவரியில் முன்னேற்ற மீளாய்வு. Read More »

சூப்பர் யாயா 10+ திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு – மகா போகம் 2026/2027

2026/2027 மகா போகத்திற்கான சூப்பர் யாயா 10+ திட்டத்தின் கீழ், ஆரம்ப விழா நவம்பர் 4 ஆம் தேதி மன்னார் மாவட்டம், உயிர்த்தரசங்குளம் யாயாவில் நடைபெற்றது. இதில் வடக்கு மாகாணத்தின் மேலதிக மாகாண விவசாயப் பணிப்பாளர், ஏ. பார்ஸ் ரூ கம்பெனி (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் சிரேஸ்ட பொது முகாமையாளர் மற்றும் உத்தியோகத்தர்கள், மன்னார் விவசாயத் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர். இந் நிகழ்ச்சியின் போது, மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியத்தின் (PSDG) கீழ், விவசாயத்

சூப்பர் யாயா 10+ திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு – மகா போகம் 2026/2027 Read More »

ஆளுநரின் தீபாவளி வாழ்த்துச் செய்தி.

தீபாவளி என்பது வீடுகளிலும் வீதிகளிலும் தீபங்களை ஏற்றி ஒளி பரப்புகின்ற ஒரு பண்டிகை மட்டுமல்ல. இருளை அகற்றி ஒளியை நிலைநாட்டுவது போல, அதர்மத்தை அகற்றி தர்மத்தை நிலைநாட்டுவதையும், அநீதியை ஒழித்து நீதியை நிலைபெறச் செய்வதையும் நினைவூட்டும் உயரிய திருநாளாகும். தீமையின் மீது நன்மையும், அநீதியின் மீது நீதியும் வெற்றிகொள்வதையே தீபாவளி உணர்த்துகிறது. தவறிழைத்தவர்கள் தமது செயல்களுக்கான விளைவுகளை எதிர்கொள்வதும், அநீதிக்குப் பொறுப்பானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய முறையில் தண்டிக்கப்படுவதும் நீதியின் வெற்றியாகும். இத்தகைய பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படும்போது,

ஆளுநரின் தீபாவளி வாழ்த்துச் செய்தி. Read More »

வடக்கு மாகாணத் தமிழ்ப் பாடசாலைகளுக்கு நவம்பர் 9ஆம் திகதி விசேட விடுமுறை – நவம்பர் 14 பதில் பாடசாலை நடைபெறும்

தீபாவளித் திருநாளை முன்னிட்டு, அதற்கு மறுநாளான நவம்பர் 9ஆம் திகதி திங்கட்கிழமை வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்துத் தமிழ்ப் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்கப்படுவதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அறிவித்துள்ளார். இந்த விசேட விடுமுறைக்குப் பதிலாக, நவம்பர் 14ஆம் திகதி சனிக்கிழமை பதில் பாடசாலை நடைபெறும். அதேவேளை, வடக்கு மாகாணத்திலுள்ள சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகள் நவம்பர் 9ஆம் திகதி வழமைபோன்று இயங்கும் எனவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத் தமிழ்ப் பாடசாலைகளுக்கு நவம்பர் 9ஆம் திகதி விசேட விடுமுறை – நவம்பர் 14 பதில் பாடசாலை நடைபெறும் Read More »