வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சினால் இவ் வருடத்திற்கான மாகாண நிதி ஒதுக்கீட்டிலிருந்து பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள நலிவுற்ற, தமது அன்றாட வாழ்க்கையை கொண்டு நடாத்துவதில் சிரமங்களை எதிர்நோக்கியுள்ள 3 அல்லது 3 இற்கு மேற்பட்ட பிள்ளைகளையுடைய தாய்மாருக்கான மூன்று தடவைகள் சத்துணவுப்பொதி வழங்கல் செயற்திட்டமானது முதற்கட்டமாக வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் 13 பயனாளிகளுக்கும், மன்னார் மாவட்டத்தில் 10 பயனாளிகளுக்கும், வவுனியா மாவட்டத்தில் 10 பயனாளிகளுக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 13 பயனாளிகளுக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் 10 பயனாளிகளுக்கும் சத்துணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
குறித்த செயற்திட்டமானது மகளிர் விவகார அமைச்சின் செயலாளரது வழிகாட்டலுடன் உதவிச்செயலாளர்கள் மற்றும் அமைச்சின் உத்தியோகத்தர்களது பங்குபற்றலுடன் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






