“பொறுப்புணர்வும் பணிவும் கொண்ட தலைமைத்துவப் பண்புகளைப் பாடசாலை அதிபரிடம் காண்கின்றேன்” – ஆளுநர் பாராட்டு
நயினாதீவு மகா வித்தியாலயத்தின் 80ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற அமுத விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், பாடசாலையின் 80ஆவது ஆண்டு நினைவுச் சின்னத்தைத் திறந்து வைத்ததுடன், ‘கல்யாணி’ மலரையும் வெளியிட்டு வைத்தார். பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இன்று (30.10.2026) வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற இந்நிகழ்வுக்குப் பாடசாலை அதிபர் தில்லைநாதன் நிதர்சனன் தலைமை தாங்கினார். நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர், கடலால் சூழப்பட்ட தீவில் வாழும் மக்களின் பிள்ளைகளுக்குத் தரமான […]
