தீபாவளி தினத்தை முன்னிட்டு வடக்கு மாகாணத்தில் மதுபான விற்பனை நிலையங்களை மூட மதுவரித் திணைக்களம் அறிவிப்பு – குறிப்பிட்ட உரிமங்களுக்கு விதிவிலக்கு.
தீபாவளித் திருநாளை முன்னிட்டு நாளை (08.11.2026) ஞாயிற்றுக்கிழமை வடக்கு மாகாணத்திலுள்ள உரிமம் பெற்ற மதுபான விற்பனை நிலையங்களை மூடுவதற்கு மாண்புமிகு ஜனாதிபதியின் பணிப்புக்கு அமைவாக மதுவரித் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது. வடக்கு மாகாணத்திலுள்ள இந்து அமைப்புகள் மற்றும் மதத் தலைவர்கள், தீபாவளி தினத்தன்று மாகாணம் முழுவதும் மதுபான விற்பனை நிலையங்களை மூடுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகனிடம் கோரிக்கை முன்வைத்திருந்தனர். இக்கோரிக்கையைத் தொடர்ந்து, வடக்கு மாகாண ஆளுநர் மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு […]
