August 2026

இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி, சட்டவிரோத மீன்பிடி முறைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு வடக்கு மாகாண கடற்படைத் தளபதியிடம் ஆளுநர் வலியுறுத்தல்

இந்திய மீனவர்களின் தொடர்ச்சியான அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி முறைகளால் வடக்கு மாகாண மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்ற நிலையில், அவற்றைக் கட்டுப்படுத்த கடற்படையினரின் நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்துமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கேட்டுக்கொண்டார். புதிதாகப் பொறுப்பேற்ற வட மாகாண கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் எம்.டி.கே.விஜேவர்த்தன, இன்று (12.08.2026) புதன்கிழமை மாலை ஆளுநர் செயலகத்தில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்து […]

இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி, சட்டவிரோத மீன்பிடி முறைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு வடக்கு மாகாண கடற்படைத் தளபதியிடம் ஆளுநர் வலியுறுத்தல் Read More »

யாழ்ப்பாணத்தில் தவறான முடிவெடுத்து உயிரிழக்கும் சம்பவங்களைத் தடுப்பதற்கு செயற்றிட்டம்; ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்க ஆளுநர் பணிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் அண்மைக் காலமாக தவறான முடிவெடுத்து உயிரிழக்கும் சம்பவங்கள் கவலைக்கிடமாக அதிகரித்து வருகின்ற நிலையில், அவற்றைத் தடுப்பதற்கான துரித நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிப்பதுடன், அதற்கான ஒருங்கிணைந்த கட்டமைப்புகளை மீளச் செயற்பாட்டு நிலைக்குக் கொண்டுவர விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் பணிப்புரை வழங்கினார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று (11.08.2026) மாலை நடைபெற்ற விசேட உயர்மட்ட கலந்துரையாடலின் போதே ஆளுநர் இந்தப் பணிப்புரையை வழங்கினார். கலந்துரையாடலில், யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த

யாழ்ப்பாணத்தில் தவறான முடிவெடுத்து உயிரிழக்கும் சம்பவங்களைத் தடுப்பதற்கு செயற்றிட்டம்; ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்க ஆளுநர் பணிப்பு Read More »

நியமனம் வழங்கிவைப்பு

வலிகாமம் மேற்கு பிரதேச சபையில் நீண்டகாலமாக வெற்றிடமாக காணப்பட்ட மூன்று மேற்பார்வையாளர் பதவிகளுக்கு தெரிவு செய்யப்பட்ட அலுவலர்களுக்கான நியமனக் கடிதங்களை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் இன்று (11.08.2026) செவ்வாய்க்கிழமை ஆளுநர் செயலகத்தில் வைத்து வழங்கி வைத்தார். 2026.07.01 ஆம் திகதி நடைபெற்ற நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட கணபதிப்பிள்ளை ஜெயசீலன் சுகாதார மேற்பார்வையாளராகவும், பரமேஸ்வரன் தீபன் வேலை மற்றும் வெளிக்கள மேற்பார்வையாளராகவும், துரைச்சாமி கஜன் சந்தை மேற்பார்வையாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிகழ்வில் வடக்கு மாகாண

நியமனம் வழங்கிவைப்பு Read More »

கனமழை, வெள்ள அபாயங்களை எதிர்கொள்ள உள்ளூராட்சி மன்றங்கள் முழுமையான தயார்நிலையில் இருக்க வேண்டும் – ஆளுநர் நா. வேதநாயகன் வலியுறுத்தல்

குறுகிய காலத்தில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகி வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என காலநிலை முன்னறிவிப்புகள் வெளியாகி வருகின்ற நிலையில், அதனை எதிர்கொள்ள வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் மனிதவளம், நிதி, வாகனங்கள் மற்றும் அவசரகால உபகரணங்களுடன் முழுமையான தயார்நிலையில் இருக்க வேண்டியது அவசியம் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார். வடக்கு மாகாண நிதி மற்றும் திட்டமிடல், சட்டமும் ஒழுங்கும், காணி, மின்சக்தி, வீடமைப்பு மற்றும் நிர்மாணம், சுற்றுலா, உள்ளூராட்சி, மாகாண நிர்வாகம், கிராமிய

கனமழை, வெள்ள அபாயங்களை எதிர்கொள்ள உள்ளூராட்சி மன்றங்கள் முழுமையான தயார்நிலையில் இருக்க வேண்டும் – ஆளுநர் நா. வேதநாயகன் வலியுறுத்தல் Read More »

ஸ்மார்ட் மரைன் லங்கா தனியார் நிறுவனம் தனது யாழ். கிளை அலுவலகத்தை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை செயலகத்தின் முதலாம் மாடியில் ஆரம்பித்தது.

வடக்கு மாகாணத்தின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகத்தை புதிய உயரத்துக்கு கொண்டு செல்லும் முக்கிய மைல்கல்லாக ஸ்மார்ட் மரைன் லங்கா (Smart Marine Lanka) நிறுவனத்தின் யாழ்ப்பாணக் கிளை அலுவலகம் அமைகின்றது. வடக்கு மாகாணத்தின் உற்பத்தியாளர்கள், விவசாயிகள், தொழில்முனைவோர் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு உலகளாவிய கப்பற் போக்குவரத்து மற்றும் தளபாடச் சேவைகளை நெருக்கமாகக் கொண்டு வரும் இந்த முயற்சி, வடக்கின் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும், என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். ஸ்மார்ட்

ஸ்மார்ட் மரைன் லங்கா தனியார் நிறுவனம் தனது யாழ். கிளை அலுவலகத்தை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை செயலகத்தின் முதலாம் மாடியில் ஆரம்பித்தது. Read More »

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு வடக்கு மாகாண ஆளுநரின் வாழ்த்துச் செய்தி

மாணவ, மாணவியர்களே, நாளை (10.08.2026) திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் பங்கேற்கவுள்ள வடக்கு மாகாணத்தின் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துகளையும் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன். கடந்த ஆண்டு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் வடக்கு மாகாணம் நாட்டிலேயே முதலிடத்தைப் பெற்ற பெருமையை அடைந்தது. அந்தச் சாதனை வெறுமனே ஒரு புள்ளிவிபரமல்ல, அது எமது மாணவர்களின் விடாமுயற்சிக்கும், பெற்றோரின் தியாகத்துக்கும், ஆசிரியர்களின் அர்ப்பணிப்புக்கும் கிடைத்த அங்கீகாரமாகும். இந்த ஆண்டும் அந்தப் பெருமையைத்

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு வடக்கு மாகாண ஆளுநரின் வாழ்த்துச் செய்தி Read More »

பொதுமக்களுக்கு விரைவான, வெளிப்படையான, திறன்மிக்க சேவைகளை வழங்கும் நோக்கில், உள்ளூராட்சி மன்றங்களுக்கான மின்னணுப் பணப் பரிவர்த்தனை மற்றும் சேவை முகாமைத்துவ முறைமை எனும் மென்பொருள் அறிமுகம்

மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் பிரதான கொள்கைகளில் ஒன்றான அரச சேவைகளின் டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் பொதுமக்களுக்கு விரைவான, வெளிப்படையான, திறன்மிக்க சேவைகளை வழங்கும் நோக்கை முன்னிறுத்தி, உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாகச் செயற்பாடுகளை நவீனமயப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக உள்ளூராட்சி மன்றங்களுக்கான மின்னணுப் பணப் பரிவர்த்தனை மற்றும் சேவை முகாமைத்துவ முறைமை (LGPMS – Local Government Payment Management System) எனும் மென்பொருள் அமைப்பு தொடர்பான செயல்முறைப் பயிற்சி வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து உள்ளூராட்சி

பொதுமக்களுக்கு விரைவான, வெளிப்படையான, திறன்மிக்க சேவைகளை வழங்கும் நோக்கில், உள்ளூராட்சி மன்றங்களுக்கான மின்னணுப் பணப் பரிவர்த்தனை மற்றும் சேவை முகாமைத்துவ முறைமை எனும் மென்பொருள் அறிமுகம் Read More »

வடக்கு மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்திற்கு புதிய ஆணையாளர் நியமனம்

வடக்கு மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் புதிய ஆணையாளராக திருமதி நி. தவலோஜினி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நியமனக் கடிதத்தை வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின் செயலாளர் சிவபாதசுந்தரம் சத்தியசீலன் அவர்கள் நேற்று (07.08.2026) வெள்ளிக்கிழமை ஆளுநர் செயலகத்தில் வைத்து வழங்கி வைத்தார். வடக்கு மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையாளராகப் பணியாற்றிய திருமதி கு. காஞ்சனா அவர்கள் மத்திய அரசின் சேவைக்காக விடுவிக்கப்பட்டதையடுத்து, ஏற்பட்ட வெற்றிடத்துக்கு திருமதி நி. தவலோஜினி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.  

வடக்கு மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்திற்கு புதிய ஆணையாளர் நியமனம் Read More »

கடந்த காலப் பெருமையை மீட்டெடுக்கும் வகையில் கூட்டுறவுத்துறையை மீளெழுச்சியடையச் செய்ய வேண்டும் – கௌரவ ஆளுநர் நா. வேதநாயகன் வலியுறுத்தினார்.

மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் கூட்டுறவுத்துறையைப் பலப்படுத்தும் நோக்கில் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருவதுடன், கூட்டுறவுச் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தச் சாதகமான சூழலை வடக்கு மாகாணம் முழுமையாகப் பயன்படுத்தி, கடந்த காலப் பெருமையை மீட்டெடுக்கும் வகையில் கூட்டுறவுத்துறையை மீளெழுச்சியடையச் செய்ய வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா. வேதநாயகன் வலியுறுத்தினார். வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி வங்கியின் ஏற்பாட்டில் நடைபெற்ற உணவுப் பாதுகாப்பு மாநாடு இன்று

கடந்த காலப் பெருமையை மீட்டெடுக்கும் வகையில் கூட்டுறவுத்துறையை மீளெழுச்சியடையச் செய்ய வேண்டும் – கௌரவ ஆளுநர் நா. வேதநாயகன் வலியுறுத்தினார். Read More »

வடக்கு மாகாணத்தை முன்னணிக்குக் கொண்டு வருவோம்’ என்ற உறுதியுடன் ஒவ்வொரு மாணவரும் பரீட்சை மண்டபத்துக்குள் செல்ல வேண்டும் – கௌரவ ஆளுநர்

கல்விக்காக வழங்கப்படும் உதவியே மனிதனின் வாழ்க்கையை மாற்றக்கூடிய மிகப் பெரிய உதவியாகும் என்றும், ‘எங்களால் எதுவும் முடியாது என்றில்லை, முயன்றால் எதுவும் முடியும்’ என்ற மனப்பாங்குடன் மாணவர்கள் தமது இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் என்றும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார். யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று (08.08.2026) சனிக்கிழமை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலவசக் கருத்தரங்கில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய

வடக்கு மாகாணத்தை முன்னணிக்குக் கொண்டு வருவோம்’ என்ற உறுதியுடன் ஒவ்வொரு மாணவரும் பரீட்சை மண்டபத்துக்குள் செல்ல வேண்டும் – கௌரவ ஆளுநர் Read More »