August 2026

கிளிநொச்சியில் சேகரிக்கப்பட்ட மற்றும் கழுவி எடுக்கப்பட்ட மணலைத் துரிதமாக விநியோகிக்க தீர்மானம்

மேலும் இரு இடங்களில் மண் கழுவும் பணிக்கான கேள்விக் கோரலை விரைவுபடுத்தவும் ஆளுநர் பணிப்பு கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்கனவே சேகரிக்கப்பட்டுள்ள மணலை அடுத்த வாரம் முதல் உரிய அனுமதிகளுடன் பொதுமக்களுக்குத் துரிதமாக விநியோகிப்பதற்கும், இரணைமடுக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் மேலும் சில இடங்களில் மண்ணைக் கழுவி மணல் பெற்றுக்கொள்ளும் பணிகளுக்கான கேள்விக் கோரலை விரைவாக மேற்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் கிளிநொச்சி மாவட்டத்தில் மணல் மற்றும் கிரவல் அகழ்வு, விநியோகம் தொடர்பான […]

கிளிநொச்சியில் சேகரிக்கப்பட்ட மற்றும் கழுவி எடுக்கப்பட்ட மணலைத் துரிதமாக விநியோகிக்க தீர்மானம் Read More »

வேகமாக மாறிவரும் சூழலுக்கு ஏற்ப எம்மைத் தகவமைத்துக்கொள்ள பயிற்சிகள் அவசியம்; அதன் பலன் பணியில் வெளிப்பட வேண்டும் – ஆளுநர்

வேகமாக மாறிவரும் சூழலுக்கு ஏற்ப எம்மைத் தகவமைத்துக்கொண்டு, அந்த மாற்றங்களுக்குள் எம்மைத் தக்க வைத்துக்கொள்வதற்கு தொடர்ச்சியான பயிற்சிகள் அவசியம். ஒரு மனிதனின் அறிவிலும் நடத்தையிலும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கிய கருவியாகப் பயிற்சி அமைகின்றது. எனவே, நீங்கள் பெற்ற பயிற்சியின் உண்மையான பலன் உங்கள் பணியில் வெளிப்பட வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் பிரதிப் பிரதம செயலாளர் – ஆளணி மற்றும் பயிற்சிப் பிரிவின் கீழ் இயங்கும் முகாமைத்துவ

வேகமாக மாறிவரும் சூழலுக்கு ஏற்ப எம்மைத் தகவமைத்துக்கொள்ள பயிற்சிகள் அவசியம்; அதன் பலன் பணியில் வெளிப்பட வேண்டும் – ஆளுநர் Read More »

மக்களின் தேவைகளை நிறைவேற்ற மாகாண நிர்வாகத்தின் அனைத்து அங்கங்களும் ஒரே திசையில் பயணிக்க வேண்டும் – ஆளுநர் நா. வேதநாயகன்

வடக்கு மாகாணத்தின் மக்கள் தேவைகளை திறம்பட நிறைவேற்றுவதற்கு மாகாண நிர்வாகத்தின் ஒவ்வொரு அங்கமும் ஒரே திசையிலும் ஒரே நோக்கத்துடனும் செயற்பட வேண்டும். தனிப்பட்ட கருத்து வேறுபாடுகள், தன்முனைப்பு மற்றும் அதிகாரப் போட்டிகளுக்கு இடமளிக்காமல், அனைவரும் மக்களுக்காக ஒரே அணியாகச் செயற்பட வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் ஆளணி மற்றும் பயிற்சிப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிர்வாகச் சட்டம் தொடர்பான பயிற்சிப் பட்டறை இன்று (18.08.2026) செவ்வாய்க்கிழமை கைதடியில்

மக்களின் தேவைகளை நிறைவேற்ற மாகாண நிர்வாகத்தின் அனைத்து அங்கங்களும் ஒரே திசையில் பயணிக்க வேண்டும் – ஆளுநர் நா. வேதநாயகன் Read More »

கூட்டுறவு பணியாளர்களின் தகைமை மற்றும் சம்பள மீளாய்வு தொடர்பில் விரிவான கலந்துரையாடல்

வடக்கு மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவுக்கும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் இடையிலான முன்னேற்றக் கலந்துரையாடல் இன்று (17.08.2026) திங்கட்கிழமை மாலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது, முன்னர் நடைபெற்ற கலந்துரையாடலில் ஆராயப்பட்ட விடயங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அவற்றின் முன்னேற்றம் குறித்து விரிவாக மீளாய்வு செய்யப்பட்டது. மேலும், வடக்கு மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவால் தயாரிக்கப்பட்டுள்ள கூட்டுறவு பணியாளர்களின் தகைமை மீளாய்வு வரைவு தொடர்பிலும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. கூட்டுறவு பணியாளர்களின் தகைமைகள்

கூட்டுறவு பணியாளர்களின் தகைமை மற்றும் சம்பள மீளாய்வு தொடர்பில் விரிவான கலந்துரையாடல் Read More »

ஆளுநர் தலைமையில் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்கான முன்னாயத்தக் கலந்துரையாடல்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இம்முறை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள நிகழ்வுகளை ஒழுங்குமுறையுடன் முன்னெடுப்பது தொடர்பான முன்னாயத்தக் கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் இன்று (17.08.2026) திங்கட்கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. காணாமல் ஆட்கள் பற்றிய அலுவலகத்தால் இவ்வாண்டு சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் மற்றும் மாத்தறை மாவட்டங்களில் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைபெறவுள்ள நிகழ்வு தொடர்பிலும், அதனுடன்

ஆளுநர் தலைமையில் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்கான முன்னாயத்தக் கலந்துரையாடல் Read More »

அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கௌரவம் மற்றும் தொழில்சார் நலன்களைப் பாதித்துள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் சுயாதீனமானதும் பக்கச்சார்பற்றதுமான விசாரணையை முன்னெடுப்பதற்கான சுயாதீன விசாரணைக் குழு நியமிக்கப்படும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் உறுதியளித்தார்.

வடக்கு மாகாண சபை அலுவலக வளாகத்துக்கு முன்பாக இன்று (17.08.2026) திங்கட்கிழமை காலை போராட்டத்தில் ஈடுபட்ட வடக்கு மாகாண தொழிற்சங்கங்களின் சம்மேளனப் பிரதிநிதிகள், அதனைத் தொடர்ந்து வடக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்து தமது மனுவை கையளித்தனர். இவர்களில் ஐந்து பிரதிநிதிகளுக்கு ஆளுநரை நேரில் சந்தித்து தமது கருத்துக்களை முன்வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. அவர்கள் கையளித்த மனுவில், அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கௌரவத்தையும் தொழில்சார் நலன்களையும் பாதித்ததாகக் குறிப்பிடப்படும் சம்பவம் தொடர்பில் சுயாதீனமானதும் பக்கச்சார்பற்றதுமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும்,

அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கௌரவம் மற்றும் தொழில்சார் நலன்களைப் பாதித்துள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் சுயாதீனமானதும் பக்கச்சார்பற்றதுமான விசாரணையை முன்னெடுப்பதற்கான சுயாதீன விசாரணைக் குழு நியமிக்கப்படும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் உறுதியளித்தார். Read More »

யாழ்ப்பாணத்தின் தனித்துவமான உணவுச் சுவையை ருசிக்க சுற்றுலாவிகளை வரவேற்கின்றோம்; உணவுத் திருவிழா முதலீட்டு வாய்ப்புகளுக்கான அழைப்பாகவும் அமைகின்றது – ஆளுநர்

யாழ்ப்பாணத்துக்கென்று தனித்துவமான உணவும் தனித்துவமான சுவையும் இருக்கின்றன. அந்தத் தனித்துவத்தை ருசிப்பதற்காக சுற்றுலாவிகளை நாம் வரவேற்கின்றோம். அதனை ஊக்குவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த உணவுத் திருவிழா வெறுமனே ஒரு கொண்டாட்டமாக நின்றுவிடாது, யாழ்ப்பாணத்தின் சுற்றுலாத்துறையில் முதலீடு செய்வதற்கான மறைமுக அழைப்பையும் முதலீட்டாளர்களுக்கு விடுத்து நிற்கின்றது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண சுற்றுலா அபிவிருத்திப் பணியகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘யாழ்ப்பாணத்துக்கு வருகை தாருங்கள் 2026 – கலாசார மற்றும் உணவுத்

யாழ்ப்பாணத்தின் தனித்துவமான உணவுச் சுவையை ருசிக்க சுற்றுலாவிகளை வரவேற்கின்றோம்; உணவுத் திருவிழா முதலீட்டு வாய்ப்புகளுக்கான அழைப்பாகவும் அமைகின்றது – ஆளுநர் Read More »

வடக்கு மாகாணத்தின் மொத்த தேசிய உற்பத்திப் பங்களிப்பை 4.5 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக உயர்த்த இலக்கு – ஆளுநர் நா. வேதநாயகன்

வடக்கு மாகாணத்தின் மொத்த தேசிய உற்பத்திக்கான பங்களிப்பு தற்போது 4.5 சதவீதமாகக் காணப்படுகின்ற நிலையில், அதனை 10 சதவீதமாக உயர்த்தும் இலக்கை நாம் நிர்ணயித்துள்ளோம். இந்த இலக்கை விரைவாக எட்டுவதற்கு தொழில் முயற்சியாளர்களின் பேராதரவும், விடாமுயற்சியும், புதியதைச் செய்ய வேண்டும் என்ற ஆர்வமும் எமக்குத் தேவை. தற்போதைய அரசாங்கத்தின் காலப்பகுதியில் எமக்குக் கிடைத்துள்ள சாதகமான நிலைப்பாட்டை முழுமையாகப் பயன்படுத்தி இந்த இலக்கை எட்டுவோம் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண தொழிற்துறைத்

வடக்கு மாகாணத்தின் மொத்த தேசிய உற்பத்திப் பங்களிப்பை 4.5 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக உயர்த்த இலக்கு – ஆளுநர் நா. வேதநாயகன் Read More »

“உள்ளூராட்சி மன்றங்கள் மீதான எனது நடவடிக்கைகள் எவரையும் இலக்காகக் கொண்டவை அல்ல; மக்களின் நம்பிக்கையைப் பாதுகாப்பதே ஒரே நோக்கம்” – ஆளுநர்

வடக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பில் மேற்கொண்ட நடவடிக்கைகள் எந்தவொரு தனிநபரையும், அரசியல் கட்சியையும் அல்லது எந்தவொரு உள்ளூராட்சி மன்றத்தையும் இலக்காகக் கொண்டவை அல்ல எனத் தெரிவித்த வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், மக்கள் ஒப்படைத்துள்ள பொறுப்பையும், நிர்வாகத்தின் மீதான அவர்களது நம்பிக்கையையும் பாதுகாப்பதே தமது நடவடிக்கைகளின் ஒரே நோக்கம் என வலியுறுத்தினார். ஒரு நல்ல நிர்வாகியின் கடமை எப்போதும் பாராட்டைப் பெறுவது அல்ல, மக்களின் நீண்டகால நலனுக்காகத் தேவையானபோது கடினமான முடிவுகளையும் எடுப்பதாகும் எனவும்

“உள்ளூராட்சி மன்றங்கள் மீதான எனது நடவடிக்கைகள் எவரையும் இலக்காகக் கொண்டவை அல்ல; மக்களின் நம்பிக்கையைப் பாதுகாப்பதே ஒரே நோக்கம்” – ஆளுநர் Read More »

“பல மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்படும் நிலத்தடி நீர்ப் பாதுகாப்புத் திட்டங்களின் நோக்கத்தை சிதைக்கும் வகையிலான கருத்துக்களுக்கு இடமளிக்கக் கூடாது” – வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன்

நிலத்தடி நீர்வளத்தைப் பாதுகாக்கும் நோக்கில் பல மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்படும் நீண்டகால அபிவிருத்தித் திட்டங்களின் அடிப்படை நோக்கத்தையே பாதிக்கும் வகையிலான கருத்துக்களும் கோரிக்கைகளும் முன்வைக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். இயற்கை வளங்களைப் பாதுகாப்பது குறுகியகால தேவைகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அல்லாது, அறிவியல் ஆதாரங்கள், நீண்டகால திட்டமிடல் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலனை முன்னிறுத்திய பொறுப்புணர்வுடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். யாழ்ப்பாணக் குடாநாட்டில் நிலத்தடி

“பல மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்படும் நிலத்தடி நீர்ப் பாதுகாப்புத் திட்டங்களின் நோக்கத்தை சிதைக்கும் வகையிலான கருத்துக்களுக்கு இடமளிக்கக் கூடாது” – வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் Read More »