August 2026

அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கௌரவம் மற்றும் தொழில்சார் நலன்களைப் பாதித்துள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் சுயாதீனமானதும் பக்கச்சார்பற்றதுமான விசாரணையை முன்னெடுப்பதற்கான சுயாதீன விசாரணைக் குழு நியமிக்கப்படும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் உறுதியளித்தார்.

வடக்கு மாகாண சபை அலுவலக வளாகத்துக்கு முன்பாக இன்று (17.08.2026) திங்கட்கிழமை காலை போராட்டத்தில் ஈடுபட்ட வடக்கு மாகாண தொழிற்சங்கங்களின் சம்மேளனப் பிரதிநிதிகள், அதனைத் தொடர்ந்து வடக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்து தமது மனுவை கையளித்தனர். இவர்களில் ஐந்து பிரதிநிதிகளுக்கு ஆளுநரை நேரில் சந்தித்து தமது கருத்துக்களை முன்வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. அவர்கள் கையளித்த மனுவில், அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கௌரவத்தையும் தொழில்சார் நலன்களையும் பாதித்ததாகக் குறிப்பிடப்படும் சம்பவம் தொடர்பில் சுயாதீனமானதும் பக்கச்சார்பற்றதுமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், […]

அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கௌரவம் மற்றும் தொழில்சார் நலன்களைப் பாதித்துள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் சுயாதீனமானதும் பக்கச்சார்பற்றதுமான விசாரணையை முன்னெடுப்பதற்கான சுயாதீன விசாரணைக் குழு நியமிக்கப்படும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் உறுதியளித்தார். Read More »

யாழ்ப்பாணத்தின் தனித்துவமான உணவுச் சுவையை ருசிக்க சுற்றுலாவிகளை வரவேற்கின்றோம்; உணவுத் திருவிழா முதலீட்டு வாய்ப்புகளுக்கான அழைப்பாகவும் அமைகின்றது – ஆளுநர்

யாழ்ப்பாணத்துக்கென்று தனித்துவமான உணவும் தனித்துவமான சுவையும் இருக்கின்றன. அந்தத் தனித்துவத்தை ருசிப்பதற்காக சுற்றுலாவிகளை நாம் வரவேற்கின்றோம். அதனை ஊக்குவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த உணவுத் திருவிழா வெறுமனே ஒரு கொண்டாட்டமாக நின்றுவிடாது, யாழ்ப்பாணத்தின் சுற்றுலாத்துறையில் முதலீடு செய்வதற்கான மறைமுக அழைப்பையும் முதலீட்டாளர்களுக்கு விடுத்து நிற்கின்றது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண சுற்றுலா அபிவிருத்திப் பணியகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘யாழ்ப்பாணத்துக்கு வருகை தாருங்கள் 2026 – கலாசார மற்றும் உணவுத்

யாழ்ப்பாணத்தின் தனித்துவமான உணவுச் சுவையை ருசிக்க சுற்றுலாவிகளை வரவேற்கின்றோம்; உணவுத் திருவிழா முதலீட்டு வாய்ப்புகளுக்கான அழைப்பாகவும் அமைகின்றது – ஆளுநர் Read More »

வடக்கு மாகாணத்தின் மொத்த தேசிய உற்பத்திப் பங்களிப்பை 4.5 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக உயர்த்த இலக்கு – ஆளுநர் நா. வேதநாயகன்

வடக்கு மாகாணத்தின் மொத்த தேசிய உற்பத்திக்கான பங்களிப்பு தற்போது 4.5 சதவீதமாகக் காணப்படுகின்ற நிலையில், அதனை 10 சதவீதமாக உயர்த்தும் இலக்கை நாம் நிர்ணயித்துள்ளோம். இந்த இலக்கை விரைவாக எட்டுவதற்கு தொழில் முயற்சியாளர்களின் பேராதரவும், விடாமுயற்சியும், புதியதைச் செய்ய வேண்டும் என்ற ஆர்வமும் எமக்குத் தேவை. தற்போதைய அரசாங்கத்தின் காலப்பகுதியில் எமக்குக் கிடைத்துள்ள சாதகமான நிலைப்பாட்டை முழுமையாகப் பயன்படுத்தி இந்த இலக்கை எட்டுவோம் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண தொழிற்துறைத்

வடக்கு மாகாணத்தின் மொத்த தேசிய உற்பத்திப் பங்களிப்பை 4.5 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக உயர்த்த இலக்கு – ஆளுநர் நா. வேதநாயகன் Read More »

“உள்ளூராட்சி மன்றங்கள் மீதான எனது நடவடிக்கைகள் எவரையும் இலக்காகக் கொண்டவை அல்ல; மக்களின் நம்பிக்கையைப் பாதுகாப்பதே ஒரே நோக்கம்” – ஆளுநர்

வடக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பில் மேற்கொண்ட நடவடிக்கைகள் எந்தவொரு தனிநபரையும், அரசியல் கட்சியையும் அல்லது எந்தவொரு உள்ளூராட்சி மன்றத்தையும் இலக்காகக் கொண்டவை அல்ல எனத் தெரிவித்த வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், மக்கள் ஒப்படைத்துள்ள பொறுப்பையும், நிர்வாகத்தின் மீதான அவர்களது நம்பிக்கையையும் பாதுகாப்பதே தமது நடவடிக்கைகளின் ஒரே நோக்கம் என வலியுறுத்தினார். ஒரு நல்ல நிர்வாகியின் கடமை எப்போதும் பாராட்டைப் பெறுவது அல்ல, மக்களின் நீண்டகால நலனுக்காகத் தேவையானபோது கடினமான முடிவுகளையும் எடுப்பதாகும் எனவும்

“உள்ளூராட்சி மன்றங்கள் மீதான எனது நடவடிக்கைகள் எவரையும் இலக்காகக் கொண்டவை அல்ல; மக்களின் நம்பிக்கையைப் பாதுகாப்பதே ஒரே நோக்கம்” – ஆளுநர் Read More »

“பல மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்படும் நிலத்தடி நீர்ப் பாதுகாப்புத் திட்டங்களின் நோக்கத்தை சிதைக்கும் வகையிலான கருத்துக்களுக்கு இடமளிக்கக் கூடாது” – வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன்

நிலத்தடி நீர்வளத்தைப் பாதுகாக்கும் நோக்கில் பல மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்படும் நீண்டகால அபிவிருத்தித் திட்டங்களின் அடிப்படை நோக்கத்தையே பாதிக்கும் வகையிலான கருத்துக்களும் கோரிக்கைகளும் முன்வைக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். இயற்கை வளங்களைப் பாதுகாப்பது குறுகியகால தேவைகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அல்லாது, அறிவியல் ஆதாரங்கள், நீண்டகால திட்டமிடல் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலனை முன்னிறுத்திய பொறுப்புணர்வுடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். யாழ்ப்பாணக் குடாநாட்டில் நிலத்தடி

“பல மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்படும் நிலத்தடி நீர்ப் பாதுகாப்புத் திட்டங்களின் நோக்கத்தை சிதைக்கும் வகையிலான கருத்துக்களுக்கு இடமளிக்கக் கூடாது” – வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் Read More »

இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி, சட்டவிரோத மீன்பிடி முறைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு வடக்கு மாகாண கடற்படைத் தளபதியிடம் ஆளுநர் வலியுறுத்தல்

இந்திய மீனவர்களின் தொடர்ச்சியான அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி முறைகளால் வடக்கு மாகாண மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்ற நிலையில், அவற்றைக் கட்டுப்படுத்த கடற்படையினரின் நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்துமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கேட்டுக்கொண்டார். புதிதாகப் பொறுப்பேற்ற வட மாகாண கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் எம்.டி.கே.விஜேவர்த்தன, இன்று (12.08.2026) புதன்கிழமை மாலை ஆளுநர் செயலகத்தில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்து

இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி, சட்டவிரோத மீன்பிடி முறைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு வடக்கு மாகாண கடற்படைத் தளபதியிடம் ஆளுநர் வலியுறுத்தல் Read More »

யாழ்ப்பாணத்தில் தவறான முடிவெடுத்து உயிரிழக்கும் சம்பவங்களைத் தடுப்பதற்கு செயற்றிட்டம்; ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்க ஆளுநர் பணிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் அண்மைக் காலமாக தவறான முடிவெடுத்து உயிரிழக்கும் சம்பவங்கள் கவலைக்கிடமாக அதிகரித்து வருகின்ற நிலையில், அவற்றைத் தடுப்பதற்கான துரித நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிப்பதுடன், அதற்கான ஒருங்கிணைந்த கட்டமைப்புகளை மீளச் செயற்பாட்டு நிலைக்குக் கொண்டுவர விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் பணிப்புரை வழங்கினார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று (11.08.2026) மாலை நடைபெற்ற விசேட உயர்மட்ட கலந்துரையாடலின் போதே ஆளுநர் இந்தப் பணிப்புரையை வழங்கினார். கலந்துரையாடலில், யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த

யாழ்ப்பாணத்தில் தவறான முடிவெடுத்து உயிரிழக்கும் சம்பவங்களைத் தடுப்பதற்கு செயற்றிட்டம்; ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்க ஆளுநர் பணிப்பு Read More »

நியமனம் வழங்கிவைப்பு

வலிகாமம் மேற்கு பிரதேச சபையில் நீண்டகாலமாக வெற்றிடமாக காணப்பட்ட மூன்று மேற்பார்வையாளர் பதவிகளுக்கு தெரிவு செய்யப்பட்ட அலுவலர்களுக்கான நியமனக் கடிதங்களை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் இன்று (11.08.2026) செவ்வாய்க்கிழமை ஆளுநர் செயலகத்தில் வைத்து வழங்கி வைத்தார். 2026.07.01 ஆம் திகதி நடைபெற்ற நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட கணபதிப்பிள்ளை ஜெயசீலன் சுகாதார மேற்பார்வையாளராகவும், பரமேஸ்வரன் தீபன் வேலை மற்றும் வெளிக்கள மேற்பார்வையாளராகவும், துரைச்சாமி கஜன் சந்தை மேற்பார்வையாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிகழ்வில் வடக்கு மாகாண

நியமனம் வழங்கிவைப்பு Read More »

கனமழை, வெள்ள அபாயங்களை எதிர்கொள்ள உள்ளூராட்சி மன்றங்கள் முழுமையான தயார்நிலையில் இருக்க வேண்டும் – ஆளுநர் நா. வேதநாயகன் வலியுறுத்தல்

குறுகிய காலத்தில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகி வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என காலநிலை முன்னறிவிப்புகள் வெளியாகி வருகின்ற நிலையில், அதனை எதிர்கொள்ள வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் மனிதவளம், நிதி, வாகனங்கள் மற்றும் அவசரகால உபகரணங்களுடன் முழுமையான தயார்நிலையில் இருக்க வேண்டியது அவசியம் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார். வடக்கு மாகாண நிதி மற்றும் திட்டமிடல், சட்டமும் ஒழுங்கும், காணி, மின்சக்தி, வீடமைப்பு மற்றும் நிர்மாணம், சுற்றுலா, உள்ளூராட்சி, மாகாண நிர்வாகம், கிராமிய

கனமழை, வெள்ள அபாயங்களை எதிர்கொள்ள உள்ளூராட்சி மன்றங்கள் முழுமையான தயார்நிலையில் இருக்க வேண்டும் – ஆளுநர் நா. வேதநாயகன் வலியுறுத்தல் Read More »

ஸ்மார்ட் மரைன் லங்கா தனியார் நிறுவனம் தனது யாழ். கிளை அலுவலகத்தை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை செயலகத்தின் முதலாம் மாடியில் ஆரம்பித்தது.

வடக்கு மாகாணத்தின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகத்தை புதிய உயரத்துக்கு கொண்டு செல்லும் முக்கிய மைல்கல்லாக ஸ்மார்ட் மரைன் லங்கா (Smart Marine Lanka) நிறுவனத்தின் யாழ்ப்பாணக் கிளை அலுவலகம் அமைகின்றது. வடக்கு மாகாணத்தின் உற்பத்தியாளர்கள், விவசாயிகள், தொழில்முனைவோர் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு உலகளாவிய கப்பற் போக்குவரத்து மற்றும் தளபாடச் சேவைகளை நெருக்கமாகக் கொண்டு வரும் இந்த முயற்சி, வடக்கின் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும், என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். ஸ்மார்ட்

ஸ்மார்ட் மரைன் லங்கா தனியார் நிறுவனம் தனது யாழ். கிளை அலுவலகத்தை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை செயலகத்தின் முதலாம் மாடியில் ஆரம்பித்தது. Read More »