August 2026

வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பான மீளாய்வு கூட்டம், ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது.

வடக்கு மாகாண சுகாதாரம், சுதேச மருத்துவம், நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் 2026ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் செயற்திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்யும் மாதாந்தக் கூட்டம், வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் இன்று (04.08.2026) செவ்வாய்க்கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம், சுதேச மருத்துவத் திணைக்களம் மற்றும் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் ஆகியவற்றின் […]

வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பான மீளாய்வு கூட்டம், ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது. Read More »

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

வடக்கு மாகாணத்தில் 2026ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெற்செய்கை எதிர்பார்க்கப்பட்ட இலக்கைத் தாண்டி வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளதுடன், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் உணவுப் பாதுகாப்பையும் மேலும் வலுப்படுத்தும் நோக்கில் மூன்றாம் போகச் செய்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் தெரிவித்தார். சிறுபோகத்தில் இலக்கிடப்பட்ட பரப்பளவை விட அதிகளவான நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதுடன், கிடைக்கப்பெற்றுள்ள நீர்வளத்தை அறிவியல் அடிப்படையில் முகாமைத்துவம் செய்து மூன்றாம் போகச் செய்கைக்குத் தேவையான ஏற்பாடுகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டிருப்பது வடக்கு மாகாண விவசாயத் துறையின் குறிப்பிடத்தக்க

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. Read More »

சுகாதாரப் பணி உதவியாளர் பதவிக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கான நேர்முகத் தேர்வுகள் பண்ணையில் அமைந்துள்ள சுகாதார கிராமத்தில் ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றன

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் கீழுள்ள வைத்தியசாலைகள் மற்றும் நிறுவனங்களில் வெற்றிடமாகக் காணப்படும் சுகாதாரப் பணி உதவியாளர் (தரம் III) பதவிக்கான 852 வெற்றிடங்களில், முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் அனுமதிக்கமைவாக 300 வெற்றிடங்களை நிரப்புவதற்கான கட்டமைக்கப்பட்ட நேர்முகத் தேர்வுகள் இன்று திங்கட்கிழமை (03.08.2026) பண்ணையில் அமைந்துள்ள சுகாதார கிராமத்தில் மிகச் சிறப்பாக ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றன. இன்று முதல் எதிர்வரும் 21.08.2026 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள இத்தேர்வு நடவடிக்கைகளுக்காக ஆறு விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. தினமும்

சுகாதாரப் பணி உதவியாளர் பதவிக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கான நேர்முகத் தேர்வுகள் பண்ணையில் அமைந்துள்ள சுகாதார கிராமத்தில் ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றன Read More »

சமூகப் பிறழ்வுகளிலிருந்து இளைய தலைமுறையைப் பாதுகாக்க வேண்டுமாயின் , அவர்களுக்குக் கலைகள் மற்றும் விளையாட்டுக்கள் ஊடான சிறந்த மாற்றுப் பாதையை உருவாக்கிக் கொடுக்க வேண்டும், – கௌரவ ஆளுநர்

ஒரு சமூகத்தின் உண்மையான செல்வம் அதன் கட்டடங்களிலோ பொருளாதாரத்திலோ இல்லை. அது எமது பாரம்பரியம், பண்பாடு, கலைகள் மற்றும் வீர வரலாற்றில்தான் தங்கியுள்ளது. தொழில்நுட்பமும் செயற்கை நுண்ணறிவும் ஆதிக்கம் செலுத்தும் இன்றைய அதிவேக உலகில், எமது வேர்கள் மங்கிவிட்டால் நாம் முன்னேற்றமடைந்தாலும் எமது அடையாளத்தை இழக்க நேரிடும். கல்வியால் மனிதனின் அறிவு வளரும், ஆனால் வாழ்க்கையை முழுமைப்படுத்துவது கல்வி மட்டுமல்ல, அறிவுடனான பண்பு, திறமையுடனான ஒழுக்கம், கல்வியுடனான தலைமைத்துவம் ஆகியன இணைந்தால்தான் ஒரு முழுமையான மனிதன் உருவாகின்றான்.

சமூகப் பிறழ்வுகளிலிருந்து இளைய தலைமுறையைப் பாதுகாக்க வேண்டுமாயின் , அவர்களுக்குக் கலைகள் மற்றும் விளையாட்டுக்கள் ஊடான சிறந்த மாற்றுப் பாதையை உருவாக்கிக் கொடுக்க வேண்டும், – கௌரவ ஆளுநர் Read More »

வேலனை பிரதேச செயலகப் பிரிவில் மண்கும்பான் வெள்ளக்கடற்கரை ஜும்ஆ பள்ளிவாசலின் மீள் கட்டுமானப் பணிக்கு, அடிக்கல் நடும் விழா இடம்பெற்றது.

யாழ்ப்பாணம், வேலனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மண்கும்பான் வெள்ளக்கடற்கரை ஜும்ஆ பள்ளிவாசலின் மீள் கட்டுமானப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் அடிக்கல் நடும் விழா இன்று (02.08.2026) ஞாயிற்றுக்கிழமை காலை பள்ளிவாசல் வளாகத்தில் சிறப்பாக இடம்பெற்றது. சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கௌரவ முனீர் முனவ்பர் அவர்களின் பிரதம பங்குபற்றலுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் பிரதிநிதியாக ஆளுநரின் செயலாளர் சிவபாதசுந்தரம் சத்தியசீலன் அவர்கள் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தார். வெள்ளக்கடற்கரை

வேலனை பிரதேச செயலகப் பிரிவில் மண்கும்பான் வெள்ளக்கடற்கரை ஜும்ஆ பள்ளிவாசலின் மீள் கட்டுமானப் பணிக்கு, அடிக்கல் நடும் விழா இடம்பெற்றது. Read More »

கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்துக் கல்வி வலயங்களிலும் 54 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களின் சுயவிவரக் கோவைகளை இற்றைப்படுத்தும் நடவடிக்கை நிறைவு

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் நேரடி அறிவுறுத்தல் மற்றும் வழிகாட்டுதலுக்கு அமைவாக, வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்துக் கல்வி வலயங்களிலும் 54 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களின் தனிப்பட்ட சுயவிவரக் கோவைகளை இற்றைப்படுத்தும் நடமாடும் சேவை இன்று சனிக்கிழமை (01.08.2026) நிறைவடைந்துள்ளது. இத்திட்டத்தினூடாக 406 ஆசிரியர்கள் பயன்பெற்றுள்ளதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் ஓய்வுபெறும் ஆசிரியர்கள் உரிய காலப்பகுதிக்குள் தமக்கான ஓய்வூதியப் பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியாமையால் பல்வேறு சிரமங்களை

கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்துக் கல்வி வலயங்களிலும் 54 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களின் சுயவிவரக் கோவைகளை இற்றைப்படுத்தும் நடவடிக்கை நிறைவு Read More »

கட்டாக்காலி நாய்களால் ஏற்படும் விபத்துகள், சுகாதாரச் சீர்கேடுகளுக்குத் தீர்வுகாணும் நோக்கில், கௌரவ ஆளுநரின் நேரடி ஆலோசனை, வழிகாட்டலுக்கு அமைய, மாகாணம் தழுவிய ரீதியில் நாய்களுக்கான விசேட கருத்தடைச் செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வீதியோரங்களில் பெருகிவரும் கட்டாக்காலி நாய்களால் ஏற்படும் விபத்துகள் மற்றும் பல்வேறு சுகாதாரச் சீர்கேடுகளுக்குத் தீர்வுகாணும் நோக்கில், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் நேரடி ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கு அமைவாக, மாகாணம் தழுவிய ரீதியில் மூன்று ஆண்டுகளுக்கான நாய்களுக்கான விசேட கருத்தடைச் செயற்றிட்டத்தின் இந்த ஆண்டுக்குரிய செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 7,606 நாய்களுக்குக் கருத்தடை சிகிச்சை செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண விவசாய அமைச்சின் கீழான கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களமும், உள்ளூராட்சி

கட்டாக்காலி நாய்களால் ஏற்படும் விபத்துகள், சுகாதாரச் சீர்கேடுகளுக்குத் தீர்வுகாணும் நோக்கில், கௌரவ ஆளுநரின் நேரடி ஆலோசனை, வழிகாட்டலுக்கு அமைய, மாகாணம் தழுவிய ரீதியில் நாய்களுக்கான விசேட கருத்தடைச் செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. Read More »

வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கு, கௌரவ ஆளுநர் களவிஜயமொன்றை மேற்கொண்டார்.

கிளிநொச்சியில் அமைந்துள்ள வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கு, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (31.07.2026) திடீர் கண்காணிப்பு பயணமொன்றை மேற்கொண்டார். இந்தப் பயணத்தின்போது அதிகார சபைக்குச் சென்ற கௌரவ ஆளுநர் அவர்கள், அங்கு பணியாற்றும் உத்தியோகத்தர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாகச் சந்தித்துக் கலந்துரையாடியதோடு, அவர்கள் தமது கடமையின்போது எதிர்கொள்ளும் நடைமுறைப் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டார். இந்தக் கண்காணிப்பு பயணத்தின்போது, வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார

வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கு, கௌரவ ஆளுநர் களவிஜயமொன்றை மேற்கொண்டார். Read More »

மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்கள், மக்களுக்குச் சொந்தமான காணிகள் அவர்களிடம் கையளிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றார். – கௌரவ ஆளுநர் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல், கேப்பாபிலவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் சில காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கௌரவ பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர தெரிவித்தார். முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இராணுவப் பயன்பாட்டில் உள்ள காணிகளைச் சிவில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல், முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (31.07.2026) நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் வரவேற்புரையாற்றிய முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் அ.உமாமகேஸ்வரன், ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற

மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்கள், மக்களுக்குச் சொந்தமான காணிகள் அவர்களிடம் கையளிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றார். – கௌரவ ஆளுநர் தெரிவித்தார். Read More »

யாழ். மாவட்டத்தில் பல்வேறு காரணங்களால் தாமதமடைந்துள்ள முதலீட்டுத் திட்டங்கள் தொடர்பிலான கலந்துரையாடல் இடம்பெற்றது.

‘எமது பிரதேசத்தின் அபிவிருத்திக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் முதலீடுகள் மிகவும் அவசியமானவையாகும். முதலீட்டாளர்கள் உரிய காலப்பகுதிக்குள் திணைக்களங்களின் அனுமதிகளைப் பெற்றுக்கொள்வதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். ஒரு திணைக்களம் அனுமதி வழங்கினாலும், மற்றுமொரு திணைக்களத்தின் அனுமதி கிடைக்கப்பெற தாமதமாவதால் முதலீட்டாளர்கள் விரக்தியடைகின்றனர். இது தொடர்பில் அனைத்துத் திணைக்களங்களும் விசேட கவனம் செலுத்துவதோடு, தேவைப்படின் நிபந்தனைகளுடனாவது அனுமதிகளை வழங்க முன்வர வேண்டும். அதேவேளை, முதலீட்டாளர்களும் நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே தங்களது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும், என கடற்றொழில், நீரியல்

யாழ். மாவட்டத்தில் பல்வேறு காரணங்களால் தாமதமடைந்துள்ள முதலீட்டுத் திட்டங்கள் தொடர்பிலான கலந்துரையாடல் இடம்பெற்றது. Read More »