நியமனம் வழங்கிவைப்பு

வலிகாமம் மேற்கு பிரதேச சபையில் நீண்டகாலமாக வெற்றிடமாக காணப்பட்ட மூன்று மேற்பார்வையாளர் பதவிகளுக்கு தெரிவு செய்யப்பட்ட அலுவலர்களுக்கான நியமனக் கடிதங்களை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் இன்று (11.08.2026) செவ்வாய்க்கிழமை ஆளுநர் செயலகத்தில் வைத்து வழங்கி வைத்தார்.

2026.07.01 ஆம் திகதி நடைபெற்ற நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட கணபதிப்பிள்ளை ஜெயசீலன் சுகாதார மேற்பார்வையாளராகவும், பரமேஸ்வரன் தீபன் வேலை மற்றும் வெளிக்கள மேற்பார்வையாளராகவும், துரைச்சாமி கஜன் சந்தை மேற்பார்வையாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்வில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எஸ்.சுதர்சன், யாழ்ப்பாண மாவட்ட உதவி உள்ளூராட்சி ஆணையாளர் பார்த்தீபன் மற்றும் வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் செயலாளர் பாலரூபன் ஆகியோர் கலந்துகொண்டனர்.