කොටි පොකුණ වටා ඇති මතභේදයට විසඳුමක් සෙවීමේ අරමුණින් උතුරු පළාත් ආණ්ඩුකාරවරයාගේ ප්රධානත්වයෙන් සාකච්ඡාවක් පැවැත්විණි.
முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களில் ஆராயப்பட்ட புலிக்குளம் தொடர்பான சர்ச்சைக்கு தீர்வு காணும் நோக்கில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் கிளிநொச்சி மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை (11.07.2025) கலந்துரையாடல் நடைபெற்றது. கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டச் செயலர்கள், பிரதேச செயலர்கள், நீர்பாசனத் திணைக்களப் பொறியியலாளர்கள், கமநலசேவைகள் திணைக்கள உதவி ஆணையாளர்கள், யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தினர் ஆகியோர் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் நிலப்பரப்புக்குள் […]