பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பான, தடையற்ற பயணத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் ‘சிசு செரிய’ பஸ் சேவை வவுனியா – செட்டிக்குளம் வழித்தடத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் ‘சிசு செரிய’ பஸ் சேவையின் ஆரம்ப நிகழ்வு நேற்று திங்கட் கிழமை (15.06.2026) வவுனியா பேருந்து நிலையத்தில்இடம்பெற்றது. கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சரும் வன்னி தேர்தல் மாவட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான கௌரவ உபாலி சமரசிங்க அவர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்த நிகழ்வில், வவுனியாவிலிருந்து செட்டிக்குளம் வரையான வழித்தடத்தில் மாணவர்களுக்கான விசேட போக்குவரத்துச் சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார […]
