பிரதம செயலாளர் அலுவலகம்

வடக்கு மாகாண சுகாதாரத்துறையில் முக்கிய மைல்கல்: புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது

வடக்கு மாகாணத்திலுள்ள ஆரம்ப சுகாதார சேவை நிலையங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் ஒரு முக்கிய மைல்கல்லாக, மத்திய சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சுக்கும் வட மாகாண சபைக்கும் இடையில் முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) 09.04.2026 அன்று கொழும்பு Galle Face Hotel இல் கைச்சாத்திடப்பட்டது. உலக வங்கியின் நிதியுதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் ஆரம்ப சுகாதார பராமரிப்பு சேவைகளை மேம்படுத்துவதற்கான இத் திட்டத்தின் கீழ்(Primary Healthcare System Enhancing Project – PHSEP) முதற்கட்டமாக 2026 […]

வடக்கு மாகாண சுகாதாரத்துறையில் முக்கிய மைல்கல்: புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது Read More »

எரிபொருள் மற்றும் மின்சக்தியைச் சிக்கனமாகப் பயன்படுத்த விசேட நடவடிக்கைகள்: வட மாகாண பிரதம செயலாளர் தலைமையில் தீர்மானம்

நாட்டில் தற்போது நிலவி வரும் எரிபொருள் மற்றும் மின்சக்தி நெருக்கடி நிலைமையைக் கருத்திற் கொண்டு, அவற்றைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதற்கான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று காலை 11.30 மணியளவில் பிரதம செயலாளர் செயலகத்தில் நடைபெற்றது. வட மாகாண பிரதம செயலாளரின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் மாநகர சபைகள், நகர சபைகள், பிரதேச சபைகள் ஆகியவற்றின் கௌரவ தவிசாளர்கள் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். அதிமேதகு

எரிபொருள் மற்றும் மின்சக்தியைச் சிக்கனமாகப் பயன்படுத்த விசேட நடவடிக்கைகள்: வட மாகாண பிரதம செயலாளர் தலைமையில் தீர்மானம் Read More »

விஷப் போதைப் பொருட்களை ஒழிப்பதற்கான”முழு நாடும் ஒன்றாக” தேசிய செயற்பாட்டுத் திட்டம்

போதைப்பொருள் பாவனை நாட்டில் ஒரு தீவிரமான தேசியப் பிரச்சினையாக மாறியுள்ளதுடன், போதைப்பொருள் கடத்தல் மற்றும் துஷ்பிரயோகத்துடன் தொடர்புடைய குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழ் நிலையில் இந்தச் சவாலை தேசிய மட்டத்தில் எதிர்கொள்ளும் நோக்கோடு விஷப் போதைப் பொருட்களை ஒழிப்பதற்கான”முழு நாடும் ஒன்றாக” எனும் தேசிய செயற்பாட்டு நிகழ்ச்சித் திட்ட அங்குரார்பண வைபவம் கௌரவ ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் மகாநாயக்க தேரர்கள், பேராயர்கள், இந்து குருக்கள்கள் மற்றும் மௌலவிகள் மற்றும் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பரந்த அளவிலான மக்களின் பங்கேற்புடன் 30.10.2025

விஷப் போதைப் பொருட்களை ஒழிப்பதற்கான”முழு நாடும் ஒன்றாக” தேசிய செயற்பாட்டுத் திட்டம் Read More »

அரச துறையில் பொதுமக்கள் சேவையை செயற்கை நுண்ணறிவு(AI) மூலம் வினைத்திறனுடன் வழங்குவது தொடர்பான பயிற்சிப் பட்டறை

ஜனாதிபதி செயலகமானது டிஜிட்டல் பொருளாதார அமைச்சுடன் இணைந்து அரச உத்தியோகத்தர்களிடையே செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) தொழிநுட்பத்தின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் “AI for Transforming Public Service” எனும் தலைப்பில் விழிப்புணர்வு பயிற்சி பட்டறைகளை நடாத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, வடமாகாணத்திலுள்ள அரச அலுவலகங்களில் பணியாற்றும் நிறைவேற்றுத்தர உத்தியோகத்தர்களுக்கான பயிற்சிப் பட்டறையானது 27.10.2025 அன்று வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி. தனுஜா முருகேசன் அவர்களின் தலைமையில் பிரதம செயலாளர் செயலக மாநாட்டு

அரச துறையில் பொதுமக்கள் சேவையை செயற்கை நுண்ணறிவு(AI) மூலம் வினைத்திறனுடன் வழங்குவது தொடர்பான பயிற்சிப் பட்டறை Read More »

புதிதாக ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தர்களிற்கு வடக்கு மாகாண சபையில் உள்ள அமைச்சுக்கள் திணைக்களங்களிற்கு நியமனம் வழங்கப்பட்டது

இலங்கை நிர்வாக சேவைக்கு (திறமை அடிப்படையில்) ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட உத்தியோகத்தர்களில் வடக்கு மாகாணசபைக்கு விடுவிக்கப்பட்ட உத்தியோகத்தர்களிற்கான நியமன கடிதங்கள் 10.10.2025 அன்று பிரதம செயலாளர் கேட்போர் கூடத்தில் பிரதம செயலாளர் திருமதி.தனுஜா முருகேசன் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது. திரு.மா.முரளி, உதவிச் செயலாளர், மகளிர் விவகார அமைச்சு திரு.ஜோ.லோரன்ஸ், உதவிச் செயலாளர், உள்ளூராட்சி அமைச்சு திருமதி.கி.சிவரஞ்சினி, உதவிப் பணிப்பாளர், தொழில்துறைத் திணைக்களம் திரு.ச.லோகேஸ்வரன், செயலாளர், நகரசபை, மன்னார்

புதிதாக ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தர்களிற்கு வடக்கு மாகாண சபையில் உள்ள அமைச்சுக்கள் திணைக்களங்களிற்கு நியமனம் வழங்கப்பட்டது Read More »

வடக்கு மாகாண சபை வளாகத்தில் வாணி விழா கொண்டாடப்பட்டது

வடக்கு மாகாண சபை வளாகத்தில் அமைந்துள்ள அமைச்சுக்கள், பிரதிப் பிரதம செயலாளர் அலுவலகங்கள் மற்றும் திணைக்களங்கள் இணைந்து நடாத்தும் நவராத்திரி விழாவின் இறுதி நாள் நிகழ்வு 02.10.2025 அன்று பேரவைச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன் அவர்களின் தலைமையில் பிரதம செயலாளர் கொத்தணி அலுவலகங்கள் இணைந்து நடாத்திய வாணி விழாவின் இறுதி நாள் நிகழ்வில் அமைச்சு செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள் திணைக்களத் தலைவர்கள், உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து

வடக்கு மாகாண சபை வளாகத்தில் வாணி விழா கொண்டாடப்பட்டது Read More »

டெங்கு நோய் கட்டுப்பாடு தொடர்பான மாகாண மட்ட கூட்டம்

டெங்கு நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்தும் நோக்குடன் மாகாண ரீதியிலான டெங்கு நோய் கட்டுப்பாட்டு கலந்துரையாடல் 25.09.2025 காலை 9.00 மணிக்கு பிரதம செயலாளர் திருமதி. தனுஜா முருகேசன் அவர்களின் தலைமையில் பிரதம செயலாளர் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய பிரதம செயலாளர் திருமதி. தனுஜா முருகேசன் அவர்கள், கூட்டத்திற்கு வருகை தந்தவர்கள் மற்றும் நிகழ்நிலை  மூலமாக கலந்துகொண்டவர்கள் அனைவரையும் வரவேற்றதுடன், பருவமழை நெருங்கி வருவதால் மாகாண மட்டத்தில் டெங்கு நோய்

டெங்கு நோய் கட்டுப்பாடு தொடர்பான மாகாண மட்ட கூட்டம் Read More »

அரச முதியோர் இல்லத்தில் சமூகத்தொடர்பு மைய (Community Interaction Hub) கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்ட்து

வடக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் கீழ் இயங்கிவரும் கைதடியில் அமைந்துள்ள அரச முதியோர் இல்லத்திற்காக அமைக்கப்படவுள்ள சமூகத்தொடர்பு மைய (Community Interaction Hub) கட்டடத்தின் அடிக்கல் நாட்டு விழா 24.09.2025 அன்று நடைபெற்றது. இந்த சமூகத்தெடர்பு மையம் ஆனது 37.57 மில்லியன் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்திக் கொடை ஊடாக மாகாண சமூக சேவைகள் திணைக்களத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து வடக்கு மாகாண மகளிர் விவகாரம் மற்றும் சமூக சேவைகள் அமைச்சினால் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. வடக்கு மாகாண

அரச முதியோர் இல்லத்தில் சமூகத்தொடர்பு மைய (Community Interaction Hub) கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்ட்து Read More »

கழிவு நீர் சுத்திகரிப்புத் தொகுதி (Sewerage Treatment Plant) கட்டுமாணப் பணிகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தமானது கைச்சாத்திடப்பட்டது

மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின் ஊடாக (PSDG) மாவட்ட பொது வைத்தியசாலை-மன்னார் மற்றும் மாவட்ட பொது வைத்தியசாலை-முல்லைத்தீவு ஆகிய வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்படவிருக்கும் கழிவு நீர் சுத்திகரிப்புத் தொகுதி (Sewerage Treatment Plant) கட்டுமாணப் பணிகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தமானது (MOU) தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை, பிரதம செயலாளர் செயலகம், மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் ஆகியவற்றுக்கிடையில் பிரதம செயலாளர் செயலகத்தில் 23.09.2025 அன்று கைச்சாத்திடப்பட்டது. இந் நிதியீட்டத்தின் மூலம் மாவட்ட பொது வைத்தியசாலை-மன்னாருக்கு 190Mn ரூபா செலவிலும் மாவட்ட

கழிவு நீர் சுத்திகரிப்புத் தொகுதி (Sewerage Treatment Plant) கட்டுமாணப் பணிகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தமானது கைச்சாத்திடப்பட்டது Read More »

டெங்கு கட்டுப்பாடு தொடர்பான விழிப்புணர்வூட்டும் செயலமர்வு நடைபெற்றது

யாழ்ப்பாண மாவட்டத்தில் பருவப் பெயர்ச்சி மழை காலம் ஆரம்பிக்க இருப்பதால் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் நோக்கில் டெங்கு கட்டுப்பாட்டு செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக யாழ்மாவட்ட செயலகத்தால் டெங்கு கட்டுப்பாட்டு நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைவாக வடக்கு மாகாணசபை வளாகத்தில் அமைந்துள்ள திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள் மத்தியில் டெங்கு கட்டுப்பாடு தொடர்பான விழிப்புணர்வூட்டும் செயலமர்வு 23.09.2025 அன்று பிரதம செயலாளர் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. குறித்த செயலமர்வில் சமூக மருத்துவர் வைத்தியகலாநிதி நாகராசா பரமேஸ்வரன் அவர்களும் வைத்தியகலாநிதி துவாரகா சுதன்

டெங்கு கட்டுப்பாடு தொடர்பான விழிப்புணர்வூட்டும் செயலமர்வு நடைபெற்றது Read More »