இலங்கையிலேயே முதற்தடவையாக அறிமுகப்படுத்தப்பட்ட ”ஒருவழி முதலீட்டு நுழைவாயில்” டிஜிட்டல் செயற்றிட்டத்தை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
முதலீட்டாளர்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டு வந்த மிகப் பெரிய சவால்களுக்குத் தீர்வுகாணும் வகையில், இலங்கையிலேயே முதற்தடவையாக ‘ஒருவழி முதலீட்டு நுழைவாயில்’ (One-Stop Investment Portal – OSSI) வடக்கு மாகாணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த டிஜிட்டல் செயற்றிட்டத்தை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (26.05.2026) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். வடக்கு மாகாண வரலாற்றில் முதன்முறையாக மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘வடக்கு முதலீட்டு உச்சிமாநாடு – 2026’ (NIS-26) இன் தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையிலேயே […]
