யாழ் பாதுகாப்புப் படைகளின் புதிய கட்டளைத் தளபதி, கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை சந்தித்துக் கலந்துரையாடினார்

யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைகளின் புதிய கட்டளைத் தளபதியாக அண்மையில் பதவியேற்ற மேஜர் ஜெனரல் கே.ஜே.என்.எம்.பி.கே. நவரத்ன, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை இன்று (20.04.2026) திங்கட்கிழமை காலை ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

யாழ்ப்பாண மாவட்டப் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதியாகப் பதவியேற்றதன் பின்னர், கௌரவ ஆளுநருடனான முதலாவது சம்பிரதாயபூர்வ சந்திப்பாக இது அமைந்திருந்தது.

இச்சந்திப்பின்போது இருவருக்குமிடையே சுமுகமான கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், புதிய பதவியைப் பொறுப்பேற்றுள்ள கட்டளைத் தளபதிக்குக் கௌரவ ஆளுநர் அவர்கள் தனது வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டார். சந்திப்பின் நிறைவில் ஆளுநருக்கு நினைவுச் சின்னத்தையும் கட்டளைத் தளபதி வழங்கி வைத்தார்.