ஆளுநர்

பாலைப்பாணி மற்றும் கொம்புவைச்சகுளம் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களை கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் நேரில் சந்தித்து கலந்துரையாடினார்

மாங்குளம் – மூன்றுமுறிப்பு பிரதான வீதியைக் கட்டம் கட்டமாக அபிவிருத்தி செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டம், மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பாலைப்பாணி மற்றும் கொம்புவைச்சகுளம் ஆகிய பின்தங்கிய கிராமங்களுக்கு இன்று வியாழக்கிழமை (12.03.2026) ஆளுநர் அவர்கள் நேரில் களப் பயணத்தை மேற்கொண்டார். இந்தப் பயணத்தின்போது முல்லைத்தீவு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் தெ.ரதீஸ்வரன் அவர்களும் ஆளுநருடன் இணைந்திருந்தார். பாலைப்பாணி […]

பாலைப்பாணி மற்றும் கொம்புவைச்சகுளம் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களை கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் நேரில் சந்தித்து கலந்துரையாடினார் Read More »

‘தேசிய வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டம் – 2026’ எனும் தொனிப்பொருளின் கீழ் மாகாண சபைகளின் வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் திட்டத்தின் வடக்கு மாகாணத்துக்குரிய ஆரம்ப நிகழ்வு முல்லைத்தீவு மாவட்ட மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

நான் மாவட்டச் செயலாளராகப் பணியாற்றிய காலங்களில் வீட்டுத்திட்டங்களுக்குரிய பயனாளிகளைத் தெரிவு செய்யும்போது பல்வேறு அரசியல் தலையீடுகள் இருந்தன. ஆனால், தற்போது மாகாண சபையால் நடைமுறைப்படுத்தப்படும் வீடமைப்புத் திட்டத்துக்கான பயனாளிகள் தெரிவில் எவ்விதமான அரசியல் தலையீடுகளும் இன்றி, முற்றுமுழுதாகச் சுயாதீனமாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் நாம் செயற்பட்டிருக்கின்றோம், என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, ‘தேசிய வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டம் – 2026’ எனும் தொனிப்பொருளின் கீழ் மாகாண சபைகளின் வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டங்களை

‘தேசிய வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டம் – 2026’ எனும் தொனிப்பொருளின் கீழ் மாகாண சபைகளின் வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் திட்டத்தின் வடக்கு மாகாணத்துக்குரிய ஆரம்ப நிகழ்வு முல்லைத்தீவு மாவட்ட மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. Read More »

இடமாற்றம் பெற்ற ஆசிரியர்களை விடுவிக்கத் தவறும் பாடசாலை அதிபர்களுக்கு எதிராக உடனடியாக ஒழுக்காற்று நடவடிக்கை ஆரம்பிக்க வேண்டும் – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

வடக்கு மாகாணத்தில் ‘சேவையின் தேவை கருதி’ ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட இடமாற்றங்களை முழுமையாக நடைமுறைப்படுத்திய பின்னரே, வருடாந்த இடமாற்றங்களை நடைமுறைப்படுத்துமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் ஆளுநர் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை (11.03.2026) மாலை நடைபெற்றது. இக்கலந்துரையாடலில், கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட திட்டங்களின் முன்னேற்றங்கள், தொடர் வேலைத்திட்டங்கள் மற்றும் நடப்பாண்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள

இடமாற்றம் பெற்ற ஆசிரியர்களை விடுவிக்கத் தவறும் பாடசாலை அதிபர்களுக்கு எதிராக உடனடியாக ஒழுக்காற்று நடவடிக்கை ஆரம்பிக்க வேண்டும் – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். Read More »

சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு அரச மற்றும் தனியார் தரப்பு உட்பட அனைவரினதும் முழுமையான ஒத்துழைப்பு அவசியமாகும். உங்களுடைய பிரச்சினைகளை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் எங்களிடம் தெரிவிக்கலாம். – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதில் தனியார் துறையின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும் எனவும், இத்துறையை மேம்படுத்துவதற்குத் தனியார் துறையினருக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அரசாங்கம் பெற்றுக்கொடுக்கும் எனவும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த சுற்றுலாத்துறைப் பங்குதாரர்களுடன் இன்று புதன்கிழமை (11.03.2026) காலை யாழ்ப்பாணம் வலம்புரி ஹோட்டலில் நடைபெற்ற விசேட சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், சுற்றுலாத்துறை அமைச்சின் ஊடாக எமக்குத்

சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு அரச மற்றும் தனியார் தரப்பு உட்பட அனைவரினதும் முழுமையான ஒத்துழைப்பு அவசியமாகும். உங்களுடைய பிரச்சினைகளை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் எங்களிடம் தெரிவிக்கலாம். – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். Read More »

சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளை மேம்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி நோக்கிய அபிவிருத்தியைத் துரிதப்படுத்துதல் தொடர்பான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல், கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது.

ஏற்றுமதி நோக்கிய அபிவிருத்திக்கு அனைத்துத் திணைக்களங்களும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார். வடக்கு மாகாணத்தில் சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளை மேம்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி நோக்கிய அபிவிருத்தியைத் துரிதப்படுத்துதல் தொடர்பான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை (11.03.2026) காலை நடைபெற்றது. தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் லக்ஸ்மன் அபயசேகர

சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளை மேம்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி நோக்கிய அபிவிருத்தியைத் துரிதப்படுத்துதல் தொடர்பான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல், கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது. Read More »

இலங்கையின் மொத்த தேசிய உற்பத்திக்கு எதிர்கால வடக்கு மாகாண பங்களிப்பானது 10% ஆக உயர்த்தப்படல் வேண்டும் – கௌரவ ஆளுநர் கோரிக்கை

இலங்கையின் மொத்த தேசிய உற்பத்திக்கு வளமான வடக்கு மாகாணத்தின் பங்களிப்பானது தற்போது 4.5 சதவீதமாகக் கடைசி மட்டத்திலேயே காணப்படுகின்றது. எதிர்வரும் சில ஆண்டுகளில் இப்பங்களிப்பை ஆகக்குறைந்தது 10 சதவீதமாக உயர்த்துவதற்கான இலக்கை நோக்கி நாம் தற்போது தீவிரமாகப் பணியாற்றத் தொடங்கியுள்ளோம் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். யாழ்ப்பாணம் வர்த்தக மற்றும் கைத்தொழில் மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘வடக்கு மாகாண தொழில்முனைவோர் விருதுகள் – 2025’ வழங்கும் விழா, மன்றத்தின் தலைவர் கு.வசீகரன்

இலங்கையின் மொத்த தேசிய உற்பத்திக்கு எதிர்கால வடக்கு மாகாண பங்களிப்பானது 10% ஆக உயர்த்தப்படல் வேண்டும் – கௌரவ ஆளுநர் கோரிக்கை Read More »

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள நவீன விவசாயமே காலத்தின் கட்டாயம்; விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் புதிய திட்டம்!” – கிளிநொச்சியில் ‘காலநிலை சீர்மிகு விவசாய சமூகப் பண்ணை’யைத் திறந்து வைத்து ஆளுநர் நா.வேதநாயகன் உரை.

எமது பாரம்பரிய பயிர்ச்செய்கை முறைமைக்குப் பெரும் சவாலாக மாறிவரும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளக்கூடிய வகையில், ‘காலநிலைக்குச் சீரமைவான விவசாய முறைமை’ எமது மாகாணத்துக்குத் தற்போதைய காலத்தின் கட்டாயத் தேவையாகும் எனவும், இப்புதிய பயிர்ச்செய்கை முறைமையினூடாக எமது விவசாயிகள் தமது வருமானத்தைப் பெருமளவு உயர்த்திக் கொள்ள முடியும் எனவும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்டம், கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ‘காலநிலை சீர்மிகு விவசாய சமூகப்

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள நவீன விவசாயமே காலத்தின் கட்டாயம்; விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் புதிய திட்டம்!” – கிளிநொச்சியில் ‘காலநிலை சீர்மிகு விவசாய சமூகப் பண்ணை’யைத் திறந்து வைத்து ஆளுநர் நா.வேதநாயகன் உரை. Read More »

“மணல் மாபியாக்களுக்கு முற்றுப்புள்ளி; சீரான விலையில் தடையற்ற விநியோகம்!” – ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் அதிரடித் தீர்மானங்கள்.

வடக்கு மாகாணத்தில் மணல் மற்றும் கிரவல் விலைகளைக் கட்டுப்படுத்தி ஒரே சீராகப் பேணுவதற்கும், மக்களின் தேவைக்கேற்ற விநியோகத்தை தடையின்றி வழங்குவதற்குமான புதிய பொறிமுறையொன்றை உருவாக்கும் நோக்கிலான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை (10.03.2026) காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. மணல் மற்றும் கிரவல் விநியோகத்தில் வடக்கு மாகாணத்தில் தற்போது எழுந்துள்ள சவால்கள் தொடர்பில் நேரில் ஆராய்ந்து தீர்வுகாண்பதற்காக, ஆளுநரால் விடுக்கப்பட்ட விசேட அழைப்பை ஏற்று, புவிச்சரிதவியல்

“மணல் மாபியாக்களுக்கு முற்றுப்புள்ளி; சீரான விலையில் தடையற்ற விநியோகம்!” – ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் அதிரடித் தீர்மானங்கள். Read More »

புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பணிக்குழுத் தலைவருக்கும் ஆளுநருக்கும் இடையில் விசேட சந்திப்பு நடைபெற்றது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணி மற்றும் நம்பிக்கை கட்டியெழுப்பும் விசேட செயற்றிட்டமான ‘லன்ரேன்’ (LANTERN – Land and Trust-building Engagement in the Regions of the North & East) திட்டத்தை, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்துடன் (UNDP) இணைந்து முன்னெடுக்கவுள்ளதாகப் புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் (IOM) இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பணிக்குழுத் தலைவர் திருமதி கிறிஸ்டின் பார்ஸோ, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களிடம் தெரிவித்தார். புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின்

புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பணிக்குழுத் தலைவருக்கும் ஆளுநருக்கும் இடையில் விசேட சந்திப்பு நடைபெற்றது. Read More »

உள்ளூராட்சி அமைச்சின் விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது

மாகாணத்தில் வெற்றிடமாகவுள்ள தொழில்நுட்ப ஆளணிகளை நிரப்புவதற்கும், தற்போதைய காலத்தின் தேவைக்கேற்ப புதிய தொழில்நுட்ப ஆளணிகளை உருவாக்குவதற்கும் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு அழுத்தங்களைப் பிரயோகிக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கேட்டுக்கொண்டார். வடக்கு மாகாண நிதி, திட்டமிடல், சட்டம் ஒழுங்கு, காணி, மின்சக்தி, வீடமைப்பு மற்றும் நிர்மாணம், சுற்றுலா, உள்ளூராட்சி, மாகாண நிர்வாகம், கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, மோட்டார் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அமைச்சின் விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று

உள்ளூராட்சி அமைச்சின் விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது Read More »