கடந்த ஆண்டு இறுதியில் ஆரம்பிக்கப்பட்ட குளங்களைத் தூர்வாரும் செயற்றிட்டம், இவ்வாண்டும் செயற்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. – கௌரவ ஆளுநர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட யாழ். மாவட்டத்திலுள்ள குளங்களைத் தூர்வாரும் செயற்றிட்டத்தை, இவ்வாண்டு மேலும் விரிவாக்கி வினைத்திறனாக நடைமுறைப்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (20.02.2026) மாலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், கடந்த ஆண்டு இறுதியில் தெல்லிப்பழை மானிடம் அறக்கட்டளையின் கோரிக்கைக்கு அமைவாக உருவாக்கப்பட்ட குளங்களைத் தூர்வாருவதற்கான செயற்றிட்டத்தை, இவ்வாண்டும் தொடர்ச்சியாகச் செயற்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். குளங்களைத் தூர்வாருவதன் ஊடாக வெள்ளப்பெருக்கைக் […]
