நாம் தற்போது ஆண்டின் நடுப்பகுதியைக் கடந்துள்ளோம். அபிவிருத்தி திட்ட வேலைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும். – கௌரவ ஆளுநர்
வடக்கு மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும், தொழிற்துறை மற்றும் தொழில் முனைவோர் மேம்பாடு, வர்த்தக வாணிப அமைச்சின் மாதாந்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று (15.06.2026) திங்கட்கிழமை நடைபெற்றது. இக்கலந்துரையாடலின் ஆரம்பத்தில் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கிய கௌரவ ஆளுநர், நாம் தற்போது ஆண்டின் நடுப்பகுதியைக் கடந்துள்ளோம். எனவே, திட்டங்கள் அனைத்தும் துரிதப்படுத்தப்பட வேண்டும். கொள்வனவு நடவடிக்கைகளை […]
