ஆளுநர்

இம்முறை பல்கலைக்கழகப் பிரவேசத்துக்கான தகுதி பெற்ற மாணவர் வீதத்தில் வடக்கு மாகாணம் தேசிய ரீதியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.

பல்கலைக்கழகப் பிரவேசத்துக்கான தகுதியைப் பெற்ற மாணவர்களின் வீதத்தில் வடக்கு மாகாணம் தேசிய ரீதியில் முதலிடத்தைப் பெற்று இம்முறை வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இதற்காக உழைத்த அனைவரையும் பாராட்டும் அதேவேளை, இந்த இடத்தை எமது மாகாணம் தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற பொறுப்பும், அடுத்த ஆண்டு இவ்வீதத்தை மேலும் அதிகரிக்க வேண்டிய கட்டாயமும் எமக்கு ஏற்பட்டுள்ளதை நாம் ஒவ்வொருவரும் மனதிலிருத்த வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். கிளிநொச்சி, புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் […]

இம்முறை பல்கலைக்கழகப் பிரவேசத்துக்கான தகுதி பெற்ற மாணவர் வீதத்தில் வடக்கு மாகாணம் தேசிய ரீதியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது. Read More »

‘2கே அக்ரோ புரொடக்ட்ஸ் லிமிடெட்’ (2K Agro Products Ltd) நிறுவனத்தின் புதிய உற்பத்திப் பொருளான ‘வேர்கடலை பிஸ்கட்’ அறிமுக நிகழ்வு, கௌரவ ஆளுநரின் பங்கேற்புடன் நடைபெற்றது.

விவசாய நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் கிளிநொச்சியில் உருவாக்கப்பட்ட ‘2கே அக்ரோ புரொடக்ட்ஸ் லிமிடெட்’ (2K Agro Products Ltd) நிறுவனத்தின் புதிய உற்பத்திப் பொருளான ‘வேர்கடலை பிஸ்கட்’ அறிமுக நிகழ்வு, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் விசேட பங்கேற்புடன் இன்று (21.04.2026) செவ்வாய்க்கிழமை காலை அந்நிறுவன வளாகத்தில் நடைபெற்றது. விவசாய நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் வடக்கு மாகாணத்தில் உருவாக்கப்பட்ட 17 பட்டியலிடப்படாத பொதுக் கம்பனிகளில் ஒன்றான இந்நிறுவனம், தனது பங்குதாரர்களாக உள்ள

‘2கே அக்ரோ புரொடக்ட்ஸ் லிமிடெட்’ (2K Agro Products Ltd) நிறுவனத்தின் புதிய உற்பத்திப் பொருளான ‘வேர்கடலை பிஸ்கட்’ அறிமுக நிகழ்வு, கௌரவ ஆளுநரின் பங்கேற்புடன் நடைபெற்றது. Read More »

கனகாம்பிகைக்குளத்திலிருந்து கிளிநொச்சிக்குளம் வரையிலான பிரதான வாய்க்கால் தூர்வாரும் பணிகளை, கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் சென்று நேரில் பார்வையிட்டார்

பல தசாப்தங்களாகத் தூர்வாரப்படாமல் காணப்பட்டமையால், மழைக்காலங்களில் மக்கள் மிகப் பெரிய வெள்ளப் பேரிடர்களைச் சந்திப்பதற்குக் காரணமாக அமைந்த வாய்க்கால்களைத் தூர்வாரும் விசேட செயற்றிட்டம் தற்போது துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன் ஒரு கட்டமாக, கிளிநொச்சி மாவட்டத்தின் கனகாம்பிகைக்குளத்திலிருந்து கிளிநொச்சிக்குளம் வரையிலான 1.5 கிலோமீற்றர் நீளமான பிரதான வாய்க்காலைத் தூர்வாரும் பணிகளை, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சு.முரளிதரன் ஆகியோர் இன்று (21.04.2026) செவ்வாய்க்கிழமை இரத்தினபுரம் பகுதிக்குச் சென்று நேரில் பார்வையிட்டனர்.

கனகாம்பிகைக்குளத்திலிருந்து கிளிநொச்சிக்குளம் வரையிலான பிரதான வாய்க்கால் தூர்வாரும் பணிகளை, கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் சென்று நேரில் பார்வையிட்டார் Read More »

யாழ் பாதுகாப்புப் படைகளின் புதிய கட்டளைத் தளபதி, கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை சந்தித்துக் கலந்துரையாடினார்

யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைகளின் புதிய கட்டளைத் தளபதியாக அண்மையில் பதவியேற்ற மேஜர் ஜெனரல் கே.ஜே.என்.எம்.பி.கே. நவரத்ன, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை இன்று (20.04.2026) திங்கட்கிழமை காலை ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். யாழ்ப்பாண மாவட்டப் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதியாகப் பதவியேற்றதன் பின்னர், கௌரவ ஆளுநருடனான முதலாவது சம்பிரதாயபூர்வ சந்திப்பாக இது அமைந்திருந்தது. இச்சந்திப்பின்போது இருவருக்குமிடையே சுமுகமான கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், புதிய பதவியைப் பொறுப்பேற்றுள்ள கட்டளைத் தளபதிக்குக் கௌரவ ஆளுநர் அவர்கள் தனது

யாழ் பாதுகாப்புப் படைகளின் புதிய கட்டளைத் தளபதி, கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை சந்தித்துக் கலந்துரையாடினார் Read More »

பின்தங்கிய கிராமத்திலிருந்து ஒரு மாணவன் பல்கலைக்கழகம் தெரிவானால், அது அந்தக் கிராமத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் வித்திடும். – கௌரவ ஆளுநர்

தனியார் கல்வி நிறுவனங்களை நாடாமல், போதிய ஆசிரியர் வளங்களற்ற வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பாடசாலைகளில் உயர்தர விஞ்ஞானத்துறையில் (உயிரியல், இணைந்த கணிதம்) பயிலும் பின்தங்கிய தமிழ் மாணவர்களுக்கு, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் ஆய்வுகூடங்களைப் பயன்படுத்தி மூன்று நாட்கள் தங்கியிருந்து கற்கும் அரிய வாய்ப்பை வழங்கிய அதிபர் இ.செந்தில்மாறன் உள்ளிட்ட பாடசாலைச் சமூகத்தினருக்கும், இதற்கு உறுதுணையாக நின்ற சங்காரவேல் நிதியத்துக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். கடந்த

பின்தங்கிய கிராமத்திலிருந்து ஒரு மாணவன் பல்கலைக்கழகம் தெரிவானால், அது அந்தக் கிராமத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் வித்திடும். – கௌரவ ஆளுநர் Read More »

மன்னார் மாவட்டத்தில் மணல் விநியோகத்தை ஒழுங்குபடுத்துவது தொடர்பான மாவட்ட மட்டத்திலான விசேட கூட்டம் மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

மன்னார் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் வழங்கப்பட்ட மணல் அகழ்வுக்கான அனுமதிப்பத்திரங்களை உடனடியாகத் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கும், அந்தப் பத்திரங்கள் வழங்கப்பட்டமை தொடர்பில் முன்வைக்கப்படும் மிகப்பெரிய முறைகேடுகள் குறித்துக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (C.I.D.) விசாரணைகளுக்குப் பாரப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். மன்னார் மாவட்டத்தில் மணல் விநியோகத்தை ஒழுங்குபடுத்துவது தொடர்பான மாவட்ட மட்டத்திலான விசேட கூட்டம், மாவட்டச் செயலாளர் க.கனகேஸ்வரன் தலைமையில் இன்று (18.04.2026) சனிக்கிழமை காலை மாவட்டச்

மன்னார் மாவட்டத்தில் மணல் விநியோகத்தை ஒழுங்குபடுத்துவது தொடர்பான மாவட்ட மட்டத்திலான விசேட கூட்டம் மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. Read More »

‘வடக்கு மாகாண சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டம் – 2026’, உடுப்பிட்டி இமையாணன் மத்திய விளையாட்டுக் கழக மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.

மாணவர்கள் தங்களது கல்விக்கு மேலதிகமாக கலை மற்றும் விளையாட்டுக்களில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கு சித்திரைப் புத்தாண்டுக் கொண்டாட்ட நிகழ்வுகள் சிறந்த வாய்ப்பாக அமைந்திருக்கின்றன. இவ்வாறான மேலதிக செயற்பாடுகளில் மாணவர்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்வதன் ஊடாகவே, தங்களின் தலைமைத்துவம் உள்ளிட்ட நற்பண்புகளை வளர்த்துக்கொள்ள முடியும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு விளையாட்டுத் திணைக்களத்துடன் இணைந்து நடத்திய ‘வடக்கு மாகாண

‘வடக்கு மாகாண சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டம் – 2026’, உடுப்பிட்டி இமையாணன் மத்திய விளையாட்டுக் கழக மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது. Read More »

கௌரவ ஆளுநர் மற்றும் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் நெடுந்தீவுப் பிரதேச மருத்துவமனை மற்றும் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் கலப்பு மின் உற்பத்தித் திட்டம் ஆகியவற்றை நேரில் சென்று பார்வையிட்டனர்

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் யாழ். மாவட்ட கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் ஆகியோர் இன்று (16.04.2026) வியாழக்கிழமை நெடுந்தீவுப் பிரதேச மருத்துவமனை மற்றும் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் கலப்பு மின் உற்பத்தித் திட்டம் ஆகியவற்றை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வுகளை முன்னெடுத்தனர். நெடுந்தீவில் அமைக்கப்பட்டு வரும் கலப்பு மின் உற்பத்தி நிலையத்தின் பணிகள் தற்போது துரிதமாக நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தின் ஆரம்பக் கட்டமாக, சூரிய சக்தியூடான மின் உற்பத்திப் பணிகள் விரைவில் நிறைவு

கௌரவ ஆளுநர் மற்றும் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் நெடுந்தீவுப் பிரதேச மருத்துவமனை மற்றும் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் கலப்பு மின் உற்பத்தித் திட்டம் ஆகியவற்றை நேரில் சென்று பார்வையிட்டனர் Read More »

நெடுந்தீவு இறங்குதுறையில் புதிதாக அமைக்கப்பட்ட சுற்றுலா தகவல் நிலையம் மற்றும் பயணிகள் இளைப்பாறும் மண்டபம் திறந்து வைக்கப்பட்டது

நெடுந்தீவுப் பிரதேச மக்களின் வலிகள் எனக்கு நன்றாகத் தெரியும். உங்களின் ஆதங்கங்களை நான் ஒருபோதும் மறுக்கவில்லை. தற்போதைய அரசாங்கத்தின் காலத்தில், உங்கள் பிரதேசத்தின் அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்வதற்கான முழுமையான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. ஒரே நாளில் அனைத்தையும் செய்து முடிப்பதற்கு எங்களுக்கும் விருப்பம் இருந்தாலும், நடைமுறையில் அதனைப் படிப்படியாகவே முன்னெடுக்க முடியும், என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் 38 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில், நெடுந்தீவு

நெடுந்தீவு இறங்குதுறையில் புதிதாக அமைக்கப்பட்ட சுற்றுலா தகவல் நிலையம் மற்றும் பயணிகள் இளைப்பாறும் மண்டபம் திறந்து வைக்கப்பட்டது Read More »

பொதுமக்களின் முறைப்பாடுகளை விசாரிக்க ஆளுநரின் நேரடி கண்காணிப்பின் கீழ் விசேட குழு உருவாக்கம்

வடக்கு மாகாண சபையின் கீழ் இயங்கும் திணைக்களங்களின் செயற்பாடுகளைக் கண்காணிக்கவும், பொதுமக்கள் முன்வைக்கும் முறைப்பாடுகள் குறித்து முறையான விசாரணைகளை முன்னெடுக்கவும் கௌரவ ஆளுநரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் விசேட குழுவொன்று உருவாக்கப்பட்டுள்ளது. இக்குழுவினருக்கும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் இடையிலான முதற்கட்டக் கலந்துரையாடல், இன்று (15.04.2026) புதன்கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலின்போது கௌரவ ஆளுநர் அவர்கள் வழங்கிய முக்கிய வழிகாட்டல்கள் வருமாறு: மாகாண சபை நிர்வாகத்தின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை மீண்டும்

பொதுமக்களின் முறைப்பாடுகளை விசாரிக்க ஆளுநரின் நேரடி கண்காணிப்பின் கீழ் விசேட குழு உருவாக்கம் Read More »