ஆளுநர்

வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கு, கௌரவ ஆளுநர் களவிஜயமொன்றை மேற்கொண்டார்.

கிளிநொச்சியில் அமைந்துள்ள வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கு, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (31.07.2026) திடீர் கண்காணிப்பு பயணமொன்றை மேற்கொண்டார். இந்தப் பயணத்தின்போது அதிகார சபைக்குச் சென்ற கௌரவ ஆளுநர் அவர்கள், அங்கு பணியாற்றும் உத்தியோகத்தர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாகச் சந்தித்துக் கலந்துரையாடியதோடு, அவர்கள் தமது கடமையின்போது எதிர்கொள்ளும் நடைமுறைப் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டார். இந்தக் கண்காணிப்பு பயணத்தின்போது, வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார […]

வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கு, கௌரவ ஆளுநர் களவிஜயமொன்றை மேற்கொண்டார். Read More »

மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்கள், மக்களுக்குச் சொந்தமான காணிகள் அவர்களிடம் கையளிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றார். – கௌரவ ஆளுநர் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல், கேப்பாபிலவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் சில காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கௌரவ பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர தெரிவித்தார். முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இராணுவப் பயன்பாட்டில் உள்ள காணிகளைச் சிவில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல், முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (31.07.2026) நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் வரவேற்புரையாற்றிய முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் அ.உமாமகேஸ்வரன், ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற

மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்கள், மக்களுக்குச் சொந்தமான காணிகள் அவர்களிடம் கையளிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றார். – கௌரவ ஆளுநர் தெரிவித்தார். Read More »

யாழ். மாவட்டத்தில் பல்வேறு காரணங்களால் தாமதமடைந்துள்ள முதலீட்டுத் திட்டங்கள் தொடர்பிலான கலந்துரையாடல் இடம்பெற்றது.

‘எமது பிரதேசத்தின் அபிவிருத்திக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் முதலீடுகள் மிகவும் அவசியமானவையாகும். முதலீட்டாளர்கள் உரிய காலப்பகுதிக்குள் திணைக்களங்களின் அனுமதிகளைப் பெற்றுக்கொள்வதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். ஒரு திணைக்களம் அனுமதி வழங்கினாலும், மற்றுமொரு திணைக்களத்தின் அனுமதி கிடைக்கப்பெற தாமதமாவதால் முதலீட்டாளர்கள் விரக்தியடைகின்றனர். இது தொடர்பில் அனைத்துத் திணைக்களங்களும் விசேட கவனம் செலுத்துவதோடு, தேவைப்படின் நிபந்தனைகளுடனாவது அனுமதிகளை வழங்க முன்வர வேண்டும். அதேவேளை, முதலீட்டாளர்களும் நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே தங்களது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும், என கடற்றொழில், நீரியல்

யாழ். மாவட்டத்தில் பல்வேறு காரணங்களால் தாமதமடைந்துள்ள முதலீட்டுத் திட்டங்கள் தொடர்பிலான கலந்துரையாடல் இடம்பெற்றது. Read More »

சுகாதார உதவியாளர் ஆட்சேர்ப்பு நடவடிக்கையானது, எவ்வித அழுத்தங்களுமின்றி அதியுயர் நேர்மை, வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வுடன் நிறைவேற்றப்பட வேண்டும். – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தல்

வடக்கு மாகாண சுகாதாரத் துறையின் எதிர்கால சேவைத் தரத்தை நிர்ணயிக்கும் சுகாதார உதவியாளர் ஆட்சேர்ப்பு நடவடிக்கையானது, எவ்வித அழுத்தங்களுக்கும் இடமளிக்காமல் அதியுயர் நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வுடன் நிறைவேற்றப்பட வேண்டியது அவசியமாகும், என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண சுகாதார உதவியாளர் நியமனத்துக்காக நியமிக்கப்பட்டுள்ள நேர்முகத் தேர்வுக் குழு உறுப்பினர்களுடனான விசேட கலந்துரையாடல், ஆளுநர் செயலகத்தில் இன்று (28.07.2026) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன்போது குழு உறுப்பினர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கும்போதே

சுகாதார உதவியாளர் ஆட்சேர்ப்பு நடவடிக்கையானது, எவ்வித அழுத்தங்களுமின்றி அதியுயர் நேர்மை, வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வுடன் நிறைவேற்றப்பட வேண்டும். – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தல் Read More »

வடக்கு மாகாண சபை உத்தியோகத்தர்கள் பங்கேற்ற ‘நேர்மை நடைபவனி’ அணியை கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.

அரச சேவையின் தரம், வினைத்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்தி ஊழலற்ற நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்குவதை வலியுறுத்தும் வகையிலான மாபெரும் ‘நேர்மை நடைபவனி’ நிகழ்வானது இன்று (28.07.2026) செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறப்பாக நடைபெற்றது. ஜனாதிபதி செயலகத்தின் வழிகாட்டலுக்கு அமைய முன்னெடுக்கப்படும் ‘நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா’ தேசிய செயற்பாட்டின் கீழ், நேர்மையான அரச சேவையை வலுப்படுத்தும் நோக்கில், நேர்மை வாரத்தின் (2026 ஜூலை 27 முதல் 31 வரை) இரண்டாம் நாள் நிகழ்வுகள் ‘நேர்மைமிக்க

வடக்கு மாகாண சபை உத்தியோகத்தர்கள் பங்கேற்ற ‘நேர்மை நடைபவனி’ அணியை கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் ஆரம்பித்து வைத்தார். Read More »

யாழ். திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை நிர்வகிப்பதற்குரிய நம்பிக்கை நிதியப் பொறுப்புச் சபையை உருவாக்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான இறுதி இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை நிர்வகிப்பதற்குரிய நம்பிக்கை நிதியப் பொறுப்புச் சபையை உருவாக்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான இறுதி இணக்கப்பாடு, ‘கூட்டு முகாமைத்துவக் குழு’ கூட்டத்தில் இன்று (27.07.2026) திங்கட்கிழமை எட்டப்பட்டுள்ளது. இணையத் தொழில்நுட்பத்தின் ஊடாக நடைபெற்ற 7ஆவது கூட்டு முகாமைத்துவக் கூட்டத்தில் உயர்மட்டப் பிரதிநிதிகள் பலரும் பல்வேறு இடங்களிலிருந்தவாறு கலந்துகொண்டனர். கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்திலிருந்து புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கௌரவ பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி மற்றும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர்

யாழ். திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை நிர்வகிப்பதற்குரிய நம்பிக்கை நிதியப் பொறுப்புச் சபையை உருவாக்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான இறுதி இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. Read More »

தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற மாணவனை நாம் இங்கு பாராட்டுகின்றோம். ஏனைய மாணவர்களும் தாங்களும் அவ்வாறு முதலிடத்துக்கு வர வேண்டும் என்ற ஓர்மத்துடன் கற்க வேண்டும் – கௌரவ ஆளுநர் தெரிவித்தார்.

தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற மாணவனை நாம் இங்கு பாராட்டுகின்றோம். இந்தப் பாராட்டைப் பார்த்து, இங்குள்ள ஏனைய மாணவர்களும் தாங்களும் அவ்வாறு முதலிடத்துக்கு வர வேண்டும் என்ற ஓர்மத்துடன் கற்க வேண்டும், என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். 2025ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 194 புள்ளிகளைப் பெற்று, தமிழ் மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைக் கைப்பற்றிய யாழ்ப்பாணம் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் செல்வன்

தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற மாணவனை நாம் இங்கு பாராட்டுகின்றோம். ஏனைய மாணவர்களும் தாங்களும் அவ்வாறு முதலிடத்துக்கு வர வேண்டும் என்ற ஓர்மத்துடன் கற்க வேண்டும் – கௌரவ ஆளுநர் தெரிவித்தார். Read More »

‘நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை’ தேசிய செயற்பாட்டின் கீழ், ஆளுநர் செயலக உத்தியோகத்தர்களுக்கான முதல்நாள் சத்தியப் பிரமாண நிகழ்வு ஆளுநர் செயலக முன்றலில் நடைபெற்றது.

‘நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை’ தேசிய செயற்பாட்டின் கீழ், நேர்மையான அரசு சேவையை வலுப்படுத்தும் நோக்கில் வடக்கு மாகாண ஆளுநர் செயலக உத்தியோகத்தர்களுக்கான முதல்நாள் சத்தியப் பிரமாண நிகழ்வு இன்று திங்கட்கிழமை (27.07.2026) காலை 9 மணிக்கு ஆளுநர் செயலக முன்றலில் நடைபெற்றது. தேசியக் கொடி, மாகாணக் கொடி என்பன ஆளுநரின் உதவிச் செயலாளர் மற்றும் ஆளுநர் செயலக நிர்வாக உத்தியோகத்தர் ஆகியோரால் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, உத்தியோகத்தர்களின் சத்தியப் பிரமாண நிகழ்வு நடைபெற்றது. இதன் பின்னர்

‘நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை’ தேசிய செயற்பாட்டின் கீழ், ஆளுநர் செயலக உத்தியோகத்தர்களுக்கான முதல்நாள் சத்தியப் பிரமாண நிகழ்வு ஆளுநர் செயலக முன்றலில் நடைபெற்றது. Read More »

அரசியல்வாதிகள் மாறியது போன்று அதிகாரிகளும் மாறினால்தான் மக்கள் எதிர்பார்த்த ‘முறைமை மாற்றம்’ முழுமையடையும்!” – நேர்மை வார நிகழ்வில் ஆளுநர் நா.வேதநாயகன் உரை

அரசாங்கம் மாறுவதால் மட்டும் முறைமை மாற்றம் முழுமையடையாது. அரசியல்வாதிகள் மாறியது போன்று, அதிகாரிகளும் மாறினால் மாத்திரமே மக்கள் எதிர்பார்த்த அந்த மாற்றம் மக்களின் வாசற்படியை எட்டும், என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். ‘சட்டத்தை மதிக்கும் நேர்மைமிகு அரச சேவை’ எனும் தொனிப்பொருளில் வடக்கு மாகாண நேர்மை வார (27 ஜூலை 2026 தொடக்கம் 31 ஜூலை 2026 வரை) அறிமுக நிகழ்வு, இன்று திங்கட்கிழமை (27.07.2026) வடக்கு மாகாண பிரதம செயலாளர்

அரசியல்வாதிகள் மாறியது போன்று அதிகாரிகளும் மாறினால்தான் மக்கள் எதிர்பார்த்த ‘முறைமை மாற்றம்’ முழுமையடையும்!” – நேர்மை வார நிகழ்வில் ஆளுநர் நா.வேதநாயகன் உரை Read More »

இடைக்காடு மகா வித்தியாலயம் போர் சூழ்நிலைகளுக்குள் சிக்கியிருந்தபோதும் தனது தனித்துவத்தை இழக்காமல் இன்றும் ஒரு பெரிய விருட்சமாக உயர்ந்து நிற்கிறது – கௌரவ ஆளுநர்

ஒரு பாடசாலையானது ஒரு நூற்றாண்டைக் கடந்து பல தலைமுறைகளுக்குக் கல்விப் பணியாற்றி வருவது மிகவும் சிறப்பு வாய்ந்ததொரு மைல்கல்லாகும் எனத் தெரிவித்த வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் போர்ச் சூழ்நிலை மற்றும் இடப்பெயர்வு காரணங்களால் எமது பல பாடசாலைகள் தமது தனித்துவத்தை இழந்துவிட்டபோதும் இடைக்காடு மகா வித்தியாலயம் போர் சூழ்நிலைகளுக்குள் சிக்கியிருந்தபோதும் தனது தனித்துவத்தை இழக்காமல் இன்றும் ஒரு பெரிய விருட்சமாக உயர்ந்துநிற்பதாக தெரிவித்தார். ‘அறிவு புகட்டிய அன்னைக்கு ஓர் ஆராதனை’ எனும் தொனிப்பொருளில்

இடைக்காடு மகா வித்தியாலயம் போர் சூழ்நிலைகளுக்குள் சிக்கியிருந்தபோதும் தனது தனித்துவத்தை இழக்காமல் இன்றும் ஒரு பெரிய விருட்சமாக உயர்ந்து நிற்கிறது – கௌரவ ஆளுநர் Read More »