ஆளுநர்

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் மாதாந்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

வடக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றக் கொள்கை மாகாணப் பொதுச் சேவை ஆணைக்குழுவிடமிருந்து கிடைக்கப்பெற்று அனுமதிக்கப்பட்டவுடன், அடுத்த ஆண்டுக்கான இடமாற்ற நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் மாதாந்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் கௌரவ ஆளுநர் அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று (05.08.2026) புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாகாணத்தில் 3,304 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் 1,411 […]

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் மாதாந்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. Read More »

இன்றைய பிள்ளைகள் விலை கொடுத்து துரித உணவுகளைத் தேடிச் செல்வதைத் தவிர்த்து, எமது வீடுகளிலும் வளவுகளிலும் இலவசமாகக் கிடைக்கும் சத்துள்ள இலைகளையும் காய்கறிகளையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். – கௌரவ ஆளுநர் தெரிவித்தார்

வீடுகளில் இலவசமாகக் கிடைக்கும் சத்துள்ள இலைவகைகளை விடுத்து விலை கொடுத்து விரைவு உணவுகளை வாங்கி நோய்களை வளர்க்கின்றோம். இவற்றை மாற்றியமைப்பதற்கு, எங்கள் சமூகத்துக்கு போசாக்கின் மகத்துவத்தை உணர்த்தும் இத்தகைய கண்காட்சிகளும் நிகழ்வுகளும் வரவேற்கத்தக்கன என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். சுகாதார அமைச்சின் ‘தேசிய போசாக்கு மாதம்’ மற்றும் ‘ENOUGH’ பரப்புரைக்கு ஆதரவாக, சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை, வட்டுக்கோட்டை பிரதேச மருத்துவமனைச் சமூகம் மற்றும் வேள்ட் விசன் அமைப்பின் அனுசரணையுடன்

இன்றைய பிள்ளைகள் விலை கொடுத்து துரித உணவுகளைத் தேடிச் செல்வதைத் தவிர்த்து, எமது வீடுகளிலும் வளவுகளிலும் இலவசமாகக் கிடைக்கும் சத்துள்ள இலைகளையும் காய்கறிகளையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். – கௌரவ ஆளுநர் தெரிவித்தார் Read More »

சமூகத்துக்குச் சேவையாற்றக் கூடிய மாணவர்களை உருவாக்குவதில்தான் ஒரு கல்லூரியின் வெற்றி தங்கியிருக்கின்றது. – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

சமூகத்துக்குச் சேவையாற்றக் கூடியவாறு மாணவர்களை உருவாக்குவதில்தான் ஒரு கல்லூரியின் வெற்றி தங்கியிருக்கின்றது. கல்லூரிகள் மாணவர்களிடம் தலைமைத்துவப் பண்பையும் ஆளுமையையும் வளர்த்தெடுக்க வேண்டும்’ என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில் ‘அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை’ திட்டத்தின் கீழ் 51.88 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட தொழில்நுட்ப அலகு மற்றும் நூலகம் உள்ளிட்ட மூன்று மாடிக் கட்டடத் தொகுதியின் திறப்பு விழாவும், மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியின் கீழ்

சமூகத்துக்குச் சேவையாற்றக் கூடிய மாணவர்களை உருவாக்குவதில்தான் ஒரு கல்லூரியின் வெற்றி தங்கியிருக்கின்றது. – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். Read More »

ஒருங்கிணைந்த சுற்றுலாத்துறை மேம்பாடு தொடர்பில் கௌரவ ஆளுநர், சுற்றுலாத்துறை கௌரவ பிரதியமைச்சர் ஆகியோரிடையே விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.

வடக்கு மாகாணத்தின் ஒருங்கிணைந்த சுற்றுலாத்துறை மேம்பாடு தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், சுற்றுலாத்துறை கௌரவ பிரதியமைச்சர் ருவன் குணசேகர அவர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று (04.08.2026) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தின்போது கிளிநொச்சி மாவட்டத்தின் கௌதாரிமுனை சுற்றுலா மேம்பாட்டுத் திட்டம் குறித்து ஆளுநர் சுட்டிக்காட்டினார். அத்துடன், அப்பகுதியில் அடிப்படையான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக சுற்றுலாத்துறை அமைச்சின் ஊடான ஒத்துழைப்புகளையும் உதவிகளையும் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், வடக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையில்

ஒருங்கிணைந்த சுற்றுலாத்துறை மேம்பாடு தொடர்பில் கௌரவ ஆளுநர், சுற்றுலாத்துறை கௌரவ பிரதியமைச்சர் ஆகியோரிடையே விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. Read More »

வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பான மீளாய்வு கூட்டம், ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது.

வடக்கு மாகாண சுகாதாரம், சுதேச மருத்துவம், நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் 2026ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் செயற்திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்யும் மாதாந்தக் கூட்டம், வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் இன்று (04.08.2026) செவ்வாய்க்கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம், சுதேச மருத்துவத் திணைக்களம் மற்றும் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் ஆகியவற்றின்

வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பான மீளாய்வு கூட்டம், ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது. Read More »

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

வடக்கு மாகாணத்தில் 2026ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெற்செய்கை எதிர்பார்க்கப்பட்ட இலக்கைத் தாண்டி வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளதுடன், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் உணவுப் பாதுகாப்பையும் மேலும் வலுப்படுத்தும் நோக்கில் மூன்றாம் போகச் செய்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் தெரிவித்தார். சிறுபோகத்தில் இலக்கிடப்பட்ட பரப்பளவை விட அதிகளவான நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதுடன், கிடைக்கப்பெற்றுள்ள நீர்வளத்தை அறிவியல் அடிப்படையில் முகாமைத்துவம் செய்து மூன்றாம் போகச் செய்கைக்குத் தேவையான ஏற்பாடுகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டிருப்பது வடக்கு மாகாண விவசாயத் துறையின் குறிப்பிடத்தக்க

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. Read More »

சுகாதாரப் பணி உதவியாளர் பதவிக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கான நேர்முகத் தேர்வுகள் பண்ணையில் அமைந்துள்ள சுகாதார கிராமத்தில் ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றன

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் கீழுள்ள வைத்தியசாலைகள் மற்றும் நிறுவனங்களில் வெற்றிடமாகக் காணப்படும் சுகாதாரப் பணி உதவியாளர் (தரம் III) பதவிக்கான 852 வெற்றிடங்களில், முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் அனுமதிக்கமைவாக 300 வெற்றிடங்களை நிரப்புவதற்கான கட்டமைக்கப்பட்ட நேர்முகத் தேர்வுகள் இன்று திங்கட்கிழமை (03.08.2026) பண்ணையில் அமைந்துள்ள சுகாதார கிராமத்தில் மிகச் சிறப்பாக ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றன. இன்று முதல் எதிர்வரும் 21.08.2026 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள இத்தேர்வு நடவடிக்கைகளுக்காக ஆறு விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. தினமும்

சுகாதாரப் பணி உதவியாளர் பதவிக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கான நேர்முகத் தேர்வுகள் பண்ணையில் அமைந்துள்ள சுகாதார கிராமத்தில் ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றன Read More »

சமூகப் பிறழ்வுகளிலிருந்து இளைய தலைமுறையைப் பாதுகாக்க வேண்டுமாயின் , அவர்களுக்குக் கலைகள் மற்றும் விளையாட்டுக்கள் ஊடான சிறந்த மாற்றுப் பாதையை உருவாக்கிக் கொடுக்க வேண்டும், – கௌரவ ஆளுநர்

ஒரு சமூகத்தின் உண்மையான செல்வம் அதன் கட்டடங்களிலோ பொருளாதாரத்திலோ இல்லை. அது எமது பாரம்பரியம், பண்பாடு, கலைகள் மற்றும் வீர வரலாற்றில்தான் தங்கியுள்ளது. தொழில்நுட்பமும் செயற்கை நுண்ணறிவும் ஆதிக்கம் செலுத்தும் இன்றைய அதிவேக உலகில், எமது வேர்கள் மங்கிவிட்டால் நாம் முன்னேற்றமடைந்தாலும் எமது அடையாளத்தை இழக்க நேரிடும். கல்வியால் மனிதனின் அறிவு வளரும், ஆனால் வாழ்க்கையை முழுமைப்படுத்துவது கல்வி மட்டுமல்ல, அறிவுடனான பண்பு, திறமையுடனான ஒழுக்கம், கல்வியுடனான தலைமைத்துவம் ஆகியன இணைந்தால்தான் ஒரு முழுமையான மனிதன் உருவாகின்றான்.

சமூகப் பிறழ்வுகளிலிருந்து இளைய தலைமுறையைப் பாதுகாக்க வேண்டுமாயின் , அவர்களுக்குக் கலைகள் மற்றும் விளையாட்டுக்கள் ஊடான சிறந்த மாற்றுப் பாதையை உருவாக்கிக் கொடுக்க வேண்டும், – கௌரவ ஆளுநர் Read More »

வேலனை பிரதேச செயலகப் பிரிவில் மண்கும்பான் வெள்ளக்கடற்கரை ஜும்ஆ பள்ளிவாசலின் மீள் கட்டுமானப் பணிக்கு, அடிக்கல் நடும் விழா இடம்பெற்றது.

யாழ்ப்பாணம், வேலனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மண்கும்பான் வெள்ளக்கடற்கரை ஜும்ஆ பள்ளிவாசலின் மீள் கட்டுமானப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் அடிக்கல் நடும் விழா இன்று (02.08.2026) ஞாயிற்றுக்கிழமை காலை பள்ளிவாசல் வளாகத்தில் சிறப்பாக இடம்பெற்றது. சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கௌரவ முனீர் முனவ்பர் அவர்களின் பிரதம பங்குபற்றலுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் பிரதிநிதியாக ஆளுநரின் செயலாளர் சிவபாதசுந்தரம் சத்தியசீலன் அவர்கள் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தார். வெள்ளக்கடற்கரை

வேலனை பிரதேச செயலகப் பிரிவில் மண்கும்பான் வெள்ளக்கடற்கரை ஜும்ஆ பள்ளிவாசலின் மீள் கட்டுமானப் பணிக்கு, அடிக்கல் நடும் விழா இடம்பெற்றது. Read More »

கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்துக் கல்வி வலயங்களிலும் 54 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களின் சுயவிவரக் கோவைகளை இற்றைப்படுத்தும் நடவடிக்கை நிறைவு

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் நேரடி அறிவுறுத்தல் மற்றும் வழிகாட்டுதலுக்கு அமைவாக, வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்துக் கல்வி வலயங்களிலும் 54 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களின் தனிப்பட்ட சுயவிவரக் கோவைகளை இற்றைப்படுத்தும் நடமாடும் சேவை இன்று சனிக்கிழமை (01.08.2026) நிறைவடைந்துள்ளது. இத்திட்டத்தினூடாக 406 ஆசிரியர்கள் பயன்பெற்றுள்ளதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் ஓய்வுபெறும் ஆசிரியர்கள் உரிய காலப்பகுதிக்குள் தமக்கான ஓய்வூதியப் பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியாமையால் பல்வேறு சிரமங்களை

கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்துக் கல்வி வலயங்களிலும் 54 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களின் சுயவிவரக் கோவைகளை இற்றைப்படுத்தும் நடவடிக்கை நிறைவு Read More »