நெடுந்தீவில் அமைக்கப்பட்டுவரும் கலப்பு மின்உற்பத்தி நிலையத்தின் கட்டுமானங்களை வடக்கு மாகாண ஆளுநர் பார்வையிட்டார்
வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் நெடுந்தீவில் அமைக்கப்பட்டுவரும் கலப்பு மின்உற்பத்தி நிலையத்தின் கட்டுமானங்களை இன்று புதன்கிழமை (05.03.2025) பார்வையிட்டதுடன், நெடுந்தீவின் பல்வேறு பகுதிகளுக்கும் நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்தார். நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட மக்கள் குறைகேள் சந்திப்பில் பங்குகொள்வதற்காக ஆளுநர் நெடுந்தீவுக்குச் சென்றிருந்தார். இதன்போது மாவிலித்துறை – பெரியதுறை வீதியில் ஒரு பகுதி திருத்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் எஞ்சிய பகுதி மிகமோசமாக பயன்படுத்த முடியாத நிலைமை இருப்பதை ஆளுநர் நேரில் சென்று பார்வையிட்டார். […]
