வரியிறுப்பாளர்களின் நம்பிக்கையை வென்றெடுக்கும் வகையில் உள்ளூராட்சிமன்றங்களின் சேவைகள் அமையவேண்டும் -வடக்கு மாகாண ஆளுநர்
வரியிறுப்பாளர்கள் உள்ளூராட்சிமன்றங்களில் நம்பிக்கை வைக்கும்போதுதான் அவர்கள் தாமாகவே முன்வந்து வரியைச்செலுத்துவார்கள். வரியிறுப்பாளர்களின் நம்பிக்கையை வென்றெடுக்கும் வகையில் உள்ளூராட்சிமன்றங்களின் சேவைகள் அமையவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார். முதன் முதலாக உள்ளூராட்சிமன்றம் ஒன்று சுயமாக ஆதன மதிப்பீட்டை நிறைவேற்றி ஆதனவரி அறவிடும் நிகழ்வு வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை – கரவெட்டியின், வட்டாரம் -1 கம்பர்மலையில் 10.01.2025 அன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றது. கரவெட்டி பிரதேச சபையின் செயலர் க.கம்சநாதன் தனது […]
