கிளிநொச்சி புன்னைநீராவி அ.த.க. பாடசாலையில் அமைக்கப்பட்ட கட்டடம் ஆளுநரால் திறந்து வைக்கப்பட்டது
ஒவ்வொரு பாடசாலைகளினதும் பெறுபேறுகளை அடிப்படையாக வைத்தே எதிர்காலத்தில் அந்தப் பாடசாலைகளின் ஆசிரியர்கள், அதிபர்களின் இடமாற்றங்கள், பாடசாலை உட்கட்டமைப்பு விருத்திக்கான உதவிகள் என்பனவற்றை வழங்கலாமா என்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். கிளிநொச்சி புன்னைநீராவி அ.த.க. பாடசாலையில் மாகாண குறித்தொதுக்கப்பட்ட 29.75 மில்லியன் ரூபா நிதி உதவியில் அமைக்கப்பட்ட கட்டடம், வடக்கு மாகாண ஆளுநரால் வெள்ளிக்கிழமை (03.01.2025) திறந்து வைக்கப்பட்டது. பாடசாலைக்கு ஒன்றுகூடல் மண்டபம் அவசியமாக இருப்பதாக வலயக் கல்விப் பணிப்பாளரால் […]
