வடக்கு மாகாண மாற்றுத்திறனாளிகள் ஒன்றியத்தை (NPCODA) மீள இயக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் சங்கங்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட வடக்கு மாகாண மாற்றுத்திறனாளிகள் ஒன்றியத்தை (NPCODA) மீள இயக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. யாழ். போதனா மருத்துவமனை கண்சத்திர சிகிச்சை நிபுணர் Dr. மலரவன், வவுனியா பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளர் வி.சுப்பிரமணியம் ஆகியோர் வடக்கு மாகாண ஆளுநரை இன்று திங்கட்கிழமை 25.11.2024 சந்தித்துக் கலந்துரையாடினர். இதன்போது, வடக்கு மாகாண சபை இருந்த காலத்தில் உருவாக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் தொடர்பான கொள்கையை நடைமுறைப்படுத்துமாறு ஆளுநரிடம் […]
