Balasingam Kajenderan

தொழிற் சந்தை – 2024

வடக்கு மாகாண பிரதம செயலாளர் செயலகமும், யாழ்.மாவட்ட செயலகமும், இணைந்து சர்வோதயா, World Vision  நிறுவனங்களின் நிதியுதவியுடன் நடாத்தும் தொழிற்சந்தை, எதிர்வரும் 2024.02.20 மற்றும் 2024.02.21 ஆகிய திகதிகளில் மு.ப 9:00 முதல் பி.ப 4:30 வரை யாழ்ப்பாணம் கலாசார நிலையத்தில் (Jaffna Cultural Centre) இடம்பெறவிருக்கிறது.   அனைவரும் இந்நிகழ்விற்கு வருகைதந்து தொழிற்கல்விவாய்ப்பு, வேலைவாய்ப்பு,   சுயதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பிற்கான வாய்ப்புக்களைப் பெற்று உங்களின் எதிர்காலத்தை மேலும் வளப்படுத்திக் கொள்ளுங்கள்.   வடமாகாண பிரதம செயலாளர் செயலகமும் […]

தொழிற் சந்தை – 2024 Read More »

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் மேன்முறையீடுகள் தொடர்பான விசாரணைகள் வடக்குமாகாணத்திலேயே முதலில் நிறைவு செய்யப்பட்டதாக இராஜாங்க நிதி அமைச்சர் தெரிவிப்பு

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்ட செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான கலந்துரையாடல் இராஜாங்க நிதி அமைச்சர் செஹான் சேமசிங்க தலைமையில் இன்று (13.02.2024) நடைபெற்றது. கொழும்பு – 01 இல் அமைந்துள்ள நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் புதிய கேட்போர் கூடத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.   இந்த கலந்துரையாடலில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களும் கலந்துக்கொண்டார். அஸ்வெசும நலன்புரி திட்டம் நாடளாவிய ரீதியில் முன்னேடுக்கப்பட்டுள்ளதுடன், இந்த திட்டத்தின் இரண்டாம் கட்ட செயற்பாடுகளை இம்மாதம் 15ஆம் திகதி ஆரம்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் மேன்முறையீடுகள் தொடர்பான விசாரணைகள் வடக்குமாகாணத்திலேயே முதலில் நிறைவு செய்யப்பட்டதாக இராஜாங்க நிதி அமைச்சர் தெரிவிப்பு Read More »

யாழ்ப்பாணம் கொடிகாமம் தட்டாங்குளம் பிள்ளையார் வீதியை புனரமைக்க வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நடவடிக்கை

சுமார் 18 வருடங்களாக புனரமைக்கப்படாத யாழ்ப்பாணம் கொடிகாமம் தட்டாங்குளம் பிள்ளையார் வீதியை புனரமைக்க வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார். கிராம மக்களிடமிருந்து கிடைத்த கோரிக்கைக்கு அமைய, சுமார் 2.34 கிலோமீற்றர் வீதியை புனரமைப்பு செய்வது தொடர்பில் உள்ளுராட்சிமன்ற ஆணையாளருக்கு, கௌரவ ஆளுநர் அறிவுறுத்தினார். அதற்கமைய, சாவகச்சேரி பிரதேச சபையினால் வீதி புனரமைப்பிற்கான மதீப்பீட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டன. யாழ்ப்பாணம் கொடிகாமம் தட்டாங்குளம் பிள்ளையார் வீதியை முழுமையாக புனரமைக்க 42 மில்லியன் ரூபா

யாழ்ப்பாணம் கொடிகாமம் தட்டாங்குளம் பிள்ளையார் வீதியை புனரமைக்க வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நடவடிக்கை Read More »

மாகாண சுகாதார துறையில் காணப்படும் ஆளணி பற்றாக்குறை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் காணப்படும் 02 மகப்பேற்று விடுதிகள் புனரமைக்கப்பட்டு மக்கள் மயப்படுத்தும் நடவடிக்கை இன்று (09.02.2024)  முன்னெடுக்கப்பட்டது. மன்னார் நலன்புரி சங்கத்தின் லண்டன் கிளை அங்கத்தவர்களின் 38 மில்லியன் ரூபா நிதி அனுசரணையுடன்  மகப்பேற்று விடுதிகள் புனரமைக்கப்பட்டன. புனரமைக்கப்பட்ட விடுதிகளை மக்கள்மயப்படுத்தும் நடவடிக்கை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் பங்கேற்புடன் இன்று நடைபெற்றது. வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி, மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், மாவட்ட பொது வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்திய நிபுணர்கள், தாதியர்கள்,  மன்னார்

மாகாண சுகாதார துறையில் காணப்படும் ஆளணி பற்றாக்குறை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு Read More »

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி திட்டங்களுக்கு தேவையான பங்களிப்பை செய்ய தயார் என நெதர்லாந்து துணைத்தூதுவர் தெரிவிப்பு

நெதர்லாந்து நாட்டின் இலங்கைக்கான துணைத்தூதுவர் இவன் ருட்ஜென்ஸ் (Iwan Rutjens), வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை இன்று (08.02.2024) சந்தித்து கலந்துரையாடினார். யாழ்ப்பாணத்திலுள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் கௌரவ ஆளுநர் தெளிவுப்படுத்தினார். விடயங்களை கேட்டறிந்த நெதர்லாந்து நாட்டின் இலங்கைக்கான துணைத்தூதுவர் இவன் ருட்ஜென்ஸ் (Iwan Rutjens),, குடாநாட்டிற்கான குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கு தேவையான ஒத்துழைப்புகளை

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி திட்டங்களுக்கு தேவையான பங்களிப்பை செய்ய தயார் என நெதர்லாந்து துணைத்தூதுவர் தெரிவிப்பு Read More »

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டைசாவல்கட்டு மீனவர்களின் கோரிக்கை தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை சாவல்கட்டு கிராம மீனவர் சங்கத்தின் பிரதிநிதிகள் சிலர், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை , யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (08.02.2024) சந்தித்து தங்களின் கோரிக்கைகளை முன்வைத்தனர். காக்கைத்தீவு கடற்கரையில் தங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பகுதியை துப்பரவு செய்துக்கொள்வதற்கும், மீன்பிடி துறையை மேம்படுத்திக்கொள்வதற்கும் உரிய அனுமதிகளை பெற்றுக்கொடுக்குமாறு கோரிக்கைகளை கௌரவ ஆளுநரிடம் முன்வைத்தனர். ஆனைக்கோட்டை சாவல்கட்டு கிராம மீனவர்களின் கோரிக்கைகள் தொடர்பில் கடற்றொழில் அமைச்சருடன் கலந்துரையாடி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டைசாவல்கட்டு மீனவர்களின் கோரிக்கை தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு Read More »

நியமனங்களின் அடிப்படையில் ஆசிரியர்களை நெறிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு

வடக்கு மாகாணத்தின் கல்வி அபிவிருத்தி தொடர்பான மீளாய்வு கூட்டம் வவுனியா கலாசார மண்டபத்தில் 06.02.2024 அன்று  நடைபெற்றது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த, இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், மத்திய கல்வி அமைச்சின் அதிகாரிகள், மாகாண அமைச்சின் அதிகாரிகள், கல்வித்துறைசார் உத்தியோகஸ்தர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்துக்கொண்டனர். வடக்கு மாகாணத்தின் கல்வித்துறையில் காணப்படும் சிக்கல்களை நிவர்த்திக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக

நியமனங்களின் அடிப்படையில் ஆசிரியர்களை நெறிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு Read More »

பொதுமக்களுக்கானசேவையை உரியவாறு நிறைவேற்றுவதே அரச உத்தியோகஸ்தர்களின் கடமை என வடக்கு மாகாண கௌரவஆளுநர் வலியுறுத்தல்

வடக்கு மாகாணத்தின் கல்வி அபிவிருத்தி தொடர்பான மீளாய்வு கூட்டம், கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்தவின் பங்கேற்புடன், யாழ் மத்திய கல்லூரியில் இன்று (05.02.2024) நடைபெற்றது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், மத்திய அமைச்சின் உயர் அதிகாரிகள், மாகாண அமைச்சின் அதிகாரிகள், கல்வித்துறைசார் உத்தியோகஸ்தர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்துக்கொண்டனர். வடக்கு மாகாணத்தில் யாழ் மாவட்டத்தின் கல்வி அபிவிருத்தி தொடர்பிலேயே இன்றைய

பொதுமக்களுக்கானசேவையை உரியவாறு நிறைவேற்றுவதே அரச உத்தியோகஸ்தர்களின் கடமை என வடக்கு மாகாண கௌரவஆளுநர் வலியுறுத்தல் Read More »

பயிற்சி கருத்தரங்குகளை தவிர்த்து,செயற்பாட்டு திட்டங்களை முன்னெடுக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு.

எதிர்வரும் காலங்களில் பயிற்சி கருத்தரங்குகளை தவிர்த்து, இதுவரை வழங்கப்பட்ட பயிற்சிகளை கொண்டு செயற்றிட்டங்களை முன்னெடுக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். வடக்கு மாகாணத்தில் செயற்படும் உள்ளூர் மற்றும் சர்வதேச அரச சார்பற்ற  தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், வடக்கு மாகாணத்திலுள்ள அமைச்சுக்களின் செயலாளர்கள் ஆகியோருடன், கௌரவ ஆளுநரின் தலைமையில் விசேட கலந்துரையாடலொன்று நேற்று (31.01.2024) இடம்பெற்றது. அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் கடந்த வருடத்தில் மாத்திரம் 3187.649 (மூவாயிரத்து நூற்று எண்பத்தேழு தசம் ஆறு நான்கு ஒன்பது)

பயிற்சி கருத்தரங்குகளை தவிர்த்து,செயற்பாட்டு திட்டங்களை முன்னெடுக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு. Read More »

வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின், சிநேகபூர்வ மக்கள் சந்திப்பு ஆரம்பம்.

மக்கள் எதிர்நோக்கும் சிக்கல்களை கிராமங்களுக்கே சென்று ஆராயும் நடவடிக்கையை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் ஆரம்பித்துள்ளார். பல கிராமங்களின் மக்களை சனசமூக நிலையங்களூடாக ஒன்றிணைத்து, அவர்களுடன் கௌரவ ஆளுநர் சந்திப்புக்களை நடத்த வடக்கு மாகாண உள்ளுராட்சி திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய முதலாவது சிநேகபூர்வ மக்கள் சந்திப்பு யாழ்ப்பாணம், அரியாலை கிழக்கு, பூம்புகார் பகுதியில் நேற்று மாலை  (30.01.2024) நடைபெற்றது. அரியாலை கிழக்கு, பூம்புகார், நாவலடி, மணியந்தோட்டம், உதயபுரம் ஆகிய கிராமங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சனசமூக நிலையங்களின்

வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின், சிநேகபூர்வ மக்கள் சந்திப்பு ஆரம்பம். Read More »