சுதந்திரப் பறவைகள் மகளிர் பேரவையின் பன்னாட்டு மகளிர் தினம் கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது
கிளிநொச்சி மாவட்டத்தில் நான் மாவட்டச் செயலராக இருந்த காலத்தில் இங்கிருந்த பெண்கள் அமைப்புக்கள்தான் பல திட்டங்களை வெற்றிகரமாகவும் சிறப்பாகவும் செயற்படுத்தியிருந்தன. நியாப் திட்டத்தின் கீழான கடன் வழங்கலாக இருந்தாலும் சரி எந்தவொரு விடயமாக இருந்தாலும் சரி பெண்கள் தலைமைத்துவத்தை ஆளுமையாக வழங்கி அதைச் செய்திருந்தார்கள். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பெருமையுடன் குறிப்பிட்டார். சுதந்திரப் பறவைகள் மகளிர் பேரவையின் பன்னாட்டு மகளிர் தினம் கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் இன்று சனிக்கிழமை (08.03.2025) நடைபெற்றது. […]
