கிளிநொச்சி சிவபாதகலையகம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் புனர்வாழ்வும் புதுவாழ்வும் அமைப்பினால் நிர்மாணிக்கப்பட்ட கட்டடம் வடக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைக்கப்பட்டது.
கல்வி இல்லாமல் எதுவுமில்லை. மாணவர்கள் அதை நினைவிலிருத்தி தங்கள் கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் ஆலோசனை கூறினார். கிளிநொச்சி சிவபாதகலையகம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் புனர்வாழ்வும் புதுவாழ்வும் அமைப்பினால் நிர்மாணிக்கப்பட்ட கட்டடம் வடக்கு மாகாண ஆளுநரால் 12.03.2025 அன்று புதன் கிழமை திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் தலைமை உரையாற்றிய பாடசாலை அதிபர், பாடசாலைக்கு வருவதற்கான வீதியைப் புனரமைத்துத் தருமாறு கோரிக்கை முன்வைத்தார். அதேபோல பாடசாலைக்கு அருகிலுள்ள […]
