Balasingam Kajenderan

முன்மாதிரி கிராமமாக நயினாதீவை மாற்ற வேண்டும் ! வடக்கு மாகாண ஆளுநர் வலியுறுத்தல்.!

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் தேவைகள் தொடர்பாக ஆராயும் மற்றுமொரு சிநேகபூர்வ கலந்துரையாடல், உள்ளூராட்சி திணைக்களத்தின் ஏற்பாட்டில்  நயினாதீவு அமுதசுரபி மண்டபத்தில் இன்று (20.02.2024) இடம்பெற்றது. வடக்கு மாகாண கெளரவ ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் அவர்களின்  தலைமையில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் உள்ளூராட்சி திணைக்கள ஆணையாளர் எஸ்.பிரணவநாதன் மற்றும் அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். யாழ் குடாநாடாடில் காணப்படும் தீவுகளில் ஒன்றான நயினாதீவில் சுமார் ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த ஐயாயிரம் பேர் வரை வசிக்கின்றனர். மூன்று […]

முன்மாதிரி கிராமமாக நயினாதீவை மாற்ற வேண்டும் ! வடக்கு மாகாண ஆளுநர் வலியுறுத்தல்.! Read More »

இலங்கை சாரணர் சங்கத்தின் 10வது ஜம்போறி மாநாட்டில் யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து 11 பாடசாலைகளைச் சேர்ந்த 253 மாணவர்கள் பங்குபற்றவுள்ளனர்

இலங்கை சாரணர் சங்கத்தின்  10ஆவது ஜம்போறி மாநாடு திருகோணமலையில் நாளை 21ஆம் திகதி ஆரம்பித்து 26ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் யாழ். மாவட்டத்திலிருந்து 11 பாடசாலைகளை பிரதிநிதித்துவப்படுத்தி 253 சாரணர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். சாரணர்களை கெளரவித்து அனுப்பிவைக்கும் நிகழ்வு  வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தலைமையில் இன்று (20) பிற்பகல் யாழ் பழைய பூங்காவில் இடம்பெற்றிருந்தது. நிகழ்வின் போது யாழ். மாவட்ட சாரணர் கொடிக்கான சாரணர் அணிவகுப்பு இடம்பெற்றதுடன், சாரணர்களுக்கான சீருடைகள் மற்றும் ஜம்போறியில் பங்குபற்றும் சாரணர்களுக்கு

இலங்கை சாரணர் சங்கத்தின் 10வது ஜம்போறி மாநாட்டில் யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து 11 பாடசாலைகளைச் சேர்ந்த 253 மாணவர்கள் பங்குபற்றவுள்ளனர் Read More »

யாழ். பாதுகாப்புப்படைத் தலைமையக கட்டளைத்தளபதி வடக்குமாகாண கெளரவ ஆளுநருடன் கலந்துரையாடல்.

வடக்கு மாகாண கெளரவ ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் அவர்களுக்கும் யாழ் பிராந்திய பாதுகாப்புப்படைத் தலைமையகக் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்கவுக்கும் இடையில் விஷேட கலந்துரையாடல் ஒன்று இன்று(19/02/2024) முற்பகல் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. யாழ்பிராந்தியத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை உரிய வகையில் முன்னெடுத்து செல்லல், பொது மக்களின் நாளாந்த வாழ்வியல் செயற்பாடுகளின் போது தேவையான பாதுகாப்பை பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது. யாழ் மாவட்டத்தில் மீள குடியேற்றப்பட்டவர்களுக்காக பாதுகாப்புப் படையினரால்

யாழ். பாதுகாப்புப்படைத் தலைமையக கட்டளைத்தளபதி வடக்குமாகாண கெளரவ ஆளுநருடன் கலந்துரையாடல். Read More »

வட மாகாண கெளரவ ஆளுநருக்கும் கடற்படையின் வடபிராந்தியக் கட்டளைத் தளபதிக்குமிடையில் சந்திப்பு!

வட மாகாண கெளரவ ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் அவர்களுக்கும் இலங்கை கடற்படையின் வடபிராந்தியக் கட்டளைத்தளபதி ரியல் அட்மிரல் காஞ்சன பானகொட அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு வடக்குமாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று நடைபெற்றது. வடக்குமாகணத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக கடற்படையினரிடமிருந்து ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்வது தொடர்பாக உள்ள சிக்கல்கள் பற்றி இதன்போது கலந்துரையாடப்பட்டது. உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாப்பயணிகளின் அபிமானத்தை வெற்றிகொள்ளும் நோக்கில், கடற்படையின் வடபிராந்தியத்திற்குள் காணப்படும் சுற்றுலாத்தளங்களை அபிவிருத்தி செய்வதற்கான ஒத்துழைப்பை வழங்குமாறு கெளரவ ஆளுநர் இதன் போது கோரிக்கை

வட மாகாண கெளரவ ஆளுநருக்கும் கடற்படையின் வடபிராந்தியக் கட்டளைத் தளபதிக்குமிடையில் சந்திப்பு! Read More »

தொழிற் சந்தை – 2024

வடக்கு மாகாண பிரதம செயலாளர் செயலகமும், யாழ்.மாவட்ட செயலகமும், இணைந்து சர்வோதயா, World Vision  நிறுவனங்களின் நிதியுதவியுடன் நடாத்தும் தொழிற்சந்தை, எதிர்வரும் 2024.02.20 மற்றும் 2024.02.21 ஆகிய திகதிகளில் மு.ப 9:00 முதல் பி.ப 4:30 வரை யாழ்ப்பாணம் கலாசார நிலையத்தில் (Jaffna Cultural Centre) இடம்பெறவிருக்கிறது.   அனைவரும் இந்நிகழ்விற்கு வருகைதந்து தொழிற்கல்விவாய்ப்பு, வேலைவாய்ப்பு,   சுயதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பிற்கான வாய்ப்புக்களைப் பெற்று உங்களின் எதிர்காலத்தை மேலும் வளப்படுத்திக் கொள்ளுங்கள்.   வடமாகாண பிரதம செயலாளர் செயலகமும்

தொழிற் சந்தை – 2024 Read More »

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் மேன்முறையீடுகள் தொடர்பான விசாரணைகள் வடக்குமாகாணத்திலேயே முதலில் நிறைவு செய்யப்பட்டதாக இராஜாங்க நிதி அமைச்சர் தெரிவிப்பு

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்ட செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான கலந்துரையாடல் இராஜாங்க நிதி அமைச்சர் செஹான் சேமசிங்க தலைமையில் இன்று (13.02.2024) நடைபெற்றது. கொழும்பு – 01 இல் அமைந்துள்ள நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் புதிய கேட்போர் கூடத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.   இந்த கலந்துரையாடலில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களும் கலந்துக்கொண்டார். அஸ்வெசும நலன்புரி திட்டம் நாடளாவிய ரீதியில் முன்னேடுக்கப்பட்டுள்ளதுடன், இந்த திட்டத்தின் இரண்டாம் கட்ட செயற்பாடுகளை இம்மாதம் 15ஆம் திகதி ஆரம்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் மேன்முறையீடுகள் தொடர்பான விசாரணைகள் வடக்குமாகாணத்திலேயே முதலில் நிறைவு செய்யப்பட்டதாக இராஜாங்க நிதி அமைச்சர் தெரிவிப்பு Read More »

யாழ்ப்பாணம் கொடிகாமம் தட்டாங்குளம் பிள்ளையார் வீதியை புனரமைக்க வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நடவடிக்கை

சுமார் 18 வருடங்களாக புனரமைக்கப்படாத யாழ்ப்பாணம் கொடிகாமம் தட்டாங்குளம் பிள்ளையார் வீதியை புனரமைக்க வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார். கிராம மக்களிடமிருந்து கிடைத்த கோரிக்கைக்கு அமைய, சுமார் 2.34 கிலோமீற்றர் வீதியை புனரமைப்பு செய்வது தொடர்பில் உள்ளுராட்சிமன்ற ஆணையாளருக்கு, கௌரவ ஆளுநர் அறிவுறுத்தினார். அதற்கமைய, சாவகச்சேரி பிரதேச சபையினால் வீதி புனரமைப்பிற்கான மதீப்பீட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டன. யாழ்ப்பாணம் கொடிகாமம் தட்டாங்குளம் பிள்ளையார் வீதியை முழுமையாக புனரமைக்க 42 மில்லியன் ரூபா

யாழ்ப்பாணம் கொடிகாமம் தட்டாங்குளம் பிள்ளையார் வீதியை புனரமைக்க வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நடவடிக்கை Read More »

மாகாண சுகாதார துறையில் காணப்படும் ஆளணி பற்றாக்குறை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் காணப்படும் 02 மகப்பேற்று விடுதிகள் புனரமைக்கப்பட்டு மக்கள் மயப்படுத்தும் நடவடிக்கை இன்று (09.02.2024)  முன்னெடுக்கப்பட்டது. மன்னார் நலன்புரி சங்கத்தின் லண்டன் கிளை அங்கத்தவர்களின் 38 மில்லியன் ரூபா நிதி அனுசரணையுடன்  மகப்பேற்று விடுதிகள் புனரமைக்கப்பட்டன. புனரமைக்கப்பட்ட விடுதிகளை மக்கள்மயப்படுத்தும் நடவடிக்கை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் பங்கேற்புடன் இன்று நடைபெற்றது. வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி, மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், மாவட்ட பொது வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்திய நிபுணர்கள், தாதியர்கள்,  மன்னார்

மாகாண சுகாதார துறையில் காணப்படும் ஆளணி பற்றாக்குறை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு Read More »

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி திட்டங்களுக்கு தேவையான பங்களிப்பை செய்ய தயார் என நெதர்லாந்து துணைத்தூதுவர் தெரிவிப்பு

நெதர்லாந்து நாட்டின் இலங்கைக்கான துணைத்தூதுவர் இவன் ருட்ஜென்ஸ் (Iwan Rutjens), வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை இன்று (08.02.2024) சந்தித்து கலந்துரையாடினார். யாழ்ப்பாணத்திலுள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் கௌரவ ஆளுநர் தெளிவுப்படுத்தினார். விடயங்களை கேட்டறிந்த நெதர்லாந்து நாட்டின் இலங்கைக்கான துணைத்தூதுவர் இவன் ருட்ஜென்ஸ் (Iwan Rutjens),, குடாநாட்டிற்கான குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கு தேவையான ஒத்துழைப்புகளை

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி திட்டங்களுக்கு தேவையான பங்களிப்பை செய்ய தயார் என நெதர்லாந்து துணைத்தூதுவர் தெரிவிப்பு Read More »

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டைசாவல்கட்டு மீனவர்களின் கோரிக்கை தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை சாவல்கட்டு கிராம மீனவர் சங்கத்தின் பிரதிநிதிகள் சிலர், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை , யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (08.02.2024) சந்தித்து தங்களின் கோரிக்கைகளை முன்வைத்தனர். காக்கைத்தீவு கடற்கரையில் தங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பகுதியை துப்பரவு செய்துக்கொள்வதற்கும், மீன்பிடி துறையை மேம்படுத்திக்கொள்வதற்கும் உரிய அனுமதிகளை பெற்றுக்கொடுக்குமாறு கோரிக்கைகளை கௌரவ ஆளுநரிடம் முன்வைத்தனர். ஆனைக்கோட்டை சாவல்கட்டு கிராம மீனவர்களின் கோரிக்கைகள் தொடர்பில் கடற்றொழில் அமைச்சருடன் கலந்துரையாடி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டைசாவல்கட்டு மீனவர்களின் கோரிக்கை தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு Read More »