மட்டுவிலில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையத்தை மீள இயக்குவதென்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மட்டுவிலில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையத்தை மீள இயக்குவதென்று யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவரும் கௌரவ அமைச்சருமான இ.சந்திரசேகரன் மற்றும் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவரும் கௌரவ ஆளுநருமான நா.வேதநாயகன் ஆகியோரின் பங்கேற்புடன் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மட்டுவிலில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையத்தை, ஆளுநர், அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், யாழ்.மாவட்டச் செயலர் ம.பிரதீபன், சாவகச்சேரி பிரதேச செயலர், சாவகச்சேரி பிரதேச சபையின் செயலாளர், மாகாண மற்றும் மாவட்ட விவசாயத் திணைக்களப் […]
