Balasingam Kajenderan

நூலக நிறுவனத்துக்கு வடக்கு மாகாண ஆளுநர் விஜயம்

யாழ்ப்பாணம் சோமசுந்தரம் ஒழுங்கையில் அமைந்துள்ள நூலக நிறுவனத்துக்கு அந்த நிறுவனத்தின் அழைப்பின்பேரில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் 29.04.2025 அன்று செவ்வாய்க்கிழமை பயணம் மேற்கொண்டார். நூலக நிறுவனத்தின் செயற்பாடுகளை ஆளுநர் பார்வையிட்டதுடன், அவர்களின் தேவைப்பாடுகள் தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டார்.  

நூலக நிறுவனத்துக்கு வடக்கு மாகாண ஆளுநர் விஜயம் Read More »

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் 2025ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்ட மீளாய்வுக் கூட்டம்

2025ஆம் ஆண்டுக்கான திட்டங்களின் நடைமுறைப்படுத்தலின் முன்னேற்றம் எதிர்பார்க்கப்பட்ட அளவில் இல்லை எனச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், அமைச்சின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் ஒதுக்கப்பட்ட நிதியை ஒதுக்கிய திட்டங்களுக்கு உரிய காலப்பகுதிக்குள் செலவு செய்து முடிக்கவேண்டியது பொறுப்பு எனக் குறிப்பிட்டார். திட்டங்களை உரிய காலத்தில் நடைமுறைப்படுத்தி முடிக்காமல் அதற்கு சாட்டுப்போக்குச் சொல்லவேண்டாம் எனவும் தெரிவித்தார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் 2025ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்ட மீளாய்வுக் கூட்டம் 29.04.2025 அன்று

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் 2025ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்ட மீளாய்வுக் கூட்டம் Read More »

கிளிநொச்சி இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்ஷா பூங்காவுக்கு வடக்கு மாகாண ஆளுநர் இன்று பயணம் மேற்கொண்டார்.

வடக்கில் முதலீடுகளை மேற்கொண்டுள்ளவர்கள் எதிர்கொள்ளும் சவால்களைக் கண்டறியும் வகையில், கிளிநொச்சி இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்ஷா பூங்காவுக்கு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (25.04.2025) பயணம் மேற்கொண்டார். அதன் நிறுவுனரும் தலைவருமான க.பாஸ்கரன் ஆளுநரை வரவேற்றதுடன், 150 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள அந்தப் பூங்காவை ஆளுநருக்கு சுற்றிக் காண்பித்தார். அதன் பின்னர் றீச்ஷா நிறுவனத்தினருடனான சந்திப்பில் ஆளுநர் கலந்துகொண்டார். அரச திணைக்களங்களின் ஒத்துழைப்பு கிடைக்கப்பெறாமை, அனுமதிகளைப் பெற்றுக் கொள்வதில் இழுத்தடிப்புக்கள், போக்குவரத்து வசதியீனங்கள்,

கிளிநொச்சி இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்ஷா பூங்காவுக்கு வடக்கு மாகாண ஆளுநர் இன்று பயணம் மேற்கொண்டார். Read More »

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேசத்துக்கு வடக்கு மாகாண ஆளுநர் களப்பயணம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேசத்துக்கு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் 24.04.2025 அன்று வியாழக்கிழமை களப்பயணம் மேற்கொண்டு பல்வேறு பகுதிகளையும் பார்வையிட்டார். வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திருமதி தேவநந்தினி பாபு, வடக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் எந்திரி வ.ஜெகானந்தன், முல்லைத்தீவு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எஸ்.ஜசிந்தன், வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் பிரதம பொறியியலாளர் எஸ்.ரகுநந்தன், மாந்தை கிழக்கு பிரதேச சபையின் செயலாளர்

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேசத்துக்கு வடக்கு மாகாண ஆளுநர் களப்பயணம் Read More »

வடக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுடனான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது

ஒரு சில உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் மக்களை அலைக்கழிப்பதை – பழிவாங்குவதை நிறுத்தாவிடின் எதிர்காலத்தில் அவர்களுக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுத்து தண்டனையை வழங்குவதைத்தவிர வேறுவழியில்லை என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் எச்சரிக்கைவிடுத்தார். வடக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுடனான ஏப்ரல் மாதத்துக்கான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் 23.04.2025 அன்று புதன்கிழமை இடம்பெற்றது. கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், தொடர்ச்சியாக கலந்துரையாடல்கள் நடத்தப்படுகின்றபோதும் இங்கு எடுக்கப்படும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவது மந்தமாக இருக்கின்றது. இதற்கும்

வடக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுடனான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது Read More »

கலைகள் ஊடாக இளையோரை – மாணவர்களை வழிப்படுத்துவதற்கு எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என்பது தொடர்பில் ஆராயும் முதல்கட்டக் கலந்துரையாடல்

கலைகள் ஊடாக இளையோரை – மாணவர்களை வழிப்படுத்துவதற்கு எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என்பது தொடர்பில் ஆராயும் முதல்கட்டக் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் 22.04.2025 அன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், இன்றைய இளையோர் மத்தியில் சமூகப்பிறழ்வு அதிகரித்துச் செல்கின்றது. இளையோருக்கு பொழுதுபோக்குவதற்கான நேரமும் குறைவாகவுள்ளதுடன் அவர்களுக்கு பொழுதுபோக்குக்கான இடவசதிகளும் இல்லை. பாடசாலை மாணவர்கள் பாடசாலை முடிந்த பின்னர் தனியார் கல்வி நிறுவனங்கள் என்று ஓடிக்கொண்டேயிருக்கின்றனர். அவர்கள்

கலைகள் ஊடாக இளையோரை – மாணவர்களை வழிப்படுத்துவதற்கு எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என்பது தொடர்பில் ஆராயும் முதல்கட்டக் கலந்துரையாடல் Read More »

யாழ்ப்பாண மாவட்டத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்ட காணிகளில் விவசாயச் செய்கையை விரைவுபடுத்துவதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பது தொடர்பான கலந்துரையாடல்

யாழ்ப்பாண மாவட்டத்தின் வலி.வடக்கு பிரதேச செயலர் பிரிவில் கடந்த ஆண்டு மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்ட காணிகளில் விவசாயச் செய்கையை விரைவுபடுத்துவதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பது தொடர்பான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் 22.04.2025 அன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், கடந்த ஆண்டு ஆரம்பத்தில் மக்களின் விவசாய நடவடிக்கைகளுக்கு என காணிகள் அனுமதிக்கப்பட்டிருந்தன. ஆனால் அந்தக் காணிகளில் மக்கள் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் பல இடர்பாடுகளை எதிர்கொள்கின்றனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்ட காணிகளில் விவசாயச் செய்கையை விரைவுபடுத்துவதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பது தொடர்பான கலந்துரையாடல் Read More »

வடக்கு மாகாணத்தில் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான பொறிமுறையை உருவாக்குவது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல்

வடக்கு மாகாணத்தில் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்துவது தொடர்பில் பல தடவைகள் கலந்துரையாடப்பட்டபோதும் அது முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை எனச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், மக்கள் இதனால் பெரும் வாழ்வாதாரப் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளமையை கருத்திலெடுத்தாவது விரைவாகவும் முழு வீச்சிலும் கட்டுப்படுத்த அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைக்கவேண்டும் என்று கோரினார். வடக்கு மாகாணத்தில் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான பொறிமுறையை உருவாக்குவது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் 22.04.2025 அன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கலந்துரையாடலின்

வடக்கு மாகாணத்தில் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான பொறிமுறையை உருவாக்குவது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் Read More »

சித்திரைப் புத்தாண்டுக் கொண்டாட்டம் – 2025

போர்த் தேங்காய், கிட்டிப்புள்ளு போன்ற விளையாட்டுக்கள் இன்றைய சிறுவர்களுக்குத் தெரியுமோ தெரியவில்லை. அப்படி மறந்துபோகின்ற எங்கள் பாரம்பரிய விளையாட்டுக்களை நினைவூட்டி அடுத்த தலைமுறைக்கு கடத்தும் வகையில் இந்தப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தை ஒழுங்கு செய்தமைக்காக பாராட்டுகின்றேன் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின், பண்பாட்டலுவல்கள் அலகின் ஏற்பாட்டில் விளையாட்டுத் திணைக்களம், சுற்றுலாப் பணியகம் மற்றும் வலி. தெற்கு பிரதேச சபை இணைந்து

சித்திரைப் புத்தாண்டுக் கொண்டாட்டம் – 2025 Read More »

கிறீன் லேயர் அமைப்பின் நாற்றுப் பண்ணையை வடக்கு மாகாண ஆளுநர் பார்வையிட்டார்

கோப்பாய் பிரதேச செயலர் பிரிவிலுள்ள கிறீன் லேயர் அமைப்பின் நாற்றுப் பண்ணையை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் 16.04.2025 அன்று புதன்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார். அங்கு உற்பத்தி செய்யப்படும் மரக்கன்றுகளைப் பார்வையிட்டதுடன், எதிர்காலத்தில் அந்த அமைப்பு முன்னெடுக்கவுள்ள திட்டங்கள் தொடர்பிலும் நிறுவனத்தினருடன் கலந்துரையாடினார். இதன்போது கோப்பாய் பிரதேச செயலர் ச.சிவஸ்ரீ அவர்களும் இணைந்திருந்தார்.

கிறீன் லேயர் அமைப்பின் நாற்றுப் பண்ணையை வடக்கு மாகாண ஆளுநர் பார்வையிட்டார் Read More »