‘நல்லாட்சி வள மையம்’ (Good Governance Resource Center) வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களால்திறந்து வைக்கப்பட்டது.
கைதடியிலுள்ள வடக்கு மாகாண உள்ளூராட்சித் திணைக்களத்துக்குரிய ‘நல்லாட்சி வள மையம்’ (Good Governance Resource Center) வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் 11.04.2025 அன்று வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. உலக வங்கியின் நிதி உதவியுடன் உள்ளூர் அபிவிருத்தி உதவித் திட்டத்தின் கீழ் இந்தக் கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. கட்டடத்துக்கான நினைவுக்கல்லை வடக்கு மாகாண ஆளுநருடன், வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவனும் இணைந்து திரை நீக்கம் செய்தனர். அதன் பின்னர் கட்டடத்தை ஆளுநர் திறந்து வைத்தார். […]
