Balasingam Kajenderan

புலம்பெயர் உறவுகளின் முதலீடுகளை வரவேற்பதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர், இலங்கைக்கான நியூசிலாந்து துணை உயர்ஸ்தானிகரிடம் தெரிவிப்பு

இலங்கைக்கான நியூசிலாந்து  துணை உயர்ஸ்தானிகர் அன்ரேவ் ட்ராவெள்ளர்  (Andrew Traveller), வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களை இன்று (21.03.2024) சந்தித்து கலந்துரையாடினார். யாழ்ப்பாணத்திலுள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. வடக்கு மாகாணத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் இலங்கைக்கான நியூசிலாந்து  துணை உயர்ஸ்தானிகர் கௌரவ ஆளுநரிடம் கேட்டறிந்துக்கொண்டார். மாகாணத்தின் கல்வி, பொருளாதார, வாழ்வியல்நிலை தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் காணி விடுவிப்பு, மீள்குடியேற்றம், சுற்றுலாத்துறை அபிவிருத்தி […]

புலம்பெயர் உறவுகளின் முதலீடுகளை வரவேற்பதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர், இலங்கைக்கான நியூசிலாந்து துணை உயர்ஸ்தானிகரிடம் தெரிவிப்பு Read More »

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதிக்கும், கௌரவ ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட உப அலுவலகத்தின் தலைமை அதிகாரி அலெக்ஸாண்டர் புரோவ் (Aleksandr Burov), வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை, யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று  (19.03.2024) சந்தித்து கலந்துரையாடினார். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நிகழ்ச்சி திட்டங்கள் தொடர்பில் இதன்போது கௌரவ ஆளுநருடன் கலந்துரையாடப்பட்டது.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதிக்கும், கௌரவ ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு Read More »

பரசூட் முறை மூலமாக நாற்றுநடுகை வயல் விழா – மன்னார் மாவட்டம்

மன்னார் மாவட்டத்தின் 2023/24 காலபோகத்தில் குளங்கள் மற்றும் கிராமங்கள் மறுமலர்ச்சி (CRIWMP) திட்டத்தின் உதவியுடன் விவசாய திணைக்களத்தின் தொழில்நுட்ப வழிகாட்டலுடன் பரசூட் முறையை ஊக்கவிக்கும் முகமாக 20 ஏக்கர்களில் பரசூட் முறை மூலம் நடுகை செய்யப்பட்டது. அதற்கமைவாக ஆட்காட்டிவெளி விவசாய போதனாசிரியர் பிரிவின் கீழ் வரும் இசங்கன்குளம் பகுதியில் விவசாய போதனாசிரியர் செல்வி ஞா. கஜகர்ணியின் ஆலோசனைகளுக்கு அமைவாக திரு க.வேதநாயகம் எனும் விவசாயி குறித்த முறைமூலம் நெற்செய்கை மேற்கொண்டிருந்தார். மேற்படி நெற்செய்கையின் முன்னேற்றத்தினை ஏனைய விவசாயிகள்

பரசூட் முறை மூலமாக நாற்றுநடுகை வயல் விழா – மன்னார் மாவட்டம் Read More »

சிறிய செயற்திட்டங்கள் ஊடாக பாரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.– வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு.

நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில், சிறியசெயற்திட்டங்கள் ஊடாக பாரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் தெரிவித்துள்ளார். இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான ரோட்டரி கழகத்தின் தலைவர் தெரிவு மற்றும் பயிற்சி மாநாட்டின் பிரதம விருந்தினராக கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே கௌரவ ஆளுநர் இவ்விடயத்தை குறிப்பிட்டார். போலியோ தடுப்பு மற்றும் கருப்பைவாய் புற்றுநோய் சிகிச்சை உள்ளிட்டசிறந்த சேவைகளை ரோட்டரி கழகம் முன்னெடுத்துச் செல்வது மகிழ்ச்சி அளிப்பதாக

சிறிய செயற்திட்டங்கள் ஊடாக பாரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.– வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு. Read More »

பெண் தொழில்முனைவோருக்கான சிறந்த சந்தை வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்க வேண்டியது அவசியம் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்ற பெண் தொழில் முனைவோருக்கான புதிய  செயல்திட்டத்தின் அறிமுக நிகழ்வின் பிரதம அதிதியாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்  அவர்கள் கலந்து சிறப்பித்தார். கனேடிய உலக பல்கலைக்கழக சேவை (WUSC)அமைப்பானது  GRIT  எனும் புதிய  செயல்திட்டத்தை ( Growth, Resilience,  Investment and training ) வளர்ச்சி, மீண்டெழும்தன்மை,  முதலீடு மற்றும் பயிற்சி ஆகிவற்றை நோக்கமாக கொண்டு ஆரம்பித்துள்ளது.  GRIT  செயல்திட்டமானது  வட மாகாணத்திலுள்ள பெண் தொழில்முனைவோருக்கான,

பெண் தொழில்முனைவோருக்கான சிறந்த சந்தை வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்க வேண்டியது அவசியம் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு. Read More »

அரச சார்பற்ற மற்றும் சர்வதேச அமைப்புகளை ஒருங்கிணைப்பதற்கான தேவை காணப்படுவதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் UNDP யிடம் தெரிவிப்பு

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தின் இலங்கைக்கான கூட்டுறவு அபிவிருத்தி பிரிவின் தலைமை அதிகாரி லின்டா எரிக், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களை சந்தித்து கலந்துரையாடினார். கௌரவ ஆளுநரின் யாழ்ப்பாணத்திலுள்ள உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இன்று (14.03.2024) இந்த சந்திப்பு நடைபெற்றது. வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு உள்ளூர் மற்றும் சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புகளுடன் அரச சார்பற்ற அமைப்புக்களின் உதவிகளும் தேவைப்படுவதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவித்தார். சர்வதேச அமைப்புகளை ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகள் பின்னடைந்துள்ளதால் அதனை

அரச சார்பற்ற மற்றும் சர்வதேச அமைப்புகளை ஒருங்கிணைப்பதற்கான தேவை காணப்படுவதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் UNDP யிடம் தெரிவிப்பு Read More »

வடக்கில் முன்னெடுக்கக்கூடிய சுற்றுலாத்துறை அபிவிருத்தி திட்டங்கள் குறித்து கௌரவ ஆளுநருடன் இந்திய உயர் அதிகாரிகள் கலந்துரையாடல்

வடக்கு மாகாணத்தில் காணப்படும் சுற்றுலாத் தளங்களை அபிவிருத்தி செய்தல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இலங்கைக்கான இந்திய பதில் உயர்ஸ்தானிகர்  கலாநிதி சத்வஞ்சல் பாண்டே (Dr.Satvanjal Pandey) உள்ளிட்ட குழுவினர் வடக்கு மாகாண கௌரவ ஆளுநரை சந்தித்து கலந்துரையாடினர். யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் செவிதி சாய் முரளியும் இந்த சந்திப்பில் கலந்துக்கொண்டார். பலாலி விமான நிலைய அபிவிருத்தி, சென்னையிலிருந்து பலாலிக்கான விமான சேவையை அதிகரித்தல், காங்கேசன்துறைக்கும் தூத்துக்குடிக்குமான பயணிகள் கப்பல் சேவை போன்ற திட்டங்கள் தொடர்பில்

வடக்கில் முன்னெடுக்கக்கூடிய சுற்றுலாத்துறை அபிவிருத்தி திட்டங்கள் குறித்து கௌரவ ஆளுநருடன் இந்திய உயர் அதிகாரிகள் கலந்துரையாடல் Read More »

சமுத்திர பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுப்பது குறித்து அவுஸ்திரேலிய நிபுணர்கள் குழாம் வடக்கு மாகாண கௌரவ ஆளுநருடன் கலந்துரையாடல்

சமுத்திர பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான ஆரம்பகட்ட கள ஆய்வில் ஈடுபட்டுள்ள அவுஸ்திரேலிய நிபுணர்கள் குழாம், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை நேற்று (12.03.2024) மாலை சந்தித்து கலந்துரையாடினர். இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல் மற்றும் பொருளாதார துறையின் முதலாம் நிலை செயலாளரின் தலைமையில் குறித்த நிபுணர்கள் குழாம் கௌரவ ஆளுநரை சந்தித்து கலந்துரையாடினர். வடக்கு மாகாண மக்களின் தற்போதைய வாழ்வியல் செயற்பாடுகள், பாதுகாப்பு, சுகாதாரம், சுற்றுலாத்துறை, உட்கட்டமைப்பு வசதிகள், சமுத்திர

சமுத்திர பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுப்பது குறித்து அவுஸ்திரேலிய நிபுணர்கள் குழாம் வடக்கு மாகாண கௌரவ ஆளுநருடன் கலந்துரையாடல் Read More »

இளவாலை பிரதேச வைத்தியசாலைக்கான புதிய மாடிக்கட்டடம் வடக்கு மாகாண கௌரவ ஆளுநரால் திறந்துவைப்பு

யாழ்ப்பாணம் இளவாலை பிரதேச வைத்தியசாலைக்கான புதிய மாடிக்கட்டட  நோயாளர் விடுதி வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களால் நேற்று (11.03.2024) மாலை திறந்து வைக்கப்பட்டது. வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர்கள், அதிகாரிகள், நோயாளர் நலன்புரிச்சங்க உறுப்பினர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர். நோயாளர் விடுதியை பார்வையிட்ட கௌரவ ஆளுநர், முதலாவது நோயாளரையும் விடுதியில் அனுமதித்தார். இதன்போது நிகழ்வின் பிரதம விருந்தினருக்கான உரையை ஆற்றிய கௌரவ ஆளுநர், வடக்கு

இளவாலை பிரதேச வைத்தியசாலைக்கான புதிய மாடிக்கட்டடம் வடக்கு மாகாண கௌரவ ஆளுநரால் திறந்துவைப்பு Read More »

வட மாகாண மஹா சிவராத்திரி நிகழ்வு– 2024

உருத்திரபுரநாயகி உடனுறை உருத்திரபுரீசுவரர் ஆலயம் – கிளிநொச்சி. வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு, கிளிநொச்சி மாவட்ட கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள உருத்திரபுரீசுவரர் ஆலய  பரிபாலன சபையுடன் இணைந்து நடாத்திய வடக்கு மாகாண மஹா சிவராத்திரி நிகழ்வு 2024.03.08ஆம் நாள் வெள்ளிக்கிழமை பிற்பகல் 6.00மணிக்கு உருத்திரபுரீச்சுரர் ஆலய  முன்றலில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திருவாளர் ம.பற்றிக் டிறஞ்சன்  அவர்கள் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது. மாலை 6.00மணிக்கு

வட மாகாண மஹா சிவராத்திரி நிகழ்வு– 2024 Read More »