வடக்கு மாகாண கல்வி அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக் கலந்துரையாடல்
சில பாடசாலைகளில் வளங்கள் குவிந்துள்ளன. அதற்கு அருகிலுள்ள பாடசாலைகளில் எந்தவொரு வளங்களும் இல்லாமல் உள்ளன. வளங்கள் சமச்சீராக பகிரப்படுவதற்கு வலயக் கல்விப் பணிப்பாளர்களே பொறுப்பு என வலியுறுத்திய வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், அடுத்த ஆண்டுக்குரிய வேலைத் திட்டங்களை இன்னும் ஒரு மாத காலத்தினுள் வழங்குமாறும் பணிப்புரை விடுத்தார். வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் […]
