Balasingam Kajenderan

2024 ஆண்டுக்குரிய மாவட்ட விவசாய மேன்மை விருதுகள் மற்றும் மாவட்ட தொழில்துறை மேன்மை விருதுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் என்பன வழங்கும் நிகழ்வு

இளையோர் விவசாயத்தை ஊக்குவிக்கவேண்டும் என விருதைப் பெற்ற இரண்டு இளைஞர்களும் கூறிய வார்த்தைகள் காதில் இனிக்கின்றன. இவர்களைப் போன்ற ஆயிரம் இளையோர் இருந்தால் போதும் எங்களது மாகாணம் வளர்ச்சியில் எங்கேயோ சென்றுவிடும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். நிலைபேறான உயர்தர வாழ்க்கைத் தரம் கொண்ட வளமான மாவட்டமாக முல்லைத்தீவு மாவட்டத்தை உருவாக்கும் இலட்சியப் பயணத்தில் மாவட்ட மக்களின் வாழ்வாதார நடவடிக்கைகளான விவசாயம் மற்றும் தொழிற்துறையில் சவால்களை கடந்து சாதனை படைத்துவரும் முயற்சியாளர்களை […]

2024 ஆண்டுக்குரிய மாவட்ட விவசாய மேன்மை விருதுகள் மற்றும் மாவட்ட தொழில்துறை மேன்மை விருதுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் என்பன வழங்கும் நிகழ்வு Read More »

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கண்காணிப்புப் பயணம்

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கண்காணிப்புப் பயணம் மேற்கொண்டார். இதன்போது மருத்துவமனையின் செயற்பாடுகளைப் பார்வையிட்டதுடன் தேவைப்பாடுகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார். அத்துடன் இதன்போது நன்கொடையாளர் ஒருவரால் மருத்துவமனைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்ட சக்கர நாற்காலிகளை வழங்கும் நிகழ்விலும் பங்கேற்றார். இதன்போது வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர், முல்லைத்தீவு மாவட்டச் செயலர், முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை அத்தியட்சகர்

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கண்காணிப்புப் பயணம் Read More »

முல்லைத்தீவு மாவட்டத்தில் நீண்ட காலமாக தீர்க்கப்படாதிருந்த சுகாதார மற்றும் போக்குவரத்துப் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல்

முல்லைத்தீவு மாவட்டத்தில் நீண்ட காலமாக தீர்க்கப்படாதிருந்த சுகாதார மற்றும் போக்குவரத்துப் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் 16.05.2025 அன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஆராயப்பட்ட விடயங்களின் தொடர் நடவடிக்கையாக இந்தக் கூட்டம் நடைபெறுவதாக மாவட்டச் செயலர் அ.உமாமகேஸ்வரன் குறிப்பிட்டார். இதன் பின்னர் முல்லைத்தீவு மாவட்டத்தின் சுகாதாரப் பிரச்சினை விரிவாக ஆராயப்பட்டிருந்தது. முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையின் சவால்கள் முதலில் ஆராயப்பட்டது. விடுதி தேவை

முல்லைத்தீவு மாவட்டத்தில் நீண்ட காலமாக தீர்க்கப்படாதிருந்த சுகாதார மற்றும் போக்குவரத்துப் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் Read More »

மூன்றாம் நபர் தலையீடின்றி உற்பத்தியாளர்களே நேரடியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்களை எவ்வாறு உருவாக்கலாம் என்பது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல்

மூன்றாம் நபர் தலையீடின்றி உற்பத்தியாளர்களே நேரடியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்களை எவ்வாறு உருவாக்கலாம் என்பது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் 14.05.2025 அன்று புதன்கிழமை இடம்பெற்றது. கூட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய ஆளுநர், வடக்கு மாகாணத்தில் அனைத்து வளங்களும் இருக்கின்றன. ஆனால் அதை உரிய முறையில் பயன்படுத்தவில்லை. வடக்கிலிருந்து சிலர் ஏற்றுமதிகளில் ஈடுபடுகின்றனர். பெரும்பாலானோர் மூன்றாம் தரப்பு ஊடாகவே ஏற்றுமதிகளை முன்னெடுக்கின்றனர். அவர்கள் நேரடியாக ஏற்றுமதியை

மூன்றாம் நபர் தலையீடின்றி உற்பத்தியாளர்களே நேரடியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்களை எவ்வாறு உருவாக்கலாம் என்பது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் Read More »

தம்பாட்டி அரசினர் தமிழ் கலவன் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட ‘மாணிக்கம் பூமணி ஞாபகார்த்த நூலகம்’ திறந்து வைக்கப்பட்டது

நூலகம் ஒன்று எவ்வளவு தூரத்துக்கு முக்கியமானது என்பதை நாங்கள் யாழ்ப்பாண நூலக எரிப்பிலிருந்து விளங்கிக் கொள்ளலாம். இன்று உங்கள் பாடசாலைக்கு நன்கொடையாக அமைத்து வழங்கப்பட்டுள்ள நூலகத்தை உரிய வகையில் பயன்படுத்தி உங்கள் கிராமத்துக்கும் – சமூகத்துக்கும் நற்பெயரைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என மாணவர்களிடம் கோரிக்கை விடுத்தார் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள். தம்பாட்டி அரசினர் தமிழ் கலவன் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட ‘மாணிக்கம் பூமணி ஞாபகார்த்த நூலகம்’ 13.05.2025 அன்று செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டது. பாடசாலை

தம்பாட்டி அரசினர் தமிழ் கலவன் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட ‘மாணிக்கம் பூமணி ஞாபகார்த்த நூலகம்’ திறந்து வைக்கப்பட்டது Read More »

மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றிய சனசமூக நிலையத்துடன் இணைந்த கல்வி நிலைய கட்டடத் திறப்பு விழா

நாங்கள் இந்தப் பகுதிகளை விட்டு இடம்பெயராமல் இருந்திருந்தால் இன்று நாம் எங்கேயோ முன்னேறிச் சென்றிருப்போம். அதைக் கற்பனை செய்து பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கின்றது. இடப்பெயர்வின் வலி உங்களைப்போல எனக்கும் நன்றாகவே தெரியும். நானும் உங்களைப்போன்று இடம்பெயர்ந்து சென்ற ஒருவன்தான் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றிய சனசமூக நிலையத்துடன் இணைந்த கல்வி நிலைய கட்டடத் திறப்பு விழா மயிலிட்டி சனசமூக நிலைய வீதியில் 12.05.2025 அன்று

மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றிய சனசமூக நிலையத்துடன் இணைந்த கல்வி நிலைய கட்டடத் திறப்பு விழா Read More »

வெசாக் பண்டிகையை முன்னிட்டு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி

புத்தரின் பிறப்பு, ஞானோதயம் மற்றும் பரிநிர்வாணம் ஆகிய உயர் நிகழ்வுகளை ஒட்டியதாகக் கொண்டாடப்படும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு, வடக்கு மாகாணத்தின் வாழும் அனைத்து பௌத்த சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். வெசாக் பண்டிகை, கருணை, சகிப்புத்தன்மை, அமைதி, மற்றும் இணக்கம் போன்ற பௌத்த தத்துவங்களை நினைவூட்டும் ஒன்றாகும். நாம் அனைவரும் சமூக ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் நோக்கி முன்னேற இந்தத் தத்துவங்கள் எங்களுக்கு உந்துதலளிக்கட்டும். இந்நல்ல நாளில், புத்தரின் அறிவொளி உங்கள் ஒவ்வொருவரது

வெசாக் பண்டிகையை முன்னிட்டு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி Read More »

வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் ந.திருலிங்கநாதன் விடுத்துள்ள ஊடக அறிக்கை

உப்பின் விலை கட்டுப்பாடற்ற ரீதியில் அதிகரித்துள்ள நிலையில், அச்சுவேலி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் மன்னாரில் உப்பைக் கொள்வனவு செய்து யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள அனைத்து பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுக்கும் விநியோகித்துள்ளது. 179 ரூபாவுக்கு ஒரு பக்கெட் உப்பை பொதுமக்கள் இன்று சனிக்கிழமை (10.05.2025) முதல் கொள்வனவு செய்ய முடியும். பொதுமகன் ஒருவர் ஆகக் கூடியது 3 உப்பு பக்கெட்களையே கொள்வனவு செய்ய முடியும்.

வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் ந.திருலிங்கநாதன் விடுத்துள்ள ஊடக அறிக்கை Read More »

அரிசி மாபியாவை கூட்டுறவுத்துறையால் மாத்திரமே கட்டுப்படுத்துவதற்கு முடியும் -வடக்கு மாகாண ஆளுநர்

அரிசி மாபியாவை கூட்டுறவுத்துறையால் மாத்திரமே கட்டுப்படுத்துவதற்கு முடியும். தனியார் துறையினர் இலாபத்தை மாத்திரமே அடிப்படையாகக் கொண்டே செயற்படுவர். ஆனால் கூட்டுறவுத்துறை சேவையை அடிப்படையாகக் கொண்டு சிறியதொரு இலாபத்துடன் மாத்திரமே செயற்படும். அதனாலேயே, கூட்டுறவுத்துறையை வலுப்படுத்துவதன் ஊடாக அரிசி மாபியாவை எதிர்காலத்திலாவது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். இளம் ஆய்வாளர்கள் வலையமைப்பு நடத்திய இளம் கூட்டுறவாளர் மாநாடு தந்தை செல்வா அரங்கில் 10.05.2025 அன்று சனிக்கிழமை இடம்பெற்றது. இதில்

அரிசி மாபியாவை கூட்டுறவுத்துறையால் மாத்திரமே கட்டுப்படுத்துவதற்கு முடியும் -வடக்கு மாகாண ஆளுநர் Read More »

மண்டைதீவில் அமைக்கப்பட்டுள்ள ‘நெய்தல் சூழல்நேய பூங்கா’ வடக்கு மாகாண ஆளுநர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

மண்டைதீவில் அமைக்கப்பட்டுள்ள ‘நெய்தல் சூழல்நேய பூங்கா’ இன்று வெள்ளிக்கிழமை (09.05.2025) வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர், யாழ். மாவட்டச் செயலராக நான் பணியாற்றிய காலத்தில் இந்தப் பகுதியில் சுற்றுலாத்துறைக்கான அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. துரதிஷ;டவசமாக அப்போதிருந்த பிரதேச சபை நிர்வாகம் எமக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கவில்லை. பல முதலீட்டாளர்கள் முதலிடுவதற்காக வருகின்றபோதும் எமது திணைக்களங்களால் அவர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு கிடைக்கப்பெறவில்லை. தமது சபைகளுக்கு வருமானத்தை ஈட்டித் தரக்

மண்டைதீவில் அமைக்கப்பட்டுள்ள ‘நெய்தல் சூழல்நேய பூங்கா’ வடக்கு மாகாண ஆளுநர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. Read More »