இன்று வசதிபடைத்தோரும் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் துரித உணவுகளால் இந்தப் பாதிப்பை எதிர்கொள்கின்றனர். – கௌரவ ஆளுநர்
தெல்லிப்பளை சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை, யாழ்ப்பாணம் தாதிய பயிற்சிக் கல்லூரி மாணவர்கள், தாய்மார் கழகங்கள் இணைந்து நடத்திய இளையோர் சுகநலக் கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு நடை பவனிக்கும் என்பன வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் பங்கேற்புடன் இன்று திங்கட் கிழமை (21.07.2025) நடைபெற்றது. தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் கவிஞர் அம்பி கலையரங்கில் மேடை நிகழ்வுகள் தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி பரா.நந்தகுமார் தலைமையில் நடைபெற்றது. பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர் தனது உரையில், […]
