Balasingam Kajenderan

வடக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைமாணவர்களுக்கான பார்வை ஆய்வுஅட்டைகள்(Vision charts) கௌரவ ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது

வடக்கு மாகாணத்திலுள்ள பாடசாலை மாணவர்களின் பார்வைத் திறனை மேம்படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள செயல்திட்டத்தின் ஒரு கட்டமாக பார்வை ஆய்வு அட்டைகளை (Vision charts) உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் செயலகத்தில், கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களிடம் பார்வை ஆய்வு அட்டைகள் இன்று (17/04/2024) கையளிக்கப்பட்டன. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண் வைத்திய நிபுணர் முத்துசாமி மலரவன் அவர்களின் வழிநடத்தலின் கீழ் முன்னெடுக்கப்படும் இந்த விசேட செயல்திட்டத்திற்கான பார்வை ஆய்வு அட்டைகளை, Vision care நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி […]

வடக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைமாணவர்களுக்கான பார்வை ஆய்வுஅட்டைகள்(Vision charts) கௌரவ ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது Read More »

யாழ் நகரிலுள்ள புதிய பஸ் தரிப்பிடத்திலிருந்து ஒருங்கிணைந்த நேர அட்டவணையில், அரச மற்றும் தனியார் பஸ்களை பரீட்சார்த்த சேவையில் ஈடுபடுத்த தீர்மானம்

யாழ் நகரிலுள்ள புதிய பஸ் தரிப்பிடத்திலிருந்து ஒருங்கிணைந்த நேர அட்டவணையில் அரச மற்றும் தனியார் பஸ் சேவைகளை ஆரம்பிப்பதற்கான பரீட்சார்த்த நடவடிக்கையை எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில், ஆளுநர் செயலகத்தில் இன்று (15/04/2024) நடைபெற்ற கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. வட மாகாண பிரதம செயலாளர், ஆளுநர் செயலாளர், அமைச்சுக்களின் செயலாளர்கள்,

யாழ் நகரிலுள்ள புதிய பஸ் தரிப்பிடத்திலிருந்து ஒருங்கிணைந்த நேர அட்டவணையில், அரச மற்றும் தனியார் பஸ்களை பரீட்சார்த்த சேவையில் ஈடுபடுத்த தீர்மானம் Read More »

மங்களம் பொங்கும் தமிழ் – சிங்கள புதுவருட நல்வாழ்த்துக்கள்

தமிழ் மக்களின் பாரம்பரியம், தொன்மை என்பவற்றுக்கு அமைய சித்திரை 14 ஆம் நாள் புது வருடம் பிறக்கிறது. அதற்கமைய இந்த ஆண்டு ஏப்ரல் 13 ஆம் திகதி குரோதி எனும் தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. இந்த புது வருடத்தில் சாந்தியும், சமாதானமும் மேலோங்கி வறுமைகள் நீங்கி எல்லா வளங்களுடனும் அனைவரும் வாழ வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். இதேதினத்தில் சிங்கள மக்களும் தங்களின் புதுவருடப் பிறப்பை கொண்டாடுகின்றனர். பல்லின சமூகம் வாழும் இலங்கை திருநாட்டில் இன, மத நல்லிணக்கத்தை மேலும் பறைசாற்றும் வகையில் ஒரு தேசிய

மங்களம் பொங்கும் தமிழ் – சிங்கள புதுவருட நல்வாழ்த்துக்கள் Read More »

மஞ்சள் செய்கை வயல் விழா மற்றும் பயிர் சிகிச்சை முகாம் மன்னார் மாவட்டம்

மன்னார் மாவட்டத்தில் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதிய திட்டத்தின் ஊடாக 2023 ஆம்  ஆண்டு வழங்கப்பட்ட மஞ்சள் விதை கிழங்குகளை பெற்றுக்கொண்ட பெரியமடு விவசாய போதனாசிரியர் பிரிவில் பெரியமடு கிழக்கு கிராமத்தில் உள்ள விவசாயி திரு. யு. ஆ. சியான் மேற்படி பிரிவின் விவசாய போதனாசிரியர் திரு. ஊ. பசீலன் அவர்களின் விவசாய ஆலோசனைகளிற்கு அமைவாக மஞ்சள் செய்கையில் ஈடுபட்டிருந்தார். 7 மாதங்களின் பின்னர் அறுவடைக்கு தயாரான நிலையில் மேற்படி  மஞ்சள் செய்கையின் பலாபலன்களை ஏனைய விவசாயிகளிற்கும்

மஞ்சள் செய்கை வயல் விழா மற்றும் பயிர் சிகிச்சை முகாம் மன்னார் மாவட்டம் Read More »

இலவச சித்த மருத்துவ முகாம்

“எல்லோர்க்கும் சித்த மருத்துவம்” என்ற தொனிப்பொருளில் வடக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களம் ,ந்தியத் துணைத்தூதரகத்துடன் இணைந்து கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சாந்தபுரம் கலைமகள் வித்தியாலய மண்டபத்தில் இலவச மருத்துவ முகாமினை கடந்த 16.03.2024 சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணிவரை நடாத்தியது.இந்நிகழ்வில் யாழ் ,ந்தியத் துணைத்தூதரக உயர் அதிகாரி, வடக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ மற்றும் நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் சிரேஸ்ட உதவிச்செயலாளர்,

இலவச சித்த மருத்துவ முகாம் Read More »

சர்வதேச மகளிர்தினம் – 2024

2024ம் ஆண்டிற்கான சர்வதேச மகளிர்தினமானது வடக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தினால் 14.03.2024 வியாழக்கிழமை அன்று யாழ்ப்பாண மாவட்டத்தில் உடுவில் சித்த மத்திய மருந்தகத்தில் நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் மகளிரின் ஆரோக்கியத்தில் உணவின் முக்கியத்துவம் தொடர்பாக சிறுதானியங்கள், பாரம்பரிய உணவுகள், இயற்கைப்பானங்கள் மற்றும் மூலிகைக் கன்றுகள் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்வுகள் சமூக மருத்துவ உத்தியோகத்தர்களால் நடாத்தப்பட்டன. அத்துடன் சுதேச மருத்துவத் திணைக்களத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்ற பெண் வைத்தியர்கள் மற்றும் ஓய்வுபெற்ற முன்பள்ளி ஆசிரியை ஆகியோர் கௌரவிக்கப்பட்டு அவர்களிற்கு

சர்வதேச மகளிர்தினம் – 2024 Read More »

அனைத்து இஸ்லாமியர்களுக்கும் இனிய ஈதுல்-பித்ர் நல்வாழ்த்துக்கள்.

சுமார் ஒருமாத காலமாக பசித்திருந்து, தாகித்திருந்து நோன்பு நோற்ற இஸ்லாமிய சகோதரர்கள், புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைபிறை தென்பட்டதும், ஈதுல்-பித்ர் நோன்பு பெருநாளை கொண்டாடுகின்றனர். அந்தவகையில் இலங்கை வாழ் அனைத்து இஸ்லாமிய சகோதரர்களுக்கும் இனிய ஈதுல்-பித்ர் நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் நோன்பும் ஒரு கடமையாகும். இந்தக் காலப்பகுதியில் வெறுமனே பசித்திருந்து, தாகித்திருப்பது மாத்திரமின்றி, இறையச்சத்தை தன்னகத்தே ஏற்படுத்திக் கொள்வதே நோன்பின் முக்கிய கடற்பாடாகும். புனித நோன்பு காலப்பகுதியில் ஏழைகளுக்கு உதவுதல்,

அனைத்து இஸ்லாமியர்களுக்கும் இனிய ஈதுல்-பித்ர் நல்வாழ்த்துக்கள். Read More »

வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள இலவச வீட்டுத்திட்டம் தொடர்பில் பயனாளர்களின் சந்தேகங்களை தெளிவுப்படுத்துவது அவசியமாகும் என கௌரவ ஆளுநர் தெரிவிப்பு

வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள இலவச வீட்டுத்திட்டம் தொடர்பில் பயனாளர்களை நேரில் சந்தித்து தெளிவுப்படுத்துவது அவசியமானதொன்று என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் தெரிவித்துள்ளார். இலவச வீட்டுத்திட்டத்தை முன்னெடுக்கும் நிறுவனத்தின் பிரதிதிநிகளுடன் ஆளுநர் செயலகத்தில் நேற்று  (03/04/2024) நடைபெற்ற கூட்டத்தின் போதே கௌரவ ஆளுநர் இதனை தெரிவித்தார். சூரிய படலங்கள் பொருத்தப்பட்ட கூரைகளுடன் நிர்மாணிக்க திட்டமிடப்பட்ட இந்த வீட்டுத் திட்டமானது தற்போது சற்று மாற்றப்பட்டு, கூரைகளில் சூரிய படலங்கள் அற்ற வகையில் வீடுகளை நிர்மாணிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள இலவச வீட்டுத்திட்டம் தொடர்பில் பயனாளர்களின் சந்தேகங்களை தெளிவுப்படுத்துவது அவசியமாகும் என கௌரவ ஆளுநர் தெரிவிப்பு Read More »

வடக்கு மாகாண இப்தார் நிகழ்வின் பிரதம விருந்தினராக கௌரவ ஆளுநர் கலந்துசிறப்பித்தார்

ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வு யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரியில் நேற்று மாலை (02/04/2024) நடைபெற்றது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்துக்கொண்டு உரையாற்றினார். “விரதம் என்பது மனதை வழிப்படுத்துகின்ற ஒரு விடயமாக மாத்திரமன்றி உடல் ஆரோக்கியத்திற்கும் முக்கியமான விடயமாக மருத்துவ ஆராய்ச்சிகள் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. அந்தவகையில் மதத்திற்காக ஒருவர் தன்னை தயார்ப்படுத்தும் அதேசந்தர்ப்பத்தில் மனதை தூய்மைப்படுத்துவதோடு உடலையும் தூய்மைப்படுத்திக் கொள்ளும் ஒரு நுட்பமாக இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. அனைத்து சமயங்களுமே

வடக்கு மாகாண இப்தார் நிகழ்வின் பிரதம விருந்தினராக கௌரவ ஆளுநர் கலந்துசிறப்பித்தார் Read More »

தேசிய மாணவர் பாராளுமன்ற தேர்தல் 2024

இலங்கை பாராளுமன்றத்தின் மாணவர் பாராளுமன்ற எண்ணக்கருவுக்கு அமைய  நடைபெற்று முடிந்த 2024ஆம் ஆண்டுக்கான தேசிய மாணவர் பாராளுமன்ற தேர்தலில் வடமாகாணத்தை பிரதிநிதித்துவபடுத்திய  வவுனியா வடக்கு கல்வி வலய  வ/ கல்மடு மகா வித்தியாலய மாணவன் நாகராசா திலக்சன்  பிரதி சபாநாயகராகவும் பாடசாலைகளிற்கிடையில் நல்லுறவைக் கட்டியெழுப்பும் பிரதி அமைச்சராக  வடமராட்சி கல்வி வலயத்தின்  யா/ ஹாட்லி கல்லூரியின்மாணவன்  மோகன் அர்ஜுன் அவர்களும்  தெரிவாகியுள்ளனர். இந் நிகழ்வில் 9 மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மாணவ மாணவிகள் இந்தத் தேசிய மாணவர்

தேசிய மாணவர் பாராளுமன்ற தேர்தல் 2024 Read More »