Balasingam Kajenderan

வடக்கு மாகாண சபை உத்தியோகத்தர்கள் பங்கேற்ற ‘நேர்மை நடைபவனி’ அணியை கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.

அரச சேவையின் தரம், வினைத்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்தி ஊழலற்ற நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்குவதை வலியுறுத்தும் வகையிலான மாபெரும் ‘நேர்மை நடைபவனி’ நிகழ்வானது இன்று (28.07.2026) செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறப்பாக நடைபெற்றது. ஜனாதிபதி செயலகத்தின் வழிகாட்டலுக்கு அமைய முன்னெடுக்கப்படும் ‘நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா’ தேசிய செயற்பாட்டின் கீழ், நேர்மையான அரச சேவையை வலுப்படுத்தும் நோக்கில், நேர்மை வாரத்தின் (2026 ஜூலை 27 முதல் 31 வரை) இரண்டாம் நாள் நிகழ்வுகள் ‘நேர்மைமிக்க […]

வடக்கு மாகாண சபை உத்தியோகத்தர்கள் பங்கேற்ற ‘நேர்மை நடைபவனி’ அணியை கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் ஆரம்பித்து வைத்தார். Read More »

யாழ். திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை நிர்வகிப்பதற்குரிய நம்பிக்கை நிதியப் பொறுப்புச் சபையை உருவாக்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான இறுதி இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை நிர்வகிப்பதற்குரிய நம்பிக்கை நிதியப் பொறுப்புச் சபையை உருவாக்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான இறுதி இணக்கப்பாடு, ‘கூட்டு முகாமைத்துவக் குழு’ கூட்டத்தில் இன்று (27.07.2026) திங்கட்கிழமை எட்டப்பட்டுள்ளது. இணையத் தொழில்நுட்பத்தின் ஊடாக நடைபெற்ற 7ஆவது கூட்டு முகாமைத்துவக் கூட்டத்தில் உயர்மட்டப் பிரதிநிதிகள் பலரும் பல்வேறு இடங்களிலிருந்தவாறு கலந்துகொண்டனர். கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்திலிருந்து புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கௌரவ பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி மற்றும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர்

யாழ். திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை நிர்வகிப்பதற்குரிய நம்பிக்கை நிதியப் பொறுப்புச் சபையை உருவாக்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான இறுதி இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. Read More »

தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற மாணவனை நாம் இங்கு பாராட்டுகின்றோம். ஏனைய மாணவர்களும் தாங்களும் அவ்வாறு முதலிடத்துக்கு வர வேண்டும் என்ற ஓர்மத்துடன் கற்க வேண்டும் – கௌரவ ஆளுநர் தெரிவித்தார்.

தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற மாணவனை நாம் இங்கு பாராட்டுகின்றோம். இந்தப் பாராட்டைப் பார்த்து, இங்குள்ள ஏனைய மாணவர்களும் தாங்களும் அவ்வாறு முதலிடத்துக்கு வர வேண்டும் என்ற ஓர்மத்துடன் கற்க வேண்டும், என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். 2025ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 194 புள்ளிகளைப் பெற்று, தமிழ் மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைக் கைப்பற்றிய யாழ்ப்பாணம் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் செல்வன்

தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற மாணவனை நாம் இங்கு பாராட்டுகின்றோம். ஏனைய மாணவர்களும் தாங்களும் அவ்வாறு முதலிடத்துக்கு வர வேண்டும் என்ற ஓர்மத்துடன் கற்க வேண்டும் – கௌரவ ஆளுநர் தெரிவித்தார். Read More »

‘நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை’ தேசிய செயற்பாட்டின் கீழ், ஆளுநர் செயலக உத்தியோகத்தர்களுக்கான முதல்நாள் சத்தியப் பிரமாண நிகழ்வு ஆளுநர் செயலக முன்றலில் நடைபெற்றது.

‘நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை’ தேசிய செயற்பாட்டின் கீழ், நேர்மையான அரசு சேவையை வலுப்படுத்தும் நோக்கில் வடக்கு மாகாண ஆளுநர் செயலக உத்தியோகத்தர்களுக்கான முதல்நாள் சத்தியப் பிரமாண நிகழ்வு இன்று திங்கட்கிழமை (27.07.2026) காலை 9 மணிக்கு ஆளுநர் செயலக முன்றலில் நடைபெற்றது. தேசியக் கொடி, மாகாணக் கொடி என்பன ஆளுநரின் உதவிச் செயலாளர் மற்றும் ஆளுநர் செயலக நிர்வாக உத்தியோகத்தர் ஆகியோரால் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, உத்தியோகத்தர்களின் சத்தியப் பிரமாண நிகழ்வு நடைபெற்றது. இதன் பின்னர்

‘நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை’ தேசிய செயற்பாட்டின் கீழ், ஆளுநர் செயலக உத்தியோகத்தர்களுக்கான முதல்நாள் சத்தியப் பிரமாண நிகழ்வு ஆளுநர் செயலக முன்றலில் நடைபெற்றது. Read More »

அரசியல்வாதிகள் மாறியது போன்று அதிகாரிகளும் மாறினால்தான் மக்கள் எதிர்பார்த்த ‘முறைமை மாற்றம்’ முழுமையடையும்!” – நேர்மை வார நிகழ்வில் ஆளுநர் நா.வேதநாயகன் உரை

அரசாங்கம் மாறுவதால் மட்டும் முறைமை மாற்றம் முழுமையடையாது. அரசியல்வாதிகள் மாறியது போன்று, அதிகாரிகளும் மாறினால் மாத்திரமே மக்கள் எதிர்பார்த்த அந்த மாற்றம் மக்களின் வாசற்படியை எட்டும், என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். ‘சட்டத்தை மதிக்கும் நேர்மைமிகு அரச சேவை’ எனும் தொனிப்பொருளில் வடக்கு மாகாண நேர்மை வார (27 ஜூலை 2026 தொடக்கம் 31 ஜூலை 2026 வரை) அறிமுக நிகழ்வு, இன்று திங்கட்கிழமை (27.07.2026) வடக்கு மாகாண பிரதம செயலாளர்

அரசியல்வாதிகள் மாறியது போன்று அதிகாரிகளும் மாறினால்தான் மக்கள் எதிர்பார்த்த ‘முறைமை மாற்றம்’ முழுமையடையும்!” – நேர்மை வார நிகழ்வில் ஆளுநர் நா.வேதநாயகன் உரை Read More »

இடைக்காடு மகா வித்தியாலயம் போர் சூழ்நிலைகளுக்குள் சிக்கியிருந்தபோதும் தனது தனித்துவத்தை இழக்காமல் இன்றும் ஒரு பெரிய விருட்சமாக உயர்ந்து நிற்கிறது – கௌரவ ஆளுநர்

ஒரு பாடசாலையானது ஒரு நூற்றாண்டைக் கடந்து பல தலைமுறைகளுக்குக் கல்விப் பணியாற்றி வருவது மிகவும் சிறப்பு வாய்ந்ததொரு மைல்கல்லாகும் எனத் தெரிவித்த வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் போர்ச் சூழ்நிலை மற்றும் இடப்பெயர்வு காரணங்களால் எமது பல பாடசாலைகள் தமது தனித்துவத்தை இழந்துவிட்டபோதும் இடைக்காடு மகா வித்தியாலயம் போர் சூழ்நிலைகளுக்குள் சிக்கியிருந்தபோதும் தனது தனித்துவத்தை இழக்காமல் இன்றும் ஒரு பெரிய விருட்சமாக உயர்ந்துநிற்பதாக தெரிவித்தார். ‘அறிவு புகட்டிய அன்னைக்கு ஓர் ஆராதனை’ எனும் தொனிப்பொருளில்

இடைக்காடு மகா வித்தியாலயம் போர் சூழ்நிலைகளுக்குள் சிக்கியிருந்தபோதும் தனது தனித்துவத்தை இழக்காமல் இன்றும் ஒரு பெரிய விருட்சமாக உயர்ந்து நிற்கிறது – கௌரவ ஆளுநர் Read More »

கூட்டுறவுச் சங்கங்களில் மிகச் சிறப்பாகச் செயற்படும் பனை, தென்னை வளக் கூட்டுறவுச் சங்கங்கள், தங்கள் அங்கத்தவர்களின் நலனிலும் அதீத கரிசனை எடுத்துச் செயற்படுகின்றனர் – கௌரவ ஆளுநர்

பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் அங்கத்தவர்களுக்குச் சில துறைகளிலுள்ள நேர்மையீனமான அதிகாரிகள் மற்றும் அலுவலர்களால் ஏற்படுத்தப்படும் பாதிப்புகளைக் களைவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனவும், மிக விரைவில் அவர்களுக்குரிய தீர்வைப் பெற்றுக்கொடுப்போம் எனவும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். ‘பனை வளம் நிலையான வாழ்வின் பலம்’ எனும் தொனிப்பொருளில், வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் வடக்கு மாகாண பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவு நிறுவனங்கள் ஆகியன இணைந்து

கூட்டுறவுச் சங்கங்களில் மிகச் சிறப்பாகச் செயற்படும் பனை, தென்னை வளக் கூட்டுறவுச் சங்கங்கள், தங்கள் அங்கத்தவர்களின் நலனிலும் அதீத கரிசனை எடுத்துச் செயற்படுகின்றனர் – கௌரவ ஆளுநர் Read More »

சுழிபுரம் விக்ரோறியா கல்லூரியின் 150ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கௌரவ ஆளுநர் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார்.

ஒரு பாடசாலையாக இருந்தாலும் சரி, வேறு எந்தவொரு நிறுவனமாக இருந்தாலும் சரி, அதன் வளர்ச்சியும் வீழ்ச்சியும் அதன் தலைமைத்துவத்திலேயே முற்றிலுமாகத் தங்கியிருக்கின்றது, என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். யாழ்ப்பாணம், சுழிபுரம் விக்ரோறியா கல்லூரியின் 150ஆவது ஆண்டு நிறைவு விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வு, பாடசாலையின் திறந்தவெளி அரங்கில் இன்று (25.07.2026) சனிக்கிழமை நடைபெற்றது. பாடசாலை முதல்வர் திருமதி க.சுலபாமதி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், வடக்கு மாகாண

சுழிபுரம் விக்ரோறியா கல்லூரியின் 150ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கௌரவ ஆளுநர் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார். Read More »

தேசிய இளைஞர்கள் சேவை மன்றத்தின் 36ஆவது தேசிய இளைஞர் விளையாட்டின் குழுப் போட்டிகளில் ஆண் – பெண் இருபாலருக்குமான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியை கௌரவ ஆளுநர் ஆரம்பித்து வைத்தார்.

தேசிய இளைஞர்கள் சேவை மன்றத்தின் 36ஆவது தேசிய இளைஞர் விளையாட்டின் குழுப் போட்டிகளில் ஒன்றான ஆண் – பெண் இருபாலருக்குமான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று (25.07.2026) சனிக்கிழமை யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் ஆரம்பித்து வைத்தார். இந்த நிகழ்வில், யாழ்ப்பாண மாநகர சபையின் கௌரவ மேயர் திருமதி மதிவதனி விவேகானந்தராசா, தேசிய இளைஞர்கள் சேவை மன்றத்தின் நிர்வாகப் பணிப்பாளர் மனுல சமல் பெரேரா, வடக்கு மாகாணப் பணிப்பாளர் காமினி,

தேசிய இளைஞர்கள் சேவை மன்றத்தின் 36ஆவது தேசிய இளைஞர் விளையாட்டின் குழுப் போட்டிகளில் ஆண் – பெண் இருபாலருக்குமான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியை கௌரவ ஆளுநர் ஆரம்பித்து வைத்தார். Read More »

நாட்டின் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடும்போது வடக்கு மாகாணத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி பங்களிப்பு குறைவாகவே உள்ளது – கௌரவ ஆளுநர்

உள்நாட்டுப் போர் முடிவடைந்து பல ஆண்டுகள் கடந்த நிலையிலும், நாட்டின் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடும்போது வடக்கு மாகாணத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி பங்களிப்பு குறைவாகவே காணப்படுகின்றது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். தற்போது இலங்கையின் தேசிய பொருளாதார வளர்ச்சி இலக்கு 7 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள போதிலும், வடக்கு மாகாணம் தனது பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு 10 சதவீத வளர்ச்சியை எட்டுவதை முக்கிய இலக்காகக் கொண்டு அதற்குரிய செயற்பாடுகளை ஆரம்பித்திருப்பதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

நாட்டின் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடும்போது வடக்கு மாகாணத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி பங்களிப்பு குறைவாகவே உள்ளது – கௌரவ ஆளுநர் Read More »