வடக்கு மாகாண விவசாய அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.
வடக்கு மாகாணத்தில் 2026ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெற்செய்கை எதிர்பார்க்கப்பட்ட இலக்கைத் தாண்டி வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளதுடன், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் உணவுப் பாதுகாப்பையும் மேலும் வலுப்படுத்தும் நோக்கில் மூன்றாம் போகச் செய்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் தெரிவித்தார். சிறுபோகத்தில் இலக்கிடப்பட்ட பரப்பளவை விட அதிகளவான நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதுடன், கிடைக்கப்பெற்றுள்ள நீர்வளத்தை அறிவியல் அடிப்படையில் முகாமைத்துவம் செய்து மூன்றாம் போகச் செய்கைக்குத் தேவையான ஏற்பாடுகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டிருப்பது வடக்கு மாகாண விவசாயத் துறையின் குறிப்பிடத்தக்க […]
