காலநிலை மாற்றங்களால் வடக்கு மாகாணத்தின் உணவு உற்பத்தி எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது, கூட்டுறவு அமைப்புகளைப் பயன்படுத்தி உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்த நடைமுறை அடிப்படையில் செயல்பட வேண்டும்’ – கௌரவ ஆளுநர் வலியுறுத்தல்.
காலநிலை மாற்றம், உற்பத்திச் செலவுகளின் அதிகரிப்பு மற்றும் சந்தைச் சவால்கள் போன்ற காரணிகளால் வடக்கு மாகாணத்தின் உணவுப் பாதுகாப்பு பாதிக்கப்படாத வகையில், கூட்டுறவு இயக்கத்தை மையப்படுத்திய புதிய செயற்பாட்டு வேலைத்திட்டங்களை உருவாக்கும் நோக்கில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் விரிவான உயர்மட்ட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று (07.08.2026) வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வடக்கு மாகாணத்தில் கூட்டுறவு அமைப்புகள் மூலம் உணவுப் பாதுகாப்பை நிலையான முறையில் வலுப்படுத்துதல், விவசாய உற்பத்தியை அதிகரித்தல், விவசாயிகளின் வருமானத்தை […]
