புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் ஆகியோர், யாழ்ப்பாண பழைய மாவட்டச் செயலகக் கட்டடம், யாழ். பொது நூலகம் ஆகியவற்றை பார்வையிட்டனர்.
யாழ்ப்பாண மாவட்டத்துக்கு இன்று (23.07.2026) வியாழக்கிழமை உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கௌரவ பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி மற்றும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோர், யாழ்ப்பாண பழைய மாவட்டச் செயலகக் கட்டடம் மற்றும் யாழ்ப்பாணம் பொது நூலகம் ஆகியவற்றுக்கு நேரில் சென்று பார்வையிட்டனர். யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்துக்கு எதிரே அமைந்துள்ள தொன்மை வாய்ந்த பழைய மாவட்டச் செயலகக் கட்டடத்தைப் பார்வையிட்ட அமைச்சர் தலைமையிலான குழுவினர், அதன் […]
