Kathir Sadagopan

சர்வதேச மகளிர் தினம் 2025 வடக்கு மாகாண சபையில் நடைபெற்றது

‘அனைத்துப் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு உரிமைகள்,சமத்துவம்.வலுப்படுத்துகை.’ எனும் கருப்பொருளை மையமாகக் கொண்டு வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த சர்வதேச மகளிர் தின நிகழ்வானது 2025.03.07 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு சாவகச்சேரி நகரசபை பொன்விழா மண்டபத்தில் கோலாகலமாக ஆரம்பமானது. அமைச்சின் செயலாளர் திரு.பொ.வாகீசன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திரு.நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்ததோடு சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாணம் இந்தியத் […]

சர்வதேச மகளிர் தினம் 2025 வடக்கு மாகாண சபையில் நடைபெற்றது Read More »

விவசாய பயிர்களை சேதப்படுத்தும் விலங்குகளின் கணக்கெடுப்பு – 2025

விவசாய பயிர்களை சேதப்படுத்தும் வனவிலங்குகளின் கணக்கெடுப்பு கமத்தொழில் அமைச்சினால் முன்னெடுக்கப்படுகின்றது. அதன்படி எதிர்வரும் 15.03.2025 ஆம் திகதி சனிக்கிழமை காலை 08.00 மணி முதல் 08.05 மணி வரையான காலப்பகுதியில் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் எல்லோரும் இக் கணக்கெடுப்பிற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். மேற்குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் தங்களின் வீட்டுத் தோட்டத்திலும் மற்றும் பயிர்ச் செய்கை நிலத்தில் அவதானித்த வனவிலங்குகளின் விபரத்தினை கீழே குறிப்பிடப்பட்டுள்ள மாதிரிப் படிவத்தினை பயன்படுத்தி அறிக்கையிட்டு அப் படிவத்தினை

விவசாய பயிர்களை சேதப்படுத்தும் விலங்குகளின் கணக்கெடுப்பு – 2025 Read More »

நெற்செய்கையில் புரட்சியை ஏற்படுத்துவது தொடர்பான வயல் விழா நிகழ்வு

கிளிநொச்சி மாவட்ட விவசாய திணைக்களத்தின் கீழ் உள்ள வன்னேரிக்குளம் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் புதிய தொழில்நுட்ப முறையிலான நெல் செய்கை தொடர்பான வயல் விழா நிகழ்வானது 31.01.2025 அன்று காலை 11.00 மணியளவில் பெரிய நீர்ப்பாசனக்குளமான வன்னேரிக்குளத்தின் கீழ் ம.தவக்குமார் என்பவரின் வயலில் விவசாயப் போதனாசிரியர் திரு.சி.டிறியன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இவ் வயல் விழா நிகழ்வில் புதிய தொழில்நுட்ப முறைகளான வரிசையில் விதைகள் இடல் இயந்திர நாற்று நடுகை மற்றும் வழமையான சேற்று விதைப்பு தொழில்நுட்பங்களை

நெற்செய்கையில் புரட்சியை ஏற்படுத்துவது தொடர்பான வயல் விழா நிகழ்வு Read More »

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 77வது சுதந்திர தினம் வடக்கு மாகாண பிரதம செயலாளர் செயலகத்தில் கொண்டாடப்பட்டது

“தேசிய மறுமலர்ச்சிக்காக அணிதிரள்வோம்” என்ற கருப்பொருளில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 77வது தேசிய சுதந்திர தினம் இன்று (பெப்ரவரி 04) கைதடியில் உள்ள பிரதம செயலாளர் செயலக வளாகத்தில் வைபவ ரீதியாக கொண்டாடப்பட்டது. தேசியக் கொடியை பிரதிப் பிரதம செயலாளர்-நிர்வாகம் திருமதி. எ. அன்ரன் யோகநாயகம் ஏற்றி வைத்தார், வடக்கு மாகாணக் கொடியை உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் திரு. எஸ்.பிரணவநாதன் ஏற்றி வைத்தார். நன்றியுரையை உதவிப் பிரதம செயலாளர் திருமதி எம்.டென்ஷியா வழங்கியிருந்தார். பிரதம செயலாளரின்

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 77வது சுதந்திர தினம் வடக்கு மாகாண பிரதம செயலாளர் செயலகத்தில் கொண்டாடப்பட்டது Read More »

பிரதம செயலாளர் செயலக கொத்தணியின் 2025 ஆம் ஆண்டின் கடமை செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வு

2025 ஆம் ஆண்டின் கடமைச் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வானது வடக்கு மாகாண பிரதம செயலாளர் திரு.இ.இளங்கோவன் அவர்களின் தலைமையில் 01.01.2025 அன்று புதன்கிழமை காலை 8.30 மணிக்கு வடக்கு மாகாண சபை வளாகத்தில் நடைபெற்றது. இவ் வைபவத்தில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், வடமாகாண பேரவைச் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர்கள், பிரதம உள்ளக கணக்காய்வாளர்,  பணிப்பாளர் – கிராம அபிவிருத்தி திணைக்களம், ஆணையாளர் – மோட்டார் போக்குவரத்து திணைக்களம், ஆணையாளர் –

பிரதம செயலாளர் செயலக கொத்தணியின் 2025 ஆம் ஆண்டின் கடமை செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வு Read More »

2025 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்படும் திட்டங்கள் ஒக்ரோபர் மாதத்துக்குள் முடிவுறுத்தப்படவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் வலியுறுத்தினார்

தேசிய நிதி ஆணைக்குழுவால் வாக்குப்பணக்கணக்கு (vote on account) 2025 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஏப்ரல் வரையான 4 மாதங்களுக்குமான நடைமுறை, மூலதன செலவின ஒதுக்கீட்டு விவரம் வடக்கு மாகாணத்துக்குரியது அறிவிக்கப்பட்டுள்ளது. அதை உத்தியோகபூர்வமாக வெளியிடும் நிகழ்வு வடக்கு மாகாண பேரவைச் செயலக மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (27.12.2024) இடம்பெற்றது. கிடைக்கும் நிதியை உச்ச அளவில் பயன்படுத்தவேண்டும் என வலியுறுத்திய வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன், நிதி ஆணைக்குழுவின் தெளிவான வழிகாட்டல்களுக்கு அமைவாக திட்டங்களைத் தயாரிக்குமாறு

2025 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்படும் திட்டங்கள் ஒக்ரோபர் மாதத்துக்குள் முடிவுறுத்தப்படவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் வலியுறுத்தினார் Read More »

வடக்கு மாகாணத்தில் கல்விப்புலத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய இடமாற்றங்கள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள் வடமாகாண ஆளுநருடன் கலந்துரையாடல்

வடக்கு மாகாணத்தில் கல்விப்புலத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய இடமாற்றங்கள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை வெள்ளிக்கிழமை மாலை (27.12.2024) ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர். 2017ஆம் ஆண்டு, வடக்கு மாகாணத்தில் யாழ். மாவட்டம் தவிர்ந்த ஏனைய 4 மாவட்டங்களுக்கும் முதல் நியமனம் கிடைத்த ஆசிரியர்கள், யாழ். மாவட்டத்துக்கு இடமாற்றத்துக்கு விண்ணப்பித்துள்ள நிலையில் அந்த இடமாற்றங்களை நடைமுறைப்படுத்துவதற்கான விடயம் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் வடக்கு

வடக்கு மாகாணத்தில் கல்விப்புலத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய இடமாற்றங்கள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள் வடமாகாண ஆளுநருடன் கலந்துரையாடல் Read More »

புதுக்குடியிருப்பு பிரதேச வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களைச் சந்தித்தார்

புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினர்  வியாழக்கிழமை காலை (19.12.2024) கலந்துரையாடல் நடத்தினர். ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்ற வர்த்தக சங்கப் பிரதிநிதிகள், ஆளுநர் அவர்கள், முல்லைத்தீவு மாவட்டச் செயலராக கடந்த காலத்தில் பணியாற்றியமை நினைவுகூர்ந்தனர். மேலும், புதுக்குடியிருப்பு பிரதேச வர்த்தக சங்க கட்டடத்தின் எஞ்சிய வேலைகளை நிறைவுசெய்வதற்கு நிதி ஒதுக்கீடுகளைப் பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்ததுடன், பிரதேசத்தின் வேறு பல தேவைகள் தொடர்பிலும் ஆளுநருடன் கலந்துரையாடினர். வர்த்தக சங்கத்தினரின் கோரிக்கைகளை சாதகமாக அணுகிய ஆளுநர், விரைவில் புதுக்குடியிருப்புக்கு

புதுக்குடியிருப்பு பிரதேச வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களைச் சந்தித்தார் Read More »

இலங்கையின் பொதுநிதிக்கணக்காளர்களின் சங்கத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட (APFASL ) சிறந்த வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் விருது வழங்கும் விழா -2024

இலங்கையின் பொதுநிதிக் கணக்காளர்களின் சங்கத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட சிறந்த வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகளுக்கான விருது வழங்கும் நிகழ்வானது 02.12.2024 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 2 மணிக்கு கொழும்பு BMICH இன் B மண்டபத்தில் இடம்பெற்றது. 2023 ஆம் ஆண்டின் நிதிக்கணக்குகள் மற்றும் செயற்திறன் அறிக்கையினை அடிப்படையாகக் கொண்டு இப் போட்டியானது தேசத்தில் பொது நிதிகளின் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலுக்கு பங்களித்து, நிதி அறிக்கையிடலின் மிக உயர்ந்த தரத்தை நிலைநிறுத்துவதற்கு இலங்கையின் பொதுத்துறை நிறுவனங்களின் அர்ப்பணிப்புக்கான சான்றாக விளங்கும்

இலங்கையின் பொதுநிதிக்கணக்காளர்களின் சங்கத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட (APFASL ) சிறந்த வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் விருது வழங்கும் விழா -2024 Read More »

மாகாண மட்ட கணக்காய்வு முகாமைத்துவ குழு கூட்டம்

வடக்கு மாகாண அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களுக்கான 4 வது காலாண்டு கணக்காய்வு முகாமைத்துவ குழு கூட்டம் பிரதம செயலாளர் தலைமையில் 19.12.2024 ஆம் ஆண்டு காலை 10.00 மணிக்கு பிரதம செயலாளர் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. மேற்படி கூட்டத்தில் அமைச்சின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், தேசிய கணக்காய்வு அலுவலக உத்தியோகத்தர்கள், பிரதம கணக்காளர்கள், கணக்காளர்கள் மற்றும் மாகாண உள்ளக கணக்காய்வு உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

மாகாண மட்ட கணக்காய்வு முகாமைத்துவ குழு கூட்டம் Read More »