தென்னையை தாக்கும் வெண் ஈக்களை முகாமைத்துவம் செய்யும் முகமாக யாழ் மாவட்டத்தில் ஒட்டுண்ணி விடுவிப்பு
அண்மைக் காலத்தில் நிலவிய அதிக வெப்பநிலை காரணமாக தென்னைச் செய்கையில் வெண் ஈக்களின் (Aleurodics cocois) தாக்கம் பாரிய அளவில் அவதானிக்கப்பட்டிருந்தது. வெண் ஈயானது தென்னை மரங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் ஓர் சிறிய பூச்சி ஆகும். இது இலைகளின் சாறு உறிஞ்சுவதன் மூலம் மர வளர்ச்சி, தேங்காய் உற்பத்தியை பாதிக்கும் மற்றும் வைரஸ் நோய்களை பரப்பும். இதன் பாதிப்பு அறிகுறிகளாக இலைகளின் அடிப்பக்கத்தில் வெண் ஈக்கள் கூட்டமாக காணப்படுதல், இலைகள் மஞ்சளாக மாறுதல், ,உலர்தல், தென்னை மர […]