May 2026

எமது மாகாண இளைஞர் ஒருவர் இயற்கை திரவப்பசளைகள், தாவர பீடைநாசினிகள் மற்றும் பூச்சி விரட்டிகள் அறிமுகப்படுத்தியுள்ளமை மிகப்பெரிய சாதனையாகும். – கௌரவ ஆளுநர்

எல்லா வகையான விவசாய உற்பத்திப் பொருட்களிலும் இரசாயனங்கள் மற்றும் அசேதனப் பதார்த்தங்கள் கலந்து உலகளாவிய ரீதியில் அதன் விளைவான பாதிப்புக்கள் அதிகரித்துச் செல்லும் தற்போதைய சூழலில், எமது மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் விவசாயத் திணைக்களத்தின் பங்களிப்புடன் இயற்கை திரவப்பசளைகள், தாவர பீடைநாசினிகள் மற்றும் பூச்சி விரட்டிகள் அறிமுகப்படுத்தியுள்ளமை மிகப்பெரிய சாதனையாகும். வடக்கு மாகாண மக்கள் சார்பில் அவரைப் பாராட்டுவதுடன், அவரின் தொடர் முயற்சிகளுக்கு எமது மாகாண நிர்வாகம் முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கும் என வடக்கு மாகாண […]

எமது மாகாண இளைஞர் ஒருவர் இயற்கை திரவப்பசளைகள், தாவர பீடைநாசினிகள் மற்றும் பூச்சி விரட்டிகள் அறிமுகப்படுத்தியுள்ளமை மிகப்பெரிய சாதனையாகும். – கௌரவ ஆளுநர் Read More »

விவசாய இரசாயன விற்பனையாளர்களுக்கான விவசாய இரசாயன விற்பனை நிலையங்களை ஒழுங்குபடுத்துவதற்கான கலந்துரையாடல்

விவசாய இரசாயன விற்பனை நிலைய உரிமையாளர்களுக்கான விவசாய இரசாயன விற்பனை நிலையங்களை ஒழுங்குபடுத்துவதற்கான கலந்துரையாடல்  யாழ் மாவட்ட விவசாயப்பயிற்சி நிலையத்தில் 13.05.2026 ஆம் திகதி யாழ் மாவட்ட பிரதி விவசாயப்பணிப்பாளர் திருமதி.அஞ்சனாதேவி சிறிரங்கன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் விருந்தினர்களாக வட மாகாண விவசாயப்பணிப்பாளர் திருமதி.சுகந்தினி செந்தில்குமரன் அவர்கள் மற்றும் வடமாகாண விவசாயத்திணைக்களத்தின் மேலதிக மாகாண விவசாயப்பணிப்பாளர் திரு.தெட்சணாமூர்த்தி யோகேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் தலைமை உரையாற்றிய யாழ் மாவட்ட பிரதி விவசாயப்பணிப்பாளர் அவர்கள் யாழ் மாவட்டத்தில் காணப்படும்

விவசாய இரசாயன விற்பனையாளர்களுக்கான விவசாய இரசாயன விற்பனை நிலையங்களை ஒழுங்குபடுத்துவதற்கான கலந்துரையாடல் Read More »

கோணாவில் பிரதேசத்தில் கம்பு மற்றும் இறுங்கு அறுவடை விழா

கிளிநொச்சி மாவட்டத்தின் அக்கராயன் குளம் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் கோணாவில் எனும் இடத்தில் ம.விமலநாதன், க.பிரதீபன் என்பவர்களின் வயல் துண்டத்தில் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியத்தில் ‘சிறுதானிய செய்கையை ஊக்குவிக்கும் செயற்திட்டம்’ எனும் தொனிப்பொருளில் கம்பு மற்றும் இறுங்கு அறுவடை விழா 12.05.2026. அன்று காலை 10.00 மணியளவில் விவசாயப் போதனாசிரியர் திருமதி.கிருபாகரன்.சுதர்சினி தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு.எஸ். முரளிதரன், அரசாங்க அதிபர் கிளிநொச்சி அவர்களும், திரு.க.இராஜேஸ்கண்ணா, மேலதிக பணிப்பாளர் (ஆராய்ச்சி), திருமதி.சோ.விஜயதாசன்

கோணாவில் பிரதேசத்தில் கம்பு மற்றும் இறுங்கு அறுவடை விழா Read More »

கௌரவ ஆளுநர் விடுத்த கோரிக்கைக்கு அமைய, கமநல சேவைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் வடக்கிற்கு விஜயம்

விவசாயத்துறையை மேம்படுத்துவதில் மத்தி, மாகாணம் என்ற நிர்வாக வேறுபாடுகளின்றி நாம் அனைவரும் பொதுமக்களின் நலன் கருதி ஒரே திசையில் பயணிக்க வேண்டும். வடக்கின் விவசாயிகளும், மாகாண அதிகாரிகளும் எதிர்கொள்ளும் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண கமநல சேவைகள் திணைக்களம் வழங்கியுள்ள நேர்மறையான இணக்கப்பாடுகள், எமது மாகாண விவசாயிகளுக்குப் புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, கமநல சேவைகள்

கௌரவ ஆளுநர் விடுத்த கோரிக்கைக்கு அமைய, கமநல சேவைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் வடக்கிற்கு விஜயம் Read More »

ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் அமைக்கப்பட்ட புதிய சமூகப் பராமரிப்பு நிலையம் கௌரவ ஆளுநரால் வைபவரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட மக்கள் தங்களின் தேவைகளுக்காக எங்களை நாடி வரத் தேவையில்லை. நாமே அவர்களை நாடிச் சென்று சேவையாற்ற வேண்டும். அப்படி அவர்கள் தங்களது தேவைகளுக்காக அரச அலுவலகங்களுக்கு வந்தாலும், ஒரு தடவை மட்டுமே வர வேண்டும். அவர்கள் மீண்டும் மீண்டும் அலைக்கழிக்கப்படாதவாறு அவர்களின் தேவைகளை நாம் முழுமையாக நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும், என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் அமைக்கப்பட்டுள்ள சமூகப் பராமரிப்பு நிலையத்தை

ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் அமைக்கப்பட்ட புதிய சமூகப் பராமரிப்பு நிலையம் கௌரவ ஆளுநரால் வைபவரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது. Read More »

கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றது.

வட மாகாணத்தின் விவசாயம், கடற்றொழில், காணி உரிமை மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பின்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மத்தியூ டக்வொர்த் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (13.05.2026) புதன்கிழமை காலை கிளிநொச்சி, இயக்கச்சியில் அமைந்துள்ள ‘றீச்சா பார்க்’ வளாகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் வட மாகாணத்தின் சமகால நிலவரங்கள், விவசாய மற்றும்

கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றது. Read More »

வறுமை நிலையிலுள்ள விவசாயிகளின் நலனை உறுதிப்படுத்தும் வகையில் நெற் செய்கைக்கான காணிப் பங்கீடுகள் அமைய வேண்டும் – கௌரவ ஆளுநர்

சிறுபோக நெற்செய்கைக்காக அரச காணிகளைப் பங்கீடு செய்யும் போது, வறுமை நிலையில் உள்ள விவசாயிகளும் பயன்பெறும் வகையிலேயே அப்பங்கீடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார். மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (12.05.2026) செவ்வாய்க்கிழமை காலை மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. மன்னார் மாவட்டச் செயலாளர் கே.கனகேஸ்வரன் அவர்களின் வரவேற்புரையுடன் ஆரம்பமான இக்கூட்டத்துக்கு, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், கூட்டுறவுத்துறை கௌரவ பிரதி அமைச்சருமான உபாலி

வறுமை நிலையிலுள்ள விவசாயிகளின் நலனை உறுதிப்படுத்தும் வகையில் நெற் செய்கைக்கான காணிப் பங்கீடுகள் அமைய வேண்டும் – கௌரவ ஆளுநர் Read More »

சூழல் நேய பன்முக விவசாயம் மற்றும் நெல் அறுவடை வயல் விழா

சூழல் நேய பன்முக விவசாயம் மற்றும் நெல் அறுவடை வயல்விழா 10.04.2026ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் உயிலங்குளத்தில் அமைந்துள்ள மன்னார் மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் பிரதி விவசாய பணிப்பாளர் திருமதி.பி.ரமணேந்திரன் அவர்களின் தலைமையின் கீழ் சிறப்பாக பாரம்பரிய விவசாய முறைகளுடன் நவீன மற்றும் நீடித்த தொழில் நுட்பங்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட நெல் அறுவடை வயல் விழா இடம்பெற்றது குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்டத்தின் மாவட்டச் செயலாளர் திரு.க.கனகேஸ்வரன், சிறப்பு விருந்தினராக

சூழல் நேய பன்முக விவசாயம் மற்றும் நெல் அறுவடை வயல் விழா Read More »

கலப்பு பயிர்ச்செய்கை வயல்விழா – கல்மடுநகர், கிளிநொச்சி

கிளிநொச்சி மாவட்டத்தில் தர்மபுரம் கல்மடுநகர் பிரதேசத்தில் தொழில்நுட்ப உத்தியோகத்தர் திருமதி.கி.சரண்யா அவர்களின் ஒழுங்கமைப்பில் சி.தங்கராசா என்பவரின் வயல் துண்டத்தில் திருமதி.இ.மாலினி (பா.உ- பழப்பயிர்) தலைமையில் டித்வா அழிவின் பின்னராக மரக்கறிச்செய்கையின் கலப்பு பயிர்ச்செய்கையின் வயல்விழா 08.05.2026 அன்று இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட பிரதி விவசாயப்பணிப்பாளர் திருமதி. சோ.விஜயதாசன் அவர்களும், பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாயப்போதனாசிரியர்கள்,, கமக்கார அமைப்பு உறுப்பினர்கள் மற்றும் விவசாயிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர். குறித்த நிகழ்வில் மரக்கறி பயிர்களான

கலப்பு பயிர்ச்செய்கை வயல்விழா – கல்மடுநகர், கிளிநொச்சி Read More »

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் அபிவிருத்திக்கும் சுபீட்சத்துக்குமான மக்கள் மன்றத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் அபிவிருத்திக்கும் சுபீட்சத்துக்குமான மக்கள் மன்றத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று ஆளுநர் செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (11.05.2026) மாலை நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில், வட மாகாண மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு சமகாலப் பிரச்சினைகள் மற்றும் மாகாணத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பில் குறித்த அமைப்பால் பல முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு விரிவாக ஆராயப்பட்டன. இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்கள் மற்றும் சமய நிறுவனங்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவித்தல் தொடர்பில் ஆராயப்பட்டது.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் அபிவிருத்திக்கும் சுபீட்சத்துக்குமான மக்கள் மன்றத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் Read More »