யாழ். திருவள்ளுவர் கலாசார மண்டபத்தை நிர்வகிப்பதற்கு உருவாக்கப்படவுள்ள நம்பிக்கை நிதியப் பொறுப்புச் சபை தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல் ஆளுநரின் பங்கேற்புடன் நடைபெற்றது.
யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தை எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்கு நிர்வகிப்பதற்காக உருவாக்கப்படவுள்ள நம்பிக்கை நிதியப் பொறுப்புச் சபை தொடர்பான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் பங்கேற்புடன் இன்று திங்கட்கிழமை (25.05.2026) நடைபெற்றது. புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கௌரவ கலாநிதி ஹினிதும சுனில் செனெவி மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மேன்மைதங்கிய சந்தோஷ; ஜா ஆகியோர் இந்த உயர்மட்டக் கலந்துரையாடலுக்குத் தலைமை தாங்கினர். யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார […]
