காலநிலையை வென்று விளைச்சலைப் பெருக்குவோம் எனும் தொனிப்பொருளில் வயல் விழா கிளிநொச்சி மாவட்ட விவசாய பயிற்சி நிலையம் வட்டக்கச்சியில் 20.05.2026 புதன்கிழமை அன்று கிளிநொச்சி மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் திருமதி சோ. திருமதி.சோ.விஜயதாசன் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு.ச.சிவஸ்ரீ, சிறப்பு விருந்தினராக தெ.யோகேஸ்வரன், மேலதிக மாகாண விவசாயப் பணிப்பாளர் வடமாகாணம், மேலதிக விவசாயப்பணிப்பாளர்(ஆராய்ச்சி) எஸ்.இராஜேஸ்கண்ணா, திரு.பா.தேவரதன், கமநல பிரதி ஆணையாளர், கமநல அபிவிருத்தி திணைக்களம், கிளிநொச்சி, மாவட்ட பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் கே.பிரகாஸ், பிரதி பணிப்பாளர், மாவட்ட கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களம், பிரதி பணிப்பாளர், விதை மற்றும் நடுகை பொருள் அபிவிருத்தி நிலையம் கிளிநொச்சி, பிரதி பணிப்பாளர், நெல் ஆராய்ச்சி நிலையம் பரந்தன,; விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாயிகள் பரந்தன் விவசாயத் கல்லூரி மாணவர்கள், பாடசாலை மாணவர்கள், என பலர் கலந்து கொண்டனர்.
இவ்வயல் விழாவில்
- அன்னாசிச்செய்கை.
- தேனீவளர்ப்பு மற்றும் இயற்கை விவசாயம்.
- விவசாய இயந்திரகண்காட்சி.
- கூட்டெரு தயாரிப்புக்கள்.
- வீட்டுத் தோட்டம் மற்றும் உயிர் உர உற்பத்தி.
- நீர்பாசனம் மற்றும் மண் பரிசோதனை.
- காளான் உற்பத்தி.
- பெறுமதி சேர் உணவு உற்பத்திகள்.
- சிறுதானிய உணவுகள் மற்றும் ஆரோக்கிய உணவுக்காட்சி.
- பயிர் நோய் மற்றும் பூச்சி.
- நெல்மற்றும் பயிர்ச் செய்கை புதிய முறைகள்.
- சேமிப்பு தொழில்நுட்பங்கள்.
- கறுவா பட்டை உரிக்கும் தொழில்நுட்பங்கள் செய்முறை விளக்கம்.
- வெங்காய உண்மை விதை உற்பத்தி செய்கை விளக்கம்.
- சூரிய சக்தி நீர் இறைக்கும் அலகு.
- நேரடி களப்பயிற்சி.
- பொருட்கள் மற்றும் உபகரணங்கள் கண்காட்சி மற்றும் விற்பனை என்பன இடம்பெற்றன.








