May 2026

எமது மாகாணத்தில் ‘பின்தங்கிய கிராமம்’ என்ற ஒன்று இருக்கவே கூடாது. இவ் இலக்கினை அடைய பல தரப்புக்களின் ஒத்துழைப்புக்களும் தேவை – கௌரவ ஆளுநர்

வடக்கு மாகாண நிர்வாகம் மற்றும் மாகாணத்தின் திட்டமிட்ட அபிவிருத்திச் செயற்பாடுகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தின் பங்களிப்பை எவ்வாறு பெற்றுக்கொள்ளலாம் என்பது தொடர்பான ஆரம்பக் கட்டக் கலந்துரையாடல், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று (05.05.2026) செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. கலைப்பீடாதிபதி பேராசிரியர் நா.பிரதீபராஜா தனது தொடக்கவுரையில், வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு முழுமையான பங்களிப்பை வழங்குவதற்கு யாழ். பல்கலைக்கழகக் கலைப்பீடம் தயாராகவே இருப்பதாகக் குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து உரையாற்றிய வடக்கு […]

எமது மாகாணத்தில் ‘பின்தங்கிய கிராமம்’ என்ற ஒன்று இருக்கவே கூடாது. இவ் இலக்கினை அடைய பல தரப்புக்களின் ஒத்துழைப்புக்களும் தேவை – கௌரவ ஆளுநர் Read More »

கௌரவ ஆளுநர் தலைமையில், கூட்டுறவுப் பணியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், வடக்கு மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழு மற்றும் வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று (04.05.2026) திங்கட்கிழமை மாலை நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் கூட்டுறவுப் பணியாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. குறிப்பாக, பணியாளர்களுடன் தொடர்புடைய நிர்வாக விடயங்கள் மற்றும் கோரிக்கைகளை எவ்வித தாமதமுமின்றி விரைவுபடுத்துதல் தொடர்பில் ஆளுநரால் அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. அத்துடன், பணிகளை மேலும்

கௌரவ ஆளுநர் தலைமையில், கூட்டுறவுப் பணியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. Read More »

வடக்கு மாகாணம் ‘மெரிட்’ அடிப்படையிலான பல்கலைக்கழக நுழைவு எண்ணிக்கையை உயர்த்துவதற்குத் தீவிர கவனம் செலுத்த வேண்டும் – வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார்.

அனைத்துப் பரீட்சார்த்திகளிலிருந்தும் பல்கலைக்கழக நுழைவுச் சதவீதத்தில் வடக்கு மாகாணம் தேசிய ரீதியில் பெற்றுள்ள முதலிடத்தைத் தக்கவைப்பதற்கு அப்பால், அந்த அடைவு மட்டத்தை மேலும் அதிகரிக்க வேண்டும் எனவும், குறிப்பாக ‘மெரிட்’ அடிப்படையிலான பல்கலைக்கழக நுழைவு எண்ணிக்கையை உயர்த்துவதற்குத் தீவிர கவனம் செலுத்த வேண்டும் எனவும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார். வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் மாதாந்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், கௌரவ ஆளுநர் அவர்களின்

வடக்கு மாகாணம் ‘மெரிட்’ அடிப்படையிலான பல்கலைக்கழக நுழைவு எண்ணிக்கையை உயர்த்துவதற்குத் தீவிர கவனம் செலுத்த வேண்டும் – வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார். Read More »