கிளிநொச்சி மாவட்டத்தின் அக்கராயன் குளம் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் கோணாவில் எனும் இடத்தில் ம.விமலநாதன், க.பிரதீபன் என்பவர்களின் வயல் துண்டத்தில் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியத்தில் ‘சிறுதானிய செய்கையை ஊக்குவிக்கும் செயற்திட்டம்’ எனும் தொனிப்பொருளில் கம்பு மற்றும் இறுங்கு அறுவடை விழா 12.05.2026. அன்று காலை 10.00 மணியளவில் விவசாயப் போதனாசிரியர் திருமதி.கிருபாகரன்.சுதர்சினி தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு.எஸ். முரளிதரன், அரசாங்க அதிபர் கிளிநொச்சி அவர்களும், திரு.க.இராஜேஸ்கண்ணா, மேலதிக பணிப்பாளர் (ஆராய்ச்சி), திருமதி.சோ.விஜயதாசன் பிரதி விவசாயப்பணிப்பாளர், பாடவிதான உத்தியோகத்தர்கள், கிராம அலுவலர், அபிவிருத்தி உத்தியோகத்தர், கிளி கோணாவில் காந்திகிராம பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், மாதர்கிராம அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள், விவசாயப்போதனாசிரியர்கள், விவசாயிகள், மற்றும் சமூகநலன் விரும்பிகள் எனப் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இப் பயிர்ச் செய்கையை பறவைகளின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பதற்கு வலை பெற்றுத்தருமாறும் விவசாயினால் கூறப்பட்டது. களப்பார்வையுடன் குறித்த வயல் விழாவானது சிறப்பாக நடைபெற்றிருந்தமை சிறப்பம்சமாகும்.







