ஆளுநர்

வவுனியா வடக்கு வலய கல்வி முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல்

வவுனியா வடக்கு வலய கல்வி முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் வவுனியா வடக்கு வலயக் கல்விப் பணிமனையில் உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், அதிபர்களுடன் நேற்று வெள்ளிக்கிழமை (01.08.2025) நடைபெற்றது. வவுனியா வடக்கு வலயக் கல்விப் பணிப்பாளரால், வலயம் தொடர்பான அடிப்படைத் தரவுகள் முன்வைக்கப்பட்டன. அத்துடன் தமது வலயத்தின் பிரதான சவாலாக ஆளணி வெற்றிடம் அதிலும் ஆசிரிய வெற்றிடம் அதிகமாக உள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டது. வடக்கின் ஏனைய வலயங்களுடன் […]

வவுனியா வடக்கு வலய கல்வி முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல் Read More »

எல்லைக் கிராமங்களில் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்து செல்லுகின்ற நிலையில் அவர்களை நிரந்தரமாக அங்கு குடியமர்த்துவதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பில் ஆராயும் களப்பயணம்

வவுனியா வடக்கு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட எல்லைக் கிராமங்களில் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்து செல்லுகின்ற நிலையில் அவர்களை நிரந்தரமாக அங்கு குடியமர்த்துவதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பில் ஆராயும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் ஒழுங்குபடுத்தப்பட்ட களப்பயணம் இன்று வெள்ளிக்கிழமை (01.08.2025) இடம்பெற்றது. முதலில் காஞ்சிரமோட்டைக்குச் சென்ற ஆளுநர் தலைமையிலான குழுவினர் அங்கு தற்போது வசிக்கும் 23 குடும்பங்களையும் சந்தித்தனர். அந்தப் பகுதிமக்கள், யானைவேலி அமைத்துத்தருமாறு, கிணறுகளை புனரமைத்துத்தருமாறும் கோரினர். கடந்த காலங்களில் வழங்கப்பட்ட

எல்லைக் கிராமங்களில் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்து செல்லுகின்ற நிலையில் அவர்களை நிரந்தரமாக அங்கு குடியமர்த்துவதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பில் ஆராயும் களப்பயணம் Read More »

மாங்குளம் முதலீட்டு வலயத்தை விவசாய முதலீட்டு வலயமாக கட்டியெழுப்புவதன் ஊடாக நிலையான வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் பிராந்திய செழிப்பையும் ஏற்படுத்த முடியும். – கௌரவ ஆளுநர்

மாங்குளம் முதலீட்டு வலயத்தை விவசாய முதலீட்டு வலயமாக ஐ.நா.வின் தொழில் மேம்பாட்டு நிறுவனத்தின் (யுனிடோ) உதவியுடன் கட்டியெழுப்புவது தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் சமூக உட்கட்டமைப்பு கௌரவ அமைச்சர் சமந்த வித்யாரத்ன, கடற்றொழில் நீரியல் மற்றும் கடல்வளங்கள் கௌரவ அமைச்சர் இ.சந்திரசேகர் ஆகியோரின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை மாலை (31.07.2025) நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலின் ஆரம்பத்தில் அனைவரையும் வரவேற்ற ஆளுநர் தனது உரையில், வடக்கு

மாங்குளம் முதலீட்டு வலயத்தை விவசாய முதலீட்டு வலயமாக கட்டியெழுப்புவதன் ஊடாக நிலையான வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் பிராந்திய செழிப்பையும் ஏற்படுத்த முடியும். – கௌரவ ஆளுநர் Read More »

சாவகச்சேரி – பருத்தித்துறை பிரதான வீதியில் 10 மீற்றர் நீளமான வீதி இன்னமும் புனரமைக்கப்படாத நிலையில் கௌரவ ஆளுநர் நேரடியாகச் சென்று பார்வையிட்டார்.

சாவகச்சேரியிலிருந்து பருத்தித்துறை நோக்கிச் செல்லும் பிரதான வீதியில் மதகு அமைப்பது தொடர்பாக எழுந்த சர்ச்சையால் 10 மீற்றர் நீளமான வீதி இன்னமும் புனரமைக்கப்படாத நிலையில் உள்ளமை தொடர்பில் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருந்த நிலையில் அதனை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று வியாழக்கிழமை காலை (31.07.2025) நேரடியாகச் சென்று பார்வையிட்டார். இதன்போது வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், சாவகச்சேரி பிரதேச செயலாளர் மற்றும் சாவகச்சேரி நகர சபையின் உபதவிசாளர் ஆகியோரும் அங்கு

சாவகச்சேரி – பருத்தித்துறை பிரதான வீதியில் 10 மீற்றர் நீளமான வீதி இன்னமும் புனரமைக்கப்படாத நிலையில் கௌரவ ஆளுநர் நேரடியாகச் சென்று பார்வையிட்டார். Read More »

சாவகச்சேரி சமுதாய அடிப்படை வங்கிக்குரிய காணி தொடர்பாக நீண்டகாலம் நிலவிவந்த இழுபறி நிலையில் கௌரவ ஆளுநர் நேரடியாகச் சென்று கலந்துரையாடல் நடத்தினார்.

சாவகச்சேரியில் சமுதாய அடிப்படை வங்கிக்குரிய காணி தொடர்பாக நீண்டகாலம் இழுபறி நிலவிவந்த நிலையில் அது தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று வியாழக்கிழமை காலை (31.07.2025) நேரடியாகச் சென்று தொடர்புடைய தரப்புக்களுடன் கலந்துரையாடல் நடத்தினார். சாவகச்சேரி நகர சபையின் சிறுவர் பூங்காவில் ஒரு பகுதிக் காணியை சமுதாய அடிப்படை வங்கிக்கு வழங்குவதாக கூறப்பட்டிருந்த நிலையில் அந்தக் காணியை ஆளுநர் முதலில் நேரில் சென்று பார்வையிட்டிருந்தார். அந்தக் காணி சிறுவர் பூங்காவின் தொடர் அபிவிருத்திக்குத்

சாவகச்சேரி சமுதாய அடிப்படை வங்கிக்குரிய காணி தொடர்பாக நீண்டகாலம் நிலவிவந்த இழுபறி நிலையில் கௌரவ ஆளுநர் நேரடியாகச் சென்று கலந்துரையாடல் நடத்தினார். Read More »

வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் ஒழுங்கமைப்பில் வீதிப் பாதுகாப்புத் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு

இப்போது நடைபெறும் விபத்துக்களைப் பார்க்கும்போது, பல்வேறு எதிர்பார்ப்புக்களுடன் பயணிக்கும் ஏனையோரின் உயிரிலும் கவனமில்லை. தமது உயிரிலும் கவனமில்லை. இதை அறியாமை என்று சொல்வதா அல்லது கவனக்குறைவு என்று சொல்வதா எனத் தெரியவில்லை. இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் ஒழுங்கமைப்பில் வீதிப் பாதுகாப்புத் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு யாழ்ப்பாணப் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று புதன்கிழமை காலை (30.07.2025) அதிகார சபையின்

வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் ஒழுங்கமைப்பில் வீதிப் பாதுகாப்புத் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு Read More »

இலங்கை தேசிய ஏற்றுமதியாளர் சங்கம், றொட்டரி – யாழ்ப்பாணத்துடன் இணைந்து வட மாகாணத்தில் ஏற்றுமதிக்குத் தயாரான உற்பத்தியாளர்களை மேம்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்

ஏற்றுமதியை அதிகரிக்காமல் வருமானத்தை உயர்த்த முடியாது. ஏற்றுமதியை அதிகரிக்கவேண்டுமானால், வடக்கு மாகாணத்தின் மிகச்சிறந்த வளமாக உள்ள விவசாயம் மற்றும் கடற்றொழிலின் உற்பத்திப் பொருட்களை பெறுமதிசேர் உற்பத்திப் பொருட்களாக மாற்றும் தொழிற்சாலைகள் உருவாக்கப்படவேண்டும். தொழிற்சாலைகள் உருவாக்கப்படுவதன் ஊடாக எமது வேலைவாய்ப்பு பிரச்சினையையும் தீர்க்கக் கூடியதாக இருக்கும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். இலங்கை தேசிய ஏற்றுமதியாளர் சங்கம், றொட்டரி – யாழ்ப்பாணத்துடன் இணைந்து வட மாகாணத்தில் ஏற்றுமதிக்குத் தயாரான உற்பத்தியாளர்களை மேம்படுத்துவது தொடர்பான

இலங்கை தேசிய ஏற்றுமதியாளர் சங்கம், றொட்டரி – யாழ்ப்பாணத்துடன் இணைந்து வட மாகாணத்தில் ஏற்றுமதிக்குத் தயாரான உற்பத்தியாளர்களை மேம்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் Read More »

பிரிட்டனைச் சேர்ந்த நிருத்திய சங்கீத கலைக்கூடத்தில் கல்விகற்கும் மாணவர்களின் கலை நிகழ்வுகளை உள்ளடக்கிய ‘சிவமயம் 2025’ நிகழ்வு

புலம்பெயர்ந்து சென்றாலும் எமது பாரம்பரிய கலைகளை அழியவிடாது கற்பித்து அடுத்த சந்ததிக்கு கடத்தும் உங்கள் முயற்சிகளை நான் பாராட்டி வாழ்த்துகின்றேன் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். பிரிட்டனைச் சேர்ந்த நிருத்திய சங்கீத கலைக்கூடத்தில் கல்விகற்கும் மாணவர்களின் கலை நிகழ்வுகளை உள்ளடக்கிய ‘சிவமயம் 2025’ நிகழ்வு, ஒட்டுசுட்டான் தான்தோன்றி ஈஸ்வரர் ஆலய முகாமைத்துவ சபையினரின் ஒழுங்குபடுத்தலில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை (29.07.2025) ஆலய வளாகத்தில் நடைபெற்றது. அதன் நிறுவுனர் திருமதி ஸ்ரீமதி ராதிகா

பிரிட்டனைச் சேர்ந்த நிருத்திய சங்கீத கலைக்கூடத்தில் கல்விகற்கும் மாணவர்களின் கலை நிகழ்வுகளை உள்ளடக்கிய ‘சிவமயம் 2025’ நிகழ்வு Read More »

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர், இணைத்தலைவர் ஆகியோரின் பங்கேற்புடன் இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கடற்றொழில் நீரியல் மற்றும் கடல்வளங்கள் கௌரவ அமைச்சரும், ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான இ.சந்திரசேகர், வடக்கு மாகாண கௌரவ ஆளுநரும் இணைத்தலைவருமான நா.வேதநாயகன் ஆகியோரின் பங்கேற்புடன் இன்று செவ்வாய்க்கிழமை (29.07.2025) மாவட்டச் செயலக கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்டச் செயலர் சு.முரளிதரனின் வரவேற்புரையுடன் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் ஆரம்பமானது. தொடர்ந்து ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் ஆரம்ப உரையைத் தொடர்ந்து, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட திணைக்களங்களின் கோரிக்கை, முதலீட்டாளர்களின் கோரிக்கைகளை என்பன ஆராயப்பட்டு

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர், இணைத்தலைவர் ஆகியோரின் பங்கேற்புடன் இடம்பெற்றது. Read More »

கௌரவ ஆளுநருக்கும், இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் சிறிவோல்ட்டுக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை (29.07.2025) இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில், வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் அறிவதே தமது இந்தப் பயணத்தின் நோக்கம் என தூதுவர் குறிப்பிட்டார். வடக்கு மாகாண ஆளுநர் அவர்களால், வடக்கு மாகாணத்திலுள்ள சில கிராமங்கள் இன்னமும் பின்தங்கியுள்ள நிலையிலேயே உள்ளன என்றும் அங்கு வீதிக் கட்டுமானங்கள் கூட இல்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டது. அத்துடன்

கௌரவ ஆளுநருக்கும், இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது. Read More »